Header Ads



இலங்கையில் நடந்த தாக்குதலின், பின்னணியில் ஈரான் உள்ளது

இலங்கையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில், ஈரான் உள்ளது என, இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் எண்ணிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளனர் என்றும் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு, உள்ளூரிலுள்ள ஷியா முஸ்லிம்களுக்கு ஈரானிலுள்ள செல்வாக்கே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஒரு மணி நேரம் கழித்து, தான் பதிவிட்டது தவறு எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த தாக்குதல், வசாபி சன்னி பிரிவினரால் நடத்தப்பட்டதாக பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இலங்கையிலுள்ள ஷியா கல்வி நிறுவனங்களுக்கு, ஈரானே நிதியுதவி வழங்கி வருவதாகவும் இதில் மதமாற்றம் இடம்பெறுவதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால், தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கு வாய்ப்புள்ளதென அவர் மேலும் கூறியுள்ளார்.

6 comments:

  1. இலங்கை புலனாய்வு துறைக்கு எல்லாம் தெரியும் சாமி நீங்க உங்கட நாட்டை பாருங்க அது பிரயோசனமா இருக்கும்.

    ReplyDelete
  2. ஈரான் இருந்ததோ இல்லையோ இந்திய இருப்பது தெளிவாகிறது!

    ReplyDelete
  3. பயங்கர வாதத்தின் தாயகம்தான் ஈரான்.

    ReplyDelete
  4. ஷியா , வாஹவி சுன்னி என்று செய்திகளில் பார்த்ததை வெய்த்து ஒரு ஸ்டோரி சொல்றான்

    ReplyDelete
  5. பின்னணியிலுள்ளவன்கள் எல்லாருமே இன்னொருவன நோக்கி விரல் நீட்டுறதுதானே வழக்கம்,மனிதாபிமானம் உள்ளவன் கதச்சா கேட்கலாம்,இவன மனுசனெண்டு கணக்கெடுக்கிறதே இல்ல

    ReplyDelete
  6. இந்த பைத்தியக்காரன் சுவாமியின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவை இல்லை. ஆனால் ஷியா முஸ்லிம்களோ அல்லது ஈரானோ ஒருபோதும் கீழ்த்தனமான, பயங்கரவாத செயல்களில் ஒருபோதும் ஈடுபடுவதில்லை அவர்கள் சுய ஒழுக்கம் உள்ளவர்கள். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் சுன்னி முஸ்லிம்கள் தான்.

    ReplyDelete

Powered by Blogger.