Header Ads



இந்திய அணியை எங்களால், வீழ்த்த முடியும் - வங்கதேசம்


வங்காளதேச அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜூலை 2-ந் தேதி இந்தியாவை எதிர்கொள்ள உள்ள நிலையில் ஷகிப் அல்-ஹசன் அளித்த பேட்டியில் 

‘இந்தியா முன்னணி அணியாகும். உலக கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது. எனவே இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எளிதாக இருக்காது. இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். 

கடந்த கால அனுபவங்கள் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியை வெல்ல முடியும். இந்திய அணியில் உலக தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர்கள். இருப்பினும் இந்திய அணியை வீழ்த்தும் திறமை எங்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்’ என்றார்.

No comments

Powered by Blogger.