Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் சரியாக நடந்து, கொள்கிறோம் என நாட்டிற்கு வாக்குறுதியளிக்க வேண்டும்

இலங்கையில் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரேபியர்களாக செயற்பட கூடாது என அஸ்கிரிய பீட தம்மதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் அரேபிய முஸ்லிம்களாக இருக்க முயற்சித்தமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பதவி இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் நேற்று மல்வத்து அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலகும் போது எங்களுடன் பேசவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இலங்கை கலாச்சாரத்தின்படி செயற்படாமல் அரேபிய கலாச்சாரத்திற்கு மாற முயற்சித்த போதே பிரச்சினை ஏற்பட்டது.

அரேபிய முஸ்லிம் கலாச்சாரம் என்றால் அரேபிய முறையில் ஆடை அணிதல், கட்டடங்கள் அமைத்தல், கலாச்சார நிலையங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையினால் பிரச்சினை ஆரம்பித்தது.

அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்குள்ளான முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளனர். இந்த நேரத்தில் நாங்கள் சரியாக தான் நடந்து கொள்கிறோம் என நாட்டிற்கு வாக்குறுதியளிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என அஸ்கிரிய பீடாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. முஸ்லிம் அரசியல்வாதிகள் சரியாக நடக்கிறது இருக்கட்டும்.....

    முதலில் பௌத்த பிக்குகள் பிக்குவை போன்று சரியாக நடக்கட்டும், பௌத்த அரசியல்வாதிகள்,சிங்கள அரசியல்வாதிகள் சரியாக நடக்கட்டும். Ok
    காமடி பன்ராரு காமடி

    ReplyDelete
  2. With respect to all readers.

    Can someone define what is meant by arabic culture..i.dress the way it suits me and if i copy a dress from any other country would that mean I am an arab.then srilankans cannot wear trousers and banians since it is english cultur, hindus cannot wear the veshty since it is south indian culture and where is true srilanlan culture..
    May be at mahiyangana veddhs culture..
    We are totally confused by people talking to the gallery.

    ReplyDelete
  3. Mini skirts and half naked body dresses are
    which culture? Why monks are blind on this?

    ReplyDelete
  4. அதற்கு முதல் நீங்கள் எல்லாம் சரியாக நடந்துகொள்கின்றீர்களா என்பதை நீங்களே உங்களை சுய விசாரணை செய்து உங்களுக்கு நீங்களே தீர்ப்பு வழங்கிக் கொள்ளுங்கள். புத்த பெருமான் உலக மக்களின் சகவாழ்வுக்கு வேண்டிய பொன்மொழிகளை மிக அழகாக சிறப்பாக வழங்கியுள்ளார். பொது மக்களை விடுங்களேன். உங்களுள் எத்தனைபேர் புத்தருடைய போதனைகளை முறையாகப் பின்பற்றுகின்றீர்கள். நீங்கள் பினபற்றினால் அல்லவா மக்கள் பின்பற்றுவார்கள்.

    ReplyDelete
  5. Roshan Surrey i accept ur comments ur right

    ReplyDelete

Powered by Blogger.