Header Ads



சத்தியாகிரகம் செய்யும் முஸ்லிம்களுடனான, பொலிஸாரின் பேச்சுவார்த்தை தோல்வி

இன்று வியாழக்கிழமை (20) காலையில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கல்முனை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரத பந்தலில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

சத்தியாகிரக போராட்டக்கார்களை  சந்தித்து பேச்சுவார்த்தை செய்த பொலிஸாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. இப்போது உண்ணாவிரதம் மற்றும் சத்தியாகிரகம் இடம்பெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது முஸ்லிம் மக்களின் சத்தியாகிரக பந்தலை அந்த போராட்டம் நெருங்கிய சமயம்  சிறு சலசலப்பு வந்ததையடுத்து கல்முனை பொலிஸார்  நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். முஸ்லீம் மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு அரசியல் பிரமுகர்கள்,பொது அமைப்புக்கள் சத்தியாகிரக பந்தலில் அமர்ந்து தமது ஆதரவை தெரிவித்துவருகிறார்கள்.ஆனால் இப்போது கல்முனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலந்து கொள்ளும் பிரமுகர்கள் எல்லோரும் இப்போது ஊடகங்களை சந்தித்து தமது பக்க நியாயங்களை முன்னிறுத்தி பேசி வருகிறார்கள் 

நூருல் ஹுதா உமர் 


No comments

Powered by Blogger.