Header Ads



அக்குறணை ஜம்இய்யதுல் உலமா, ஜமாஅத்தாருக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அல்லாஹ்வின் உதவியையும், அவனின் அருளையும் நாம் பெற்று எமது தாய் நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் எமது அனைத்து விடயங்களையும் புனித இஸ்லாமிய ஷரீஆ கூறும் போதனைகளுக்கு கட்டுப்பட்டதாக அமைத்துக் கொள்வது அவசியமாகும். எம்மில் சிலரிடம் காணப்படும் ஆடம்பரம், வீண் விரையம், ஷரீஆவின் சட்ட ஒழுங்குகளுக்கு கட்டுப்படாமை, நாட்டுச் சட்டத்தை மதிக்காமை பேன்றவற்றால் எமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலை தொடருமாயின் எமது எதிர்காலம் மேலும் சோதனை நிறைந்ததாக மாறிவிடும்.
#எந்தச்சமூகத்தாரும் (#தங்களின்_பிழைகளை_திருத்தி) #தமது_நடைமுறையை_மாற்றிக்கொள்ளாதவரை_நிச்சயமாக_அல்லாஹ்வும்_அவர்களின்_நிலைமையை_மாற்றுவதில்லை. (அல்குர்ஆன் 8:53)

எம்மில் சிலரிடம் காணப்படும் வீண்விரையமான மற்றும், ஆடம்பரமான செயற்பாடுகள் பிற சமூகத்தார் எம்மீது பொறாமை கொள்ளவும், காழ்புணர்வு கொள்ளவும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

எனவே பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றி பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு ஜமாஅத்தார்களில் உள்ள ஆண், பெண் இரு சாராரையும்; கேட்டுக் கொள்கின்றோம்.

01- நிகாஹ் வைபவங்கள் உட்பட ஏனைய அனைத்துவகை வைபவங்களையும் முடிந்தவரை தமது வீடுகளிலேயே நடாத்திக் கொள்ளல்.

02- திருமணத்தின் பின் வலீமா விருந்து ஒன்று மட்டுமே சுன்னத்தான விருந்தாக இருப்பதால் அதனுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளல்

03 வலீமா விருந்து, ஹஜ் சாப்பாடு, அகீகா சாப்பாடு, புதிய வீட்டுச் சாப்பாடு, Get-together சாப்பாடு ஆகிய விருந்துகளையும் ஆடம்பரமோ வீண்விரையமோ இல்லாத விதத்தில் அமைத்துக்கொள்ளல்.

04- மார்க்கத்தில் இல்லாத பிறந்த நாள் கொண்டாட்டங்கள், திருமண விருந்துகள், (Wedding. Home Coming விருந்துகள்) திருமணத்திற்கு முன்னும், பின்னும் பல்வேறு பெயர்களால் வழங்கும் விருந்துகள், பெட்டி கொண்டு செல்லல், நாற்பது சாப்பாடு போன்ற அனைத்தையும் தவிர்த்துக் கொள்ளல்.

05- தவிர்க்க முடியாத காரணங்களால் வலீமா விருந்தை திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்ய நேரிட்டால் பின்வரும் ஒழுங்குகளை கடைபிடித்தல்.

🗣 அக்குறணைக்குள் உள்ள திருமண மண்டபம் ஒன்றை தெரிவு செய்தல். (அக்குறணைக்கு வெளியில் செல்வதை முற்றாக தவிர்த்தல்)

🗣 அழைக்கப்படுவோரின் எண்ணிக்கையை முடிந்தவரை குறைத்து 150 சஹனை தாண்டாமல் அமைத்துக் கொள்ளல்.

🗣 வாகன நெரிசலை குறைப்பதற்காகவும, பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மண்டபத்திற்கு வருவோர் தனி வாகனங்களில் வருவதை தவிர்த்துக் கொள்ளல்.

🗣 பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளல்.

#இப்படிக்கு
#செயலாளர்
#அக்குறணை_ஜம்இய்யதுல்_உலமா

8 comments:

  1. after all well done.Very good idea. Do all weddings home and simple

    ReplyDelete
  2. Ithu akkurunaikku mattum porunthaathu...all r muslims...

    ReplyDelete
  3. what meaning GET TOGETHER sappadu........western & kafir practice. no need for us this new things.....

    ReplyDelete
  4. முஸ்லிம்களின் மிகவும் ஆடம்பர வாழ்க்கையில் மாற்றம் ஏட்பட வேண்டும் .குறிப்பாக முஸ்லீம் அரசியல் தலைமைகளும் ஏனைய சமூக தலைமைகளும் எளிமையான வாழ்க்கைக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் .தலைமைகள் எளிமையாக வாழும்போதுதான் மக்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் ஏனைய சமூகத்தவர்களும் மதிப்பார்கள் ..இதட்கான உதாரணங்களை நபியவர்களின் வாழ்விலும் ஏனைய கலீபாக்களின் வாழ்விலும் நாம் கண்டு கொள்ள முடியும்

    ReplyDelete
  5. Akurana jammiyathul ulama first of fall obey to acju.
    Akurana rich people not to follow this advice.they are acting like aragend.they dont obey to anybody.

    ReplyDelete
  6. A great piece of advice which have been repeatedly said by manu ulemas and whuch we were reluctant to follow.we are spending money showing off and even fragile old ladies are in front of the mosques..see how we cross the roads after the prayers are over? Islam is very dar from us.we have not realized still.

    ReplyDelete
  7. First implement our self then advice to public

    ReplyDelete

Powered by Blogger.