June 03, 2019

'சுபஹு'த் தொழுகையை தவறவிடாத சாபியின் மறுபக்கம்

சகோதரா நிச்சயம் சத்தியம் வெல்லும்.

அல்லாஹ் ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமாக சோதிக்கலாம். அதற்காக ஒரு போதும் கவலைப்படத்தேவையில்லை. இலங்கை முஸ்லிம் வைத்தியர்களுக்கு இன்னும் சமூகம் சார்ந்த பல பொறுப்புகள் இருப்பதை அவரின் மூலம் அல்லாஹ் உணர்த்தி இருக்கிறான். தடைகளை தகர்த்து எழ இன்ஷா அல்லாஹ் நாமும் உறுதுணையாக இருப்போம்.

*Dr. ஷாபி ஷிஹாபுதீன். இது தான் இன்றைய பேசுபொருள்.

*இவரைப் பற்றி எத்தனையோ குற்றச் சாட்டுக்கள்....

👉இந்தக் குற்றச்சாட்டுகளின் பிண்ணனி என்ன ?

👉இவர் ஏன் குறி வைக்கப்பட்டார் ?

இவரை நன்கு அறிந்து நெருங்கிப் பகிழயவர்களில் நானும் ஒருவன். இவரது வைத்தியத் தொழில் பற்றிப் பேச முன் இவரது குணாதிசயங்கள், நடத்தைகள் பற்றிச் சொல்ல வேண்டியது தான் மிக முக்கியமாது.

தான் ஒரு Dr என்ற தலைக்கனம் ஒருபோதும் இருந்ததில்லை. யாரோடும் (படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் என்றில்லாது) ஒரே மாதிரி பழகும் குணம் இவரிடம் இருந்தது நான் கண்ட பெரும் வித்தியாசம். சன்மார்க்க விடயங்களில் அதீத ஈடுபாடுடையவர்.

இரவு Oncall வேளை இருந்தாலும் "சுபஹு"த் தொழுகைக்கு வருவார். அப்படி ஓய்வு பற்றி அலட்டிக் கொள்ளாமல் சுறுசுறுப்பானவர்.தன் மகனைக் கைககளால் அணைத்தபடி தான் பள்ளிக்கு வருவார். உதவி செய்வதில் முந்திக் கொள்வார்.

பாடசாலைக் கல்விக்கான வகுப்புகளுக்காக இவரது சொந்தப் பணத்திலிருந்து பல மாணவர்க்கு இன்னும் ATF மூலமாக பணம் போய்க் கொண்டிருக்கிறது. இம்முறை தனது சொந்தச் செலவில் 16 பள்ளிவாசல்களுக்குப் பேரீத்தம்ப ழம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

மாற்று மதத்தவர்கள் யாரும் வைத்தியசாலை வேலைகளில் தடுமாறும் போது தானாவே வழியச் சென்று உதவிடும் மனம் கொண்டவர். இதையெல்லாம் ஏன் சொல்ல வருகிறேன் என்றால், இப்படி மென்மையான குணமுள்ள படைத்தவனைப் பயந்து வாழும் ஒரு மனிதனால் எப்படிக் கருத்தடை என்ற கொடிய செயலுக்கு ஆளாக முடியும்?

இது இவரைக் கருவறுக்கக் கையாண்ட ஒரு திட்டமிடப் பட்ட மாபெறும் சதியேயன்றி வேறில்லை.

இவரது அணுகுமுறை, உதவிடும் தாராள மனது, அரசியல் பிவேசத்தில் (சொந்தங்கள், சார்ந்தோர், சேர்ந்தோர் எல்லாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாது) இவர் எடுத்த 53000 வாக்குககள், போன்றவைகளைப் பார்த்து பொறாமை கொண்ட சதிகாரக் கூட்டத்தினரின் திட்டமிடப் பட்ட அப்பட்டமான சதி தானிது.

ஆனால் இந்தக் கைது இவருக்கு தலைக்குனிவவைத் தந்தாலும் இன்று உலகளாவ ரீதியில் இவர் பிரபலம் அடைந்துள்ளார். இன்று இவர் மீது சுமத்தப் பட்ட குற்றங்களை நிரூபிக்க இயலாது அரசும், பாதுகாப்புப் பிரிவும் விழி பிதுங்கி நிற்கிறது.

இன்ஷா அல்லாஹ் இவர் விடுவிக்கப் படலாம். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அவருடைய( Dr) மனைவி (3)பிள்ளைகள் அனுபவிக்கும் வேதனை சொல்லிலடங்காது.

Asadh Mohamed

1 கருத்துரைகள்:

Gold get roasted to become a chain or negless

Post a comment