June 14, 2019

பெரும்பான்மையைப் புரிவோம், பெரு நிம்மதியுடன் வாழ்வோம்..!

 #இலங்கை_முஸ்லிம்களின்  ,#சவால்களும் #கடமைகளும்.

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் ,இந்நாட்டின், தேசியம், பொருளாதாரம், இன உறவு, அரசியல், பாதுகாப்பு, சர்வதேச உறவு,... என்ற பல தளங்களிலும் எமது முன்னோரின் பங்களிப்பு போதுமான அளவு உண்டு, 

ஆனாலும்  அண்மைக்காலமாக, இடம்பெறும் சிறு சிறு நிகழ்வுகளுக்கும் முஸ்லிம் சமூகத்தின்மீதான பாரிய எதிர்ப்பு பெரும்பான்மை சமூகத்தில் இருந்து எழுவதற்கான காரணங்கள் என்ன என்ற #சுயமதிப்பீட்டு பதிவே இதுவாகும்.

#வரலாற்று_பூர்வீகம்  

இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் பல வழிகளில் தமது பூர்வீகத்தை நிறுவி இருந்தாலும், ஒரு சிறு பகுதியினரே அறாபிய வம்சாவழியில் இருந்து வந்தவர்கள் ,ஏனையோர் இந்நாட்டின் பூர்வீக சிங்கள, தமிழ் பரம்பரைகளின் திருமணமற்றும் சுய மதமாற்ற உறவு நிலைகளில் இருந்து தோற்றம் பெற்றவர்கள், அந்தவகையில் இந்நாட்டின் வரலாற்றிலும், இன உறவிலும் சிங்கள,தமிழர் இன உறவிலும், பாரம்பரியத்திலும் எமக்கு  பங்குள்ளது ஆனால் , அதன்மூலமான உறவுப் பாலத்தை இன்றும் நாம் அவர்களோடு ஞாபகப்படுத்த, புதுப்பிக்க  மறந்திருக்கின்றோம், 

#மொழி_பயன்பாடு 

இலங்கை முஸ்லிம்கள் பலமொழிகளில் பரீட்சயமானவர்கள் எனினும் தமது பிரதான தாய்மொழியாக தமிழை ஏற்கின்றனர், இது தமிழர் மக்களிடையே நல்லுறவை வளர்த்தாலும், சிங்கள மக்களிடையே ஒரு உறவு விரிசலுக்கான காரணியாகவும் உள்ளது, வட கிழக்கிற்கு வெளியே வாழும் மக்கள் சிங்கள மொழிப் பரீட்சயமுடையவர்கள் எனினும், தமது சமய  நூல்களையும், முக்கிய ஆவணங்களையும் ஏனைய மொழிகளிலேயே வைத்திருக்கின்றனர்,  இது எமது உறவுக்கான தூரத்தை  உருவாக்கும் இன்னொரு காரணி,

#சமய #கலாசார_நிகழ்வுகள் 

முன்னரைவிட முஸ்லிம்களின் சமய, கலாசார நிகழ்வுகளில் ஏனைய இன, குறிப்பாக சிங்கள மக்களை இணைத்துச் செல்லக்கூடிய நிகழ்வுகளும், இடங்களும் இன்று இல்லாமலாக்கப்பட்டுள்ளன, குறிப்பாக, மீலாத், கந்தூரி, தர்ஹா பண்பாடு,  சியாற நிகழ்வுகள், போன்றன வஹாபிய  தூய்மை வாதிகள் என்போரால்  புறக்கணிக்கப்பட்டதனால், பல சமூகங்கள்  ஒன்றிணைவதற்கான வாய்ப்பு முஸ்லிம்களின் சமய ,சமூக நிகழ்வுகளில் இல்லாமலாக்கப்பட்டுள்ளன,  இது இஸ்லாம் பற்றிய அச்ச நிலையை ஏனைய மக்களிடையே உண்டு பண்ணி உள்ளது, 

