Header Ads



கல்முனையில் சுமந்திரன், மனோ - ரணிலின் தகவல் வாசிக்கப்பட்டது

பிரதமரிடத்தில் இருந்து வந்த விசேட செய்தியினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்ணாவிரத களத்தில் வாசித்துக் காட்டியுள்ளார்.

பிரதமரின் செய்தியை தாங்கி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன், தயாகமகே ஆகியோர் கல்முனைக்கு சென்றிருந்தனர்.

பலத்த பாதுகாப்புடன் அப்பகுதிக்குச் சென்றிருந்த அவர்கள் அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்துள்ளனர்.

அதன் பின்னர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அங்கு கலந்துரையாடியதுடன், பிரதமரிடம் இருந்த பெற்றுக்கொண்ட செய்தியையும் அங்கு அறிவித்துள்ளார்.

2

பிரதமரின் செய்தியை தாங்கி சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன், தயாகமகே ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் போராட்ட களத்தை அடைந்துள்ளனர்.

கல்முனை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழர்களின் கோரிக்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது குறித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செய்தியோடு எம்.எ.சுமந்திரன், அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயாகமகே ஆகியோர் தற்போது உலங்குவானூர்தியின் மூலம் அங்கு சென்றடைந்துள்ளனர்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு அந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழர்களின் கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் கல்முனை பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.