June 06, 2019

பயங்கரவாதத்தை ஒழிக்க முழுதாக ஒத்துழைத்த, முஸ்லிம்களை பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டது

பிரித்தானிய தூதரக  அரசியல் பிரிவு பிரதானி  நெய்ல் கவனாஃக்    அவர்களுடனான விசேட சந்திப்பொன்றினை   நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கொண்டார்.  பிரித்தானிய தூதரக  அலுவலகத்தில்  இடம் பெற்ற இச்சந்திப்பில் சட்டத்தரணி MIM அஸ்வர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

இச்சந்திப்பின் போது இலங்கையின் சமகால அசாதாரண நிலமைகள் குறித்தே கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக கடந்த ஒன்றரை மாத  காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் முகம் கொடுத்துவரும்  இனவாத சவால்கள் குறித்து பிரித்தானிய தூதரக அரசியல் பிரிவு பிரதானிக்கு  அப்துர் ரஹ்மான் இதன்போது  தெளிவுபடுத்தினார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையிலேயே முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் தொடராக நடந்து வருவது பற்றியும், பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ள நிலையிலேயே பெருந்தொகையான நபர்கள் ஒன்று திரட்டப்பட்டு  இனவாத அச்சுறுத்தல்கள் பகிரங்கமாகவே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் , இது  முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை பெரிதும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் நியாயமான காரணங்களின்றி சந்தேகத்தின் பெயரில்  தொடர் கைதுகள் இடம்பெறுவது பற்றியும் , கைது செய்யப்பட்டவர்களில் பலர் விசாரனைகளின்றி  இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.

தீவிரவாத- பயங்கரவாத ஆபத்துக்கள்  பற்றிய தகவல்களை முஸ்லிம் சமூகம் முன்கூட்டியே  அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தனர்.ஆனால் அரசாங்கம் அதனை கண்டு கொள்ளவில்லை. ஈஸ்ட்டர்தின தாக்குதல்களுக்குப் பின்னரும் கூட பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு முன்னெடுப்புகள் அனைத்திற்குமே முஸ்லிம் சமூகம் தனது முழுமையான ஒத்துழைப்புகளை இன்று வரை வழங்கியே வருகின்றது.. இலங்கை வரலாற்றில்  பயங்கரவாதத்திற்கெதிரான இது போன்ற முழுமையான    ஒத்துழைப்புகளை வேறு எந்த சமூகங்களும் வழங்கியதாக தெரியவில்லை. எனினும் அரசாங்கம் இவை அனைத்தையும் புறந்தள்ளி இந்நாட்டு முஸ்லிம்களை பாதுகாக்கத்தவறியிருக்கின்றமை குறித்து தனது கவலைகளையும் அவர் தெரிவித்தார்.

இதன் போது கருத்துத்தெரிவித்த பிரித்தானிய தூதரக அரசியல் பிரிவு பிரதானி அவர்கள்,   இது தொடர்பில் தாங்கள் போ திய அவதானத்தினை செலுத்தி வருவதாகவும்,. இலங்கை அரசுக்கு பல தலதடவைகள் இது பற்றி எடுத்து கூறியிருப்பகவும், சட்டவாட்சியினை உறுதி செய்யும் பொருட்டு   தமது இரஜதந்திர அழுத்தங்களை தொடர்ந்தும் கொடுக்க  எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இலங்கை அரசின் போக்கு தொடர்பில்  அறபு நாடுகளின் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது நிச்சயம் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தினை  செலுத்தும் என்பதுடன் மேலும் பல நாடுகளுடன் இணைந்து இவ்வாறான முன்னேடுப்புகளை தானும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

6 கருத்துரைகள்:

இவ்வளவு காலம் இல்லாத சக்கிலி அரசாங்கம்

Where were you since 4/21

Why come out now? Why are you talking to imperial powers?
Did the recent malicious attack on you by Mr Janasar triggered you to come out?

Please enlighten us

Thsnks

This is not the matter now, let him to serve the community and the country.

சகோதரரே உங்களுடைய கருத்துரையினை பார்க்கின்ற பொழுது நீங்கள் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளை தொடர்ச்சியாக படிக்க தவறியிருக்கிறீர்கள் என்பது புரிகிறது.காரணம் கடந்த 21/04 இற்குப் பின்னர் மாத்திரம் இது தொடர்பில் சகோதரர் அப்துர் ரஹ்மானை பிரதிநிதித்துவப் படுத்தும் NFGGயினால் பல அறிக்கைகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.இதே ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில்கூட அவை பதிவிடப்பட்டிருந்தன.
தயவுசெய்து 21/04ம் திகதிக்குப் பின்னரான செய்திகளைப் படித்துப் பார்த்தீர்களானால் உங்களால் அதை தெரிந்து கொள்ள முடியும்.

அதே வேளை சகோதரர் அப்துர்ரஹ்மானுக்கு பிரச்சனை வந்துவிட்டதனாலேயே அவர் இப்போது மக்களுடைய பிரச்சனைகள் குறித்துப் பேசுவதாக சொல்கிறீர்கள்.ஈஸ்ட்டர் தின தாக்குதல் மாத்திரமே 21/04இல் நடைபெற்றது.ஆனால் முஸ்லிம்கள் மீதான இனவாத வன்முறைகள் என்பது இந்நாட்டில் பல வருடங்களாக திட்டமிட்டு நடாத்தப்பட்டு வருகின்றது.அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அதற்காக ஜெனீவாவரை சென்று மக்களுக்காக குரல் கொடுத்த வரலாறு சகோதரர் அப்துர்ரஹ்மானுக்கிருக்கிறது.துரதிஷ்டவசமாக நீங்கள் அந்தசெய்திகளையும் படித்திருக்கவில்லை என்பதும் புரிகிறது.

ஏன் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் முறையிடுகிறீர்கள் எனக்கேட்கிறீர்கள்? உள்நாட்டு அரசாங்கம் பார்வையாளர்களாக உள்ள நிலையிலேயே இன்று முஸ்லிம்கள் இனவாதிகளால் அத்துமீறப்படுகிறார்கள்.இவ்வாறு சொந்த நாட்டில் மக்கள் தங்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாமற் போகுமிடத்து இவ்வாறான சர்வதேச இராஜ தந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து அதற்கூடாக அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்குவதே உலகவழமையாகும்.அந்த அடிப்படையிலேயே அப்துர்ரஹ்மானும் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்திருக்கிறார்.
இந்நாட்டு முஸ்லிம்கள் தற்போதுஎதிர் நோக்கியிருக்கும் மிக்க சவாலான ஒரு சூழ்நிலையிலும் நாம் நமக்குள் மக்களைப்பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகளை தனிப்பட்ட கோபதாபங்களுக்காக மலினப்படுத்துவதும் தனிநபர்களை கேள்விக்குட்படுத்துவதும் இன்னும் எமது சமூகத்தை அழிவிற்கே இட்டுச்செல்லும் என்பதை தயவு செய்து கவனத்திற்கொள்ளுங்கள்.

I did not mean to harness him nor degrade the work NFGG work but I did notice since 4/21 they took a neutral stance on Hisnullahs matter ( he is personally not in good stance with him, I agree the principle stand) but st this juncture he should have stood against the racists attacks reason backsaw it’s purely hatred I Ameen racists could not stomach his work and his contribution in east specially for Muslims

Secondly it’s nit a good time to gin full scale only if you are worried about your political scale but need of the hour is he should have taken on racists and specially release of aha Asmara on full scale and members of NFGG should have voiced Muslims concerns more aggressively, what I see is just few condemnation of terrorist attacks and few media release is not enough though

Now NFGG should understand that Sri Lanka is not matured enough for good governance and other so called liberal ideas instead they should understand this whole system works on capitalistic model and should try an alternate system change ( it’s a long discussion)

On meeting British officials : he should understand that regional players are working big time in their his conflict and directly involved in Sri zlsnksn politics, he should have vehemently opposed their interference in our troubles ... instead he is seeking help which will not materialise on any means

Britain never stood for Muslim issues this was the history only if they had self interest, he should have known this.

It’s time to build up our own political identity as Mudlims I am not calling for identity politics merely based on race but based on common issues and justice which is common to all races and whole nation

Never adopt liberal ideologies just for the sake of pleasuring and pleasing the masses or to be politically correct. stand for justice and see the big picture Also don’t forget your origins and culture I mean your platform and ideals are Muslims and Islamic principles which is much more comprehensive and superior to all ideas and slogans - Simples

Post a Comment