#சமய_ஒப்பீட்டு_விளக்கமும், #நடைமுறையும் , 

பௌத்த, மற்றும் இஸ்லாம் சமயம் தொடர்பான பல ஒற்றுமைகள் இருந்த போதும் படித்தவர்களிடையேயும், சாதாரண மக்களிடையேயும், இஸ்லாம், முஸ்லிம்கள் தொடர்பாக நிலவும் தெளிவின்மை, அச்ச உணர்வு என்பவற்றை சமய ஒப்பீட்டின் மூலம் சகலரையும் சென்றடையும் வண்ணம் விளங்கப்படுத்த  நாம் தவறி உள்ளோம், இதில் அரசியல், சமய, சமூக தலைவர்கள் உதாரணமாக இருந்திருக்க முடியும், 

உதாரணமாக
 மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்கள் இஃராம் உடையையும், பௌத்த துறவிகளின் உடையையும் ஒப்பிட்டு, அதன்  ஒற்றுமையை சிங்கள மக்களிடையே தெளிவு படுத்தி இருந்தார். 

இது போன்ற பல விடயங்களை நாம் அவர்களுக்கு செயற்பாட்டு ரீதியாக, விளக்கி காட்ட முயல்வதுடன் ,சிங்கள மக்களுடன் இணைந்து முஸ்லிம்கள் வாழும் கிராமங்களில் இவ்வாறான பொது நிகழ்வுகளை ஏற்படுத்துவதன் மூலமும் , கந்தூரி போன்ற  எமது புராதன கலாசார நிகழ்வுகளை மறுமலர்சி செய்வதன் மூலமும்,  அவர்களது நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலமும் தேவையற்ற அச்ச மன நிலையை நீக்க முடியும், 

#எங்கு_பிழை_விடுகின்றோம், 

முஸ்லிம்கள் இந்நாட்டின் எல்லா பகுதிகளிலும் வாழ்கின்ற சமூகம் என்ற வகையில் ஆரம்ப காலங்களில் மஅவர் களிடையே   இருந்த பல மன நிலைகள் ,செயற்பாடுகள்  என்பனவற்றில்  மாற்றம் நிகழ்ந்து இருக்கின்றது.   , இதில் சில நல்ல மாற்றங்கள் இருப்பினும் , பல மாற்றங்கள் சமூகங்களிடையே முரண்பாட்டை அதிகரித்து உள்ளன, அந்தவகையில் சமயத் தூய்மைப்படுத்தல் என்ற கோசத்துடன் இயக்கவாதிகள் கிராம மக்களை  சிங்கள  மக்களுடனான  தொடர்புகளில் இருந்து தனிமைப்படுத்தியதும், இதற்கான ஒரு  பிரதான காரணியாகும், 

 தூயஇயக்கங்கள்  இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பற்றிய எல்லை மீறிய  கட்டாய விளங்கப்படுத்தல்களை ஏனைய சமூகத்தவர்களிடைய்யே  முன்வைத்தனவே தவிர  குறித்த பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும், கலாசாரங்களையும் , "உருமய" தொடர்பான போதிய விளக் கங்களையும் கவனத்திற் கொள்ளவில்லை,  இது முஸ்லிம்கள் தமது சமயத்தை தம் மீது திணிப்பதான உணர்வை ஏனைய சமூகத்தவர்களிடையே ஏற்படுத்தியது, மட்டுமல்ல கிராமங்களிடையே நிலவிய நீண்டலால வரலாற்றுப் பிணைப்பையும் அறுத்தெறிந்தது,  

