Header Ads



முஸ்லிம் நாட்டு தூதுவர்களுடன், முஸ்லிம் அரசியல்வாதிகள் சந்திப்பு - ஐ.நா. வுக்கும் விசயம் சென்றது


இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தாம­த­மில்­லாது தீர்­வுகள் பெற்­றுக்­கொ­டுக்கும் படியும், அவர்­க­ளது பாது­காப்­பினை உறு­தி­செய்யும் படியும், முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான தவ­றான பிர­சா­ரங்­களைத் தடை­செய்யும் படியும் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆகி­யோ­ருக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்­ப­தாக இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் நாடு­களின் தூது­வர்கள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் உறு­தி­ய­ளித்­தனர்.

இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் நாடு­களின் தூது­வர்­க­ளுக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று நேற்­றுக்­காலை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் இல்­லத்தில் நடை­பெற்­றது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாட்டின் அர­சியல் நிலைமை, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பேரி­ன­வா­திகள் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கைகள், தவ­றான பிர­சா­ரங்கள் என்­ப­வற்றை விப­ரித்­தனர்.

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை நிறுத்து வதற்கும், முஸ்­லிம்­களின் பாது­காப்­பினை உறுதி செய்­வ­தற்கும் ஒத்­து­ழைக்­கு­மாறு முஸ்லிம் நாடு­களின் தூது­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­தனர்.

இலங்கை முஸ்­லிம்­களின் தற்­கால நிலை­மைகள் தொடர்பில் கேட்­ட­றிந்­து­கொண்ட முஸ்லிம் நாடு­களின் தூது­வர்கள் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை தாம­த­மில்­லாது தீர்த்து வைக்­கும்­படி ஜனா­தி­ப­தி­யையும், பிர­த­ம­ரையும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரையும் கோரு­வ­தாகத் தெரி­வித்­தனர்.

முஸ்­லிம்­களின் பாது­காப்­பினை உறுதி செய்­வ­தற்கும், முஸ்­லிம்கள் தொடர்­பான தவ­றான பிர­சா­ரங்­களை நிறுத்­து­வ­தற்கும் அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்­ப­தா­கவும் உறு­தி­ய­ளித்­தார்கள்.

ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆகி­யோரை நேரில் சந்­தித்து இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தா­கவும் கூறி­னார்கள்.

இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சந்­திப்பில் அமைச்சர் கபீர் ஹாசீம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரிசாத் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம், பைசல் காசிம், பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி, முஜிபுர் ரஹ்மான், அமீர் அலி, காதர் மஸ்தான், எம்.ஐ.எம்.மன்சூர், எஸ்.எம்.எம். இஸ்மாயில், அலி சாஹிர் மௌலானா ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.

3 comments:

  1. இவ்வாறான நடவடிக்கைகள்,பாராட்டத்தக்க விடயம்.இன்னும் இன்னும் நம் உரிமைகளை ஜனநாயக வழியில் வென்ரெடுப்போம்.

    ReplyDelete
  2. நீங்கள் இப்போதுதான் இலங்கை முஸ்லீமகளின் தலைமைத்துவத்தை உண்மையாகக் கையில் எடுத்துள்ளீர்கள் தலைவர்களே.

    பாராட்டுக்கள் தலைவர்களே.

    தொடர்ந்தம் ஒற்றுமையாகப் பயணியுங்கள் சமூகத்தின விடுதலைக்காக.

    ReplyDelete
  3. சிறப்பான முயற்சி, மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.