Header Ads



மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக, மங்கள வத்திக்கானுக்கு கடிதம் அனுப்பினாரா..?

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் மங்கள சமரவீர வத்திக்கானுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன  என விமல் வீரவன்ச எம்,பி சபையில் கேட்டார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித், கடந்த 3 ஆம் திகதி உண்ணாவிரதம் இருந்த ரத்தன தேரரை பார்க்கச்சென்றமையை சுற்றிக்காட்டி நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஜூன் 3ஆம் திகதி வத்திக்கானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் கா்தினால் மல்கம் ரஞ்சித்தின் செயற்பாடுகள் அனைவராலும் வரவேற்கப்பட்டிருந்தன. அனைத்து இன மக்களாலும் அவர் போற்றப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் நிதி அமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு குற்றச்சாட்டாக, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னணில் அமெரிக்கா இருப்பதாக கார்தினல் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனக்கு தெரிந்த மட்டில் அவர் எந்த நாட்டினதும் பெயரை குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. அத்துடன் இந்த நாட்டை சிங்கள பெளத்த நாடாக கார்தினல் அவர்கள் ஏற்றுக்கொண்டதும் தவறாகவே அமைச்சர் அந்த கடிதத்தில் காட்டியுள்ளார்.

எனவே அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் மதத்தலைவர்கள் தொடர்பில் வெறு நாடுகளுக்கு முறைப்பாடு செய்வதாக இருந்தால் நாட்டை எங்குகொண்டு செல்லப்போகின்றீர்கள். இதற்கு முன்னரும் அமைச்சரின் டுவிட்டர் தகவலில், கா்தினால் அவர்கள் இனவாதத்தை தூண்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் மதத்தலைவர்களுக்கு அவ்வாறு பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பதை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

இதேவேளை நிதியமைச்சர் அமைச்சர் மங்கள சமரவீர, தனது பெயரால் வெளியிடப்பட்டிருக்கும் இது போலிக் கடிதம் என்றும் தான் இவ்வாறன கருத்துக்களை தெரிவித்து எவ்வித கடிதங்களையும் வத்திக்கானுக்கு  அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன் இது தொடர்பில் அவர் குற்றபு புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.