Header Ads



ஜிகாத் கொள்கையை தனிமைப்படுத்தி அழிக்கவேண்டும் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

ஜிகாத் கொள்கையை தனிமைப்படுத்தி அழிக்கவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து இது பிராந்திய சமாதானத்திற்கும் உலக சமாதானத்திற்கும் ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளார்

இலங்கையுடனான இந்திய உறவுகள் கடந்த ஐந்துவருடங்களில் பாரிய மாற்றங்களை சந்தித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் இடம்பெற்ற தேர்தல்களில் பிரதமர் நரேந்திரமோடிக்கு கிடைத்துள்ள தீர்க்கமான மக்கள் ஆணை அரசாங்கத்தின் கொள்கைகள் தொடரவேண்டும் என மக்கள் விரும்புவதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோடி அரசாங்கத்தின் இந்த கொள்கைகள் வலுப்படுத்தப்படுவதும் தொடர்வதும் இலங்கையின் நலன்களுடன் தொடர்புபட்டுள்ளது எனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்திய மக்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை தெரிவிக்கும் செய்தியுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதமும் தீவிரவாதமும் மனித குலத்திற்கான கூட்டு ஆபத்துக்கள் என தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையில் இடம்பெற்றகுண்டுவெடிப்புகள் இலங்கைக்கானவை மாத்திரமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் எந்த பகுதியில் இடம்பெறும் பயங்கரவாத தாக்குதலும் மனிதகுலத்தின் மனச்சாட்சிக்கு எதிரானது,இது நாங்கள் அனைவரும் ஒன்று என்ற உணர்வின் மீது தாக்குதலை மேற்கொள்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜிகாத் கொள்கையை தனிமைப்படுத்தி அழிக்கவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து இது பிராந்திய சமாதானத்திற்கும் உலக சமாதானத்திற்கும் ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை வேண்டுகோள் விடுத்தால் இந்த விடயத்தில் பிரதமர் மோடி இலங்கைக்கு  தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. India is making trouble in the Asian region. And also, it doesn't like the development of our country

    ReplyDelete
  2. Mind your own business, local issues are non of your concern, aapna kaam deklo nahi toh yaha se nikal janeka ka jai

    ReplyDelete

Powered by Blogger.