Header Ads



ஜப்பானுக்கு பறக்க, ஞானசாரருக்கு நீதிமன்றம் அனுமதி

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெளிநாடு செல்ல கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று -07- அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 20017 ஆம் ஆண்டு வெலிகடை - ராஜகிரிய பிரதேசத்தில் போதைப் பொருள் தொடர்பான சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு கடமையை செய்ய இடமளிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படும் சம்பம் தொடர்பாக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

ஞானசார தேரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் பகிரங்கமாக வாசிக்கப்பட்டது. எனினும் தான் நிரபராதி என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து ஞானசார தேரர், ஜப்பான் செல்ல அனுமதி வழங்குமாறு, அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதற்கு அனுமதி வழங்கிய கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா, வழக்கை ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

3 comments:

  1. Japan is a peaceful country what this thugs going to do there?

    ReplyDelete
  2. He is going for next round of planning.

    ReplyDelete
  3. இந்த காபிரின் கள்ளப்பொண்டாட்டி யப்பானில் ஆடம்பரமாக வாழ்க்கை நடாத்துவதாக பரவலாகப் பேசப்படுகின்றது. திருமணம்செய்வது ஹராம் என இலங்கையில் போதிக்கும் இவன் உலகமெல்லாம் அதை ஹலாலாக்கித்திரிகின்றான். நயவஞ்சகத்துக்கு முழு உலகுக்குமான முன்மாதிரி இந்தக் காபிர்தான்.

    ReplyDelete

Powered by Blogger.