Header Ads



முஸ்லிம்களுக்கு பாதகமான, சுற்றுநிருபத்தை மாற்றக்கூடாது - தேசிய சங்க சம்மேளனம்

அரச சேவையாளர்களின் உத்தியோபூர்வ ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது என்று, தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த சங்க சம்மேளனத்தின் தலைவர் லியன்வல ஷாசனரத்ன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே நீதி என்ற கொள்கை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்.

அதன்படி அனைத்து அரச நிறுவனங்களிலும் அனைவருக்கும் பொதுவான ஆடை முறைமை அமுலாக்கப்பட வேண்டும்.

அவ்வாறு அல்லாமல் தனிப்பட்ட ஒரு இனத்துக்கு மாத்திரம் சிறப்புரிமை வழங்கப்படுவதால், இன்னொரு இனம் பாதிக்கப்படுகிறது.

நாளை இன்னொரு இனம் அரைகாற்சட்டை அணிந்து அரச நிறுவனங்களுக்கு பிரவேசித்தால், நாட்டின் கலாசாரம், கட்டமைப்பு என்னாவது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 comment:

  1. நல்லது அப்ப தேரர்களும் அதே உடையைத்தான் உடுத்தனும்.அப்பதான் எல்லாருக்கும் ஒரே சட்டம் என்று சொல்லலாம்.

    ReplyDelete

Powered by Blogger.