Header Ads



நிபந்தனைகளுடன் பிணை, வழங்கப்பட்டது ஷாபி ரஹீமுக்கு

தொலைத்தொடர்பு சாத­னங்­களின் தொடர்பை முடக்கும் சாத­னங்கள், வாக­னத்தின் வேகத்தைக் கணிக்­க­ மு­டி­யாமல் செய்யும் சாத­னங்கள் ஆகி­ய­வற்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் (முஸ்லிம் காங்­கிரஸ்) ஷாபி ரஹீமுக்கு பல நிபந்தனைகளுடன் பிணைவழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 7ஆம் திகதி நீர்­கொ­ழும்பு பெரிய­முல்­லையில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது பொது­ மக்கள் பாவ­னைக்குத் தடை­செய்­யப்­பட்ட, முப்­ப­டைகள் மற்றும் பொலி­ஸாரின் தொடர்­பா­டலை இடை­யூறு செய்­யக்­கூ­டி­ய ­அ­தி­சக்தி வாய்ந்த இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்கள்(ஜேமர்) மற்றும் வாக­னத்தின் வேகத்தைக் கணிக்க முடி­யாமல் செய்யும் சாத­னங்கள் ஆகி­ய­வற்­று­டன் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் ஷாபி ரஹீம் கைது செய்­யப்­பட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.