Header Ads



இனி எந்த அமைச்சர்களும் புதிதாக பதவியேற்க முடியாது, அப்படியென்றால் முஸ்லிம் அமைச்சர்களின் நிலை..?

நேற்றிரவு நடந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு அமைச்சர்களை புதிதாக இணைப்பதற்கான கடிதம் ஒன்றை ஐக்கிய தேசியின் தரப்பில் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.

இதனை உடனடியாக நிராகரித்த ஜனாதிபதி, புதிதாக எந்த அமைச்சரையும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்தாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறினார்.

2

அண்மையில் பதவியிலிருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அந்த பதவியினை பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது புதிதாக யாரையும் அமைச்சர்களாக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையிலேயே, அண்மையில் பதவியிலிருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அந்த பதவியினை பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஒரு மாதம் கழித்து பதவி விலகிய அமைச்சர்கள் மீண்டும் பதவி ஏற்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 260க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், அவர்களை பதவி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இவ்வாறான நிலையில், இந்த வாரம் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. இதென்ன கேள்வி?
    இதென்ன பதவி விலகல் நாடகமா நடக்குது.

    ReplyDelete
  2. மிஸ்டர் Ajan வீட்டுக்காரனுகுத்தான் அவன் வீட்டில் உள்ள பிரச்சினை என்னவென்று தீர்கமாக தெரியும்

    ஏனையவர்களுக்கு அப்பிரச்சினையின் உண்மைநிலை தெரியாமல் அவைகளை நாடகங்களாக பார்க்கும் சந்தர்பங்கள்தான் அதிகம் அவ்வாறு இந்த முஸ்லிம்களின்களின் பிரச்சினைகள் உங்கள் பார்வைக்கு நாடக காட்சியாக தோன்றுகின்றது.

    இருந்தும் தீரவிசாரித்து உண்மை நிலையை நீங்கள் தெரிந்துகொள்வது உங்களின் நற்பண்புள்ள மனிதனின் நேர்தியான சிந்தனைக்குச் சான்றாகும்.

    ReplyDelete
  3. டேய் கூனயா , அமைச்சர் மாருக்கு tax இல்லாம vehicle தாராய் , ஏன் டா பொது மக்களுக்கு 300% tax போறாய் ,
    உண்மையா அவேணுஹலுக்கு தாண்ட 300% tax போடோணும்

    ReplyDelete

Powered by Blogger.