Header Ads



குண்டு தாக்­கு­தலை தடுப்­ப­தற்கு, ஜனா­தி­பதி மைத்­திரி தவ­றினார் - பொலிஸ்மா அதிபர் பூஜித்

உயிர்த்த ஞாயி­று­தின குண்டுத் தாக்­கு­தல்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தடுக்கத் தவ­றினார் என கட்­டாய லீவில் அனுப்­பப்­பட்­டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரி­வித்­துள்ளார்.

அரச புல­னாய்வு முக­வ­ரங்­க­ளுக்கும் அரச பாது­காப்புப் படை­க­ளுக்கும் இடை­யி­லான பார­தூ­ர­மான தொடர்­பாடல் இடை­வெ­ளியை 20 பக்­கங்கள் கொண்ட முறைப்­பாட்டில் பூஜித் ஜய­சுந்­தர வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் தொடர்­பாக நடை­பெற்ற விசா­ர­ணையை நிறுத்­து­மாறு பிர­தான புல­னாய்வு அமைப்­பான அரச புல­னாய்வு சேவை (SIS), ஒரு வரு­டத்­துக்கு முன்னர் தனக்கு உத்­த­ர­விட்­டது எனவும் பூஜித் ஜய­சுந்­தர மேற்­படி முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்­ளா­ரென ஏ.எப்.பி. செய்திச் சேவை தெரி­வித்­துள்­ளது.

குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் குற்றம் சுமத்­தப்­படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் உட்­பட முஸ்லிம் தீவி­ர­வாதக் குழுக்­களின் மீதான விசா­ர­ணை­களை பொலிஸ் திணைக்­க­ளத்தின் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு நிறுத்த வேண்­டு­மென அரச புல­னாய்வுப் பிரிவு (SIS) தெரி­வித்­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

258 பேர் கொல்­லப்­பட்ட தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர பதவி வில­கு­வ­தற்கு மறுத்­ததால் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் கட்­டாய லீவில் அனுப்­பப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில், இத்­தாக்­கு­தல்­களைத் தடுக்கத் தவ­றி­ய­மைக்குப் பொறுப்­பேற்று பதவி வில­கினால் தனக்கு இரா­ஜ­தந்­திர பதவி வழங்க முன்­வந்­த­தா­கவும், ஆனால், புலனாய்வுத் தோல்விக்கு தான் பொறுப்பில்லை என்பதால் பதவி விலக தான் மறுத்ததாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார் என ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.