உதாரணமாக, 

முஸ்லிம்கள் பயன்படுத்தும்  ஆடை, உணவு என்பன மட்டுமே  சிறந்தவை ஏனையவை தவறானவை என சில இயக்க உணர்ச்சிவாதிகள் சிங்கள மொழியிலும் கர்ச்சித்தனர்... இது பலரிடையேயும் ஆத்திரத்தை உண்டு பண்ணியும்  இருந்தது, அதன் பிரதிபலன்களே சிறிய ஒரு உரசல் ஏற்பட்டாலும், அதன் விளைவு அதிக சேதார மாயிருப்பதாகும்,  அத்தோடு சிலரின் "தூய்மையாக்க  ? "  உணர்வு இந்நாட்டை ஒரு  முஸ்லிம்  தேசம் என்ற மனநிலையிலேயே செயற்படவும்  வைத்திருந்த்து,

#செய்ய_வேண்டியது_என்ன? 

இலங்கை, பௌத்த சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பல்லின நாடு என்பதை முதலில் நாம் ஏற்பதுடன், குறித்த மக்கள் பற்றிய மன நிலையையும் அறிய வேண்டும், 

அவர்களின் கலாசாரம், பண்பாடு, சமயம் என்பன பற்றிய தெளிவான மன நிலையை சிறுபான்மை சமூகம் என்ற வகையில் முஸ்லிம்கள் இன்னும் புரிந்து கொள்வது மட்டுமல்ல இஸ்லாம் அனுமதித்த விடயங்களில் சேர்ந்து செயற்படவும் வேண்டி உள்ளது, அதுவே இன உறவையும் ,ஏனைய சமயம் பற்றிய செயற்பாட்டு புரிந்துணர்வையும் அம்மக்களிடையே ஏற்படுத்தும், 

மாறாக எங்களது சமயத்தையும், சமூகத்தையும் பெரும்பான்மை மக்கள் புரிந்து நடக்க வேண்டும் என அங்கலாய்ப்பதும், ஏங்குவதும்  அவர்களது நிலையில்  பிரயோசனமற்றது , மட்டுமல்ல நடைமுறைச் சாத்தியமற்றதுமாகும்,  இதுவே எமது கடந்தகால  பல நடவடிக்கை களுக்குமான தோல்விக்கான காரணியாகவும் உள்ளது.

உதாரணமாக இந்நாட்டின் அரச கரும மொழியாக சிங்களமும், தமிழும் அங்கிகரிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்மொழியை கற்க விரும்பும் சிங்கள மக்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே அவர்களுக்கு அதற்கான அவசியம் , தேவை இல்லை, மாறாக அவர்கள் தமிழ் படித்து எம்மை  உணரும் வரை புத்தி உள்ளவர்களால் காத்திருக்கவும் முடியாது ..

எனவேதான் நாம் இதுவரை எங்களைப் புரிய வைக்க முயன்ற விடயங்களை எமது செயல்களில் நடைமுறைப் படுத்தி  காட்டுவதுடன், அவர்களைப் புரிந்து நடத்தலை எமது பிரதான அணுகுமுறையாக்க்   கொண்டு நடப்பதன் மூலம் பல தேவையற்ற உயிர், பொருளாதார, சமூக அழிவுகளில் இருந்து முஸ்லிம்கள் தம்மை காத்துக்கொள்ள முடியும். இதற்காக அன்றாடம்  சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழும் ஊர்மக்களும், தனிப்பட்ட உறவுகளைக் கொண்ட  அனைவரும் தம்மாலான பணிகளை அவசரமாக ஆரம்பிக்க வேண்டும் .. அதுவே எமது  புதிய அணுகுமுறையாகவும், வெற்றிகளைப் பெற்றுத் தரக் கூடியதாகவும் அமையும்.

#பெரும்பான்மையைப்_புரிவோம் ,#பெரு #நிம்மதியுடன்_வாழ்வோம்

முபிஸால் அபூபக்கர்

4 கருத்துரைகள்:

இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள், சவால்கள் என்பன பற்றி மேலே கட்டுரையாளர் கூறிப்பிடுகின்ற விஷயங்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், உண்மையில் முஸ்லிம் எதிர்ப்புப் பின்னணி வேறொரு விஷயமாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரான கோசமும், துவேசமும் தொன்றுதொட்டு எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இது இலங்கையில் மாத்திரமல்ல உலகளாவிய ரீதியில் முஸ்லிம் எதிர்ப்பு வாதம் எந்தவிதமான காரணங்களுமின்றி நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் பின்னணியில் உலக அரசியலும், உள்நாட்டு அரசியலும் சேர்ந்த சதித்திட்டங்கள் காலத்துக்குக் காலம் அரங்கேற்றப் படுகின்றன.

இலங்கையை பொறுத்தவரையில் முஸ்லிம்கள் வடகிழக்கிலும் வடகிழக்குக்கு வெளியேயும் அவரவர்கள் சார்ந்திருக்கும் ஏனைய இனங்களுடன் அன்றாட நடவடிக்கைகளில் கலந்தே பயணித்திருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது இன்றுவரை. ஆனால், துரதிஷ்டவசமாக நமது கற்றறிந்த சில வாலிபர்களும் சில உலமாக்களும் இஸ்லாமிய எதிர்ப்புவாதிகளின் தூய இஸ்லாம் எனும் சதிக் கொள்கைக்குள் அகப்பட்டு புதிய புதிய சட்டதிட்டங்களை மக்கள்மயப்படுத்தியதால் அந்நிய உறவுகளுக்கிடையில் விரிசல் ஏற்பட காரணமாகியது. இங்கு இஸ்லாமிய எதிர்ப்புவாதிகளின் பணம் செல்வாக்கு செலுத்தியது முக்கிய காரணியாக குறிப்பிடலாம். ஆனால் பழைய கொள்கையில் உள்ளவர்கள் இன்றும் அந்நிய மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலேசியாவிலிருந்து...

முதலில்
அடிப்படைவாத அரசியல்வாதிகளான ஹிஸபல்லா, றிசாத் ஆகியோருக்கு ஆதரவிளிப்பதை நிறுத்துங்கள், அரபு மொழியை தவிருங்கள், அரபு கல்லூரிகள், மதராசுகளை ஒழியுங்கள்.

அதன்பின்னர் மேலுள்ள கட்டுரையை பன்பற்றுங்எள்.
அதன் பின்னர், சிங்களவர்கள் உங்களுக்கு அடிக்க மாட்டார்கள்

அப்போ பயங்கரவாதி பிரபாகரன் or கருணாவின் தீவிரவாத கொள்கையை பின்பற்றச் சொல்கிறியா அஜன் நீ ஒரு பயங்கரவாதி
பொன்று தான் விலங்குகிறது.
றிசாட் மற்றும் ஹிஸ்புல்லாஹ் சிறந்த நேர்மையான அரசியல் வாதிகள் உன்னைப்போன்ற பயங்கரவாதிகள் அல்ல

@unknown, உங்களது பெயரை போல தான் உங்கள் அறிவும் இருப்பது நல்ல பொருத்தம்.

றிசாத், ஹிஸ்புல்லா போன்ற அடிப்படைவாதிகளுக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்குகளும் சிங்கள மக்களின் வெறுப்பை அதிகரிக்கும், அது அடிகளாக மாறும்.

மேற்கு நாடுகளில் ISIS வளர்ச்சியில் பெறும்பங்கை வகித்தது மதராஸ்கள் தான். எனவே அவற்றின் அறிவுறைகள் இலங்கையர்களுக்கு பயத்தை உண்டுபண்ணும் தானே

ஏற்கனவே இரு மொழிகளால் இலங்ககயில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முட்டுக்கட்டையாக இருப்பதே முஸ்லிம்கள் தான். இந்த லட்சனத்தில் என்றொரு மொழி வருவது எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் வரும் என சிங்களவர்களுக்கு பயம்.

Post a comment