Header Ads



உண்ணாவிரதத்தை நிறைவுசெய்த ரதன தேரர், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதி

ரிசாத் பதியுதீன், அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலக கோரி, கண்டி  தலதா மாளிகைக்கு  முன்பாக அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் செய்து வந்த நிலையில் அவருக்கு ஆதரவாக பலரும் அவருடன் இணைந்து அசாதாரண நிலை ஏற்படும் சூழல் உருவாகி அதன் பின்னர்   ஆளுநர்கள் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர்  ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்து  அதனை  ஜனாதிபதி   ஏற்றுக் கொண்டது அறிந்ததே.

இந்நிலையில் அத்துரலியே ரத்தன  தேரர் சற்றுமுன்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2
ஆளுநர்கள் அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த தகவலை எடுத்துக்கொண்டு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன ரத்தன தேரரை சந்தித்துள்ளார்.

அதனை அடுத்த உண்ணவிரதத்தை முடித்துக்கொண்ட ரத்தன தேரர்  கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலதா மாளிகை வளாகத்தில் அவர் ரத்தன தேரரை சந்தித்து  ஜனாதிபதி தன்னை தொடர்புகொண்டு ஆளுநர்கள் இருவரும் பதவி விலகிய தகவலை கூறச்சொன்னதாகவும் அமைச்சர் ரிஷாத் தொடர்பில் பிரதமரே தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. தேரருக்கு பேரீச்சம் பழங்களை கொடுப்பது நல்லது. உணவின்றி இழந்த சக்தியை கூடிய விரைவில் பேரீச்சம் பழம் நிவர்த்தி செய்து தேரர் விரைவில் குணமடைவார்

    ReplyDelete
  2. எகிறிட்டு எரியும் இலங்கை இனவாதத்தீயில்..................

    ReplyDelete
  3. His next sear as a National list MP parcel

    ReplyDelete

Powered by Blogger.