Header Ads



முஸ்லிம் சமூகமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மதத்தலைவர்களின் தலையீடு அவசியம் என்றும், அதில் அரசியல்வாதிகள் தலையிடத் தேவையில்லை என்றும் கூறியிருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரர், அடிப்படைவாதப் பிரச்சினையை மதத்தலைவர்களால் தீர்த்துவைக்க முடியும். முக்கிய அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளுதல், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்தல் போன்ற செயற்பாடுகளில் மாத்திரம் அரசியல் தலைவர்கள் தலையீடு செய்வது போதுமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடங்கிய போதே இந்நாட்டின் அரசியல்வாதிகள் அதற்கான காரணம், பின்னணி குறித்து ஆராய்ந்திருந்தால் அந்தப் போராட்டத் முப்பது வருடகால யுத்தமாக நீண்டிருக்காது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். நாடு மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்காது. ஆனால் அந்தப் பிரச்சினையை அரசியல்வாதிகள் தமக்கான நலன்களைப்பெறும் கால்பந்தாக மாற்றினார்களே தவிர தீர்வு காணவில்லை.

அதேபோன்று ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் செயற்படுகின்ற விதம் மிகவும் கவலையளிக்கிறது.

மேலும் இன்று முஸ்லிம் சமூகமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் கடலை விற்று வாழ்க்கை நடத்தி வந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட இன்று ஸஹ்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தீவிரவாத செயற்பாட்டுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்ட சிலர் உடனடியாகவே பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்படுகின்றார்கள். இதிலிருந்தே அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பது தெளிவாகின்றது என்றும் அவர் தெரிவித்தார்

3 comments:

  1. முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டா ? மார ஜோக்வா நீங்க

    ReplyDelete
  2. You and groups must be aware that our Mother land went back over to 500 years down fall please stop destroying our beautiful Island!!

    ReplyDelete
  3. இவன் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையும் கிளரான்.

    ReplyDelete

Powered by Blogger.