Header Ads



ஹபாயா பற்றிய சுற்று நிருபத்திற்காக முஸ்லிம், அரசியல்வாதிகள் மீது கைநீட்டுபவர்கள் கவனத்திற்கு


- Rauf Hazeer -

சுமார் 10 நாட்களுக்கு முன், முஸ்லிம் பெண்களின் ஆடை பற்றிய மேல்மட்ட கலந்துரையாடல் ஒன்று தபால் தலைமையகத்தில், அமைச்சரது Conference room இல் நடந்தது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளதால் அதற்கான பரிந்துரைகளை உடனடியாக தெரிவிக்க வேண்டியுள்ளது என அங்கு தெரிவிக்க பட்டது. 

முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மகளிர் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள் என கணிசமான தொகையினர் கலந்து கொண்டு பேசினர்.

'ஜமீயத்துல் உலமாவைச் சேர்ந்த எவரையும் அழைக்கவில்லையா!?' என அமைச்சர் ரிஷாத் கேட்டபோது , அவர்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது .

உடனே ரிஷாத் அவர்கள் , ஜமீயதுல் உலமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பிறகு இவ்வாறு சொன்னார் ,

அவர்கள் இப்போது பிராந்திய பிரதிநிதிகளோடு பேசிக்கொண்டிருக்கிறார்களாம் இன்று இங்கே வர முடியாதாம்.

"நோன்பு பெருநாள் முடிந்தபின் இதுபற்றி ஆழமாக ஆறுதலாக ஆராய்ந்து முடிவெடுக்கலாமே " என்கிறார்கள் , என்றார்.

இப்போது விரலை யார் பக்கம் நீட்டப் போகிறீர்கள் ?

( அரசியல் தொடர்புடைய யான் , வெறும் சால்ஜாப் ஆகவோ , பந்தை கைமாற்றவோ இதனை பதிவிடவில்லை. இது பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் பதில் சொல்ல வேண்டிய பாரிய விடயம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை ! )

பின் குறிப்பு : 
சுற்று நிருபத்தில் பெரும் பிழையேதும் இல்லை. சிறிதளவு மயக்கம் இருக்கிறது . அவ்வாறுள்ள " தமது சமய சார்பான மேலதிக உடையை அணியலாம்...." என்றுள்ள வரிகளை தெளிவாக திருத்தி எழுதி வெளியிட்டால் நிறைய பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

2 comments:

  1. 4ம் பந்தியின்படி சாரி உடுத்து மேலால் ஹபாயா போடலாம் என்று தான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. ஜம்ம்இயத்துல் உலமாவுக்கு முஸ்லிமக்கள் மீது அவ்வளவு அக்கறை.

    ReplyDelete

Powered by Blogger.