June 11, 2019

தமிழ் நாட்டு தவ்ஹீத் ஜமாத்தின் நடவடிக்கைகள், இலங்கைக்கு மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன

இலங்கையில் தீவிரவாத குழுக்கள் உருவாவதற்கு தமிழ் நாட்டை சேர்ந்த தீவிரவாத போதகர்களின் செல்வாக்கு முக்கிய காரணம்.தமிழ் நாட்டை சேர்ந்த தவ்ஹீத் ஜமாத்தின்  நடவடிக்கைகள்  இலங்கைக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என சிங்கப்பூர் பல்கலைகழகத்தின் பாதுகாப்பு விவகாரங்களிற்கான பேராசிரியர் ரொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்

  இந்துஸ்தான் டைம்சின்  பத்மா ராவே சுந்தர்ஜிக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அந்த பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது .

இலங்கையிலிருந்து சிரியாவிற்கும் ஈரானிற்கும் சென்று ஐஎஸ் அமைப்புடன் இணைந்து கொண்ட முதல் இலங்கை பிரஜை முகமட் நிலாம்.அவர் 2015 இல் கொல்லப்பட்டார் , இவர் கண்டி திரித்துவ கல்லூரியின் பழைய மாணவர்.

அவர் ஆறு மாதங்கள் மத்ரசாவில் கல்வி பயின்றார்,ஆனால் பல்கலைகழக கல்வியை விரும்பி பாக்கிஸ்தானில் உள்ள சர்வதேச இஸ்லாமிய கல்லூரியில் இணைந்து பட்டம்பெற்றார்.

இலங்கையில் தீவிரவாத குழுக்கள் உருவாவதற்கு தமிழ் நாட்டை சேர்ந்த தீவிரவாத போதகர்களின் செல்வாக்கு முக்கிய காரணம்.

தமிழ் நாட்டை சேர்ந்த தவ்ஹீத் ஜமாத்தின்  நடவடிக்கைகள்  இலங்கைக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஐஎஸ் அமைப்பு ஆசியாவில் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதால் அரச தலைவர்களும் மத தலைவர்களும் மாதத்திற்கு ஒருமுறையாவது சந்தித்து நிலவரம் குறித்து ஆராயவேண்டும்.

 ஐஎஸ் அமைப்பின் கொள்கை பரவுவதன்  காரணமாக எங்கள் தேசங்கள் அடுத்த ஐந்து வருடங்களில அழிக்கப்பட்டுவிடும்.

முஸ்லீம்கள் எங்கள் பிராந்தியத்தில் பின்பற்றி வருகின்ற பாராம்பரிய இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு வெளிநாட்டு கொள்கைகளால் ஆபத்து என்பதை ஆராய்ச்சிகள் புலப்படுத்தியுள்ளன.  இலங்கையின் ஐஎஸ் அமைப்பிற்கு பாக்கிஸ்தானுடன் தொடர்பில்லை இவர்களிற்கு இந்தியாவுடனும் மத்திய கிழக்குடனும் தொடர்புகள் உள்ளன.

  நிதி திரட்டுவது மற்றும் பயிற்சிகள் இலங்கையிலேயே இடம்பெற்றன.வனாத்தவில்லு நுவரேவியா அம்பாந்தோட்டை உட்பட பல பகுதிகளில் ஐஎஸ் அமைப்பினர் முகாம்களை உருவாக்கினர்.  குண்டுதயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை இவர்கள் இணையங்கள் மூலம் பெற்றனர்.குண்டுகளை தயாரித்தவர் முகமட் ஹஸ்தூன். மிகத்திறமையான இளைஞரான இவரை ஜஹ்ரான் தீவிரவாதமயப்படுத்தி தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

 இவரின் மனைவி புலத்சினி இந்துப்பெண்மணியான இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்.இருவரும் ஒன்றாக படித்தவர்கள்.

  தென்னாசியாவிற்கான ஐஎஸ் அமைப்பின் கிளையான ஐஎஸ் கொராசன் 2015 இல் உருவாக்கப்பட்டது.அந்த அமைப்பு அதன் பின்னர் இலங்கை உட்பட நான்கு நாடுகளில் தனது கிளையை ஏற்படுத்தியது.ஐஎஸ் அமைப்பு  பிராந்தியங்களில் தனது கிளையை ஏற்படுத்த விரும்புகின்றது.இந்த கிளைகள் பிராந்திய நாடுகளிற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தப்போகின்றன.

  பிராந்திய  அரசாங்கங்கள் ஐஎஸ் அமைப்பினை சிறிதளவும் அனுமதிப்பதில்லை என்ற கொள்கையை உருவாக்குவதுடன்  அந்த அமைப்பினால் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்வதற்காக கூட்டாக செயற்படவேண்டும்.

  இலங்கையின் அமைப்பு இந்த கிளைகளுடன் சைபர் தொடர்புகளை கொண்டுள்ளது என ரொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

5 கருத்துரைகள்:

போராசிரியர் பார்த்து அடித்து ஆகி இருப்பாரே .எருமை ISIS இயக்கம் இஸ்லாமியர்கள் இல்லை என்று ஓனக்கு தெரியாதா அல்லது நீ முட்டாளா ?

I can’t believe he passed even ordinary level exam

This is a consummate baseless allegation. Even a single person in Tamil Nadu never joined any teror group. Thus, this so-called professor is a nitwit in this regard.

IT is not of this Man's business. Who living in Singapore...
Stupid Professor. Better check all his certificates.

Post a comment