June 12, 2019

முஸ்லிம் அரசியல்வாதிகளை பார்க்குமிடத்து, இவர்கள் விழுங்கப்பட்டுள்ளார்களா என எண்ணத் தோன்றுகிறது..?

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை, பலிப்பூஜையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அதனால், அந்தப் பலிபூஜையை நடத்தியவர்கள் தொடர்பில் கண்டறிவதிலும் பார்க்க, பலிபூஜைக்கான தயார்ப்படுத்தல்கள் அல்லது அவ்வாறானதொரு பிரிவினைவாதத்தை விதை எங்கிருந்து விதைக்கப்படுகிறது என்பதைப்பற்றி கண்டறிவது தான் முக்கியமாகும். அவ்வாறான இடத்தை அல்லது அவ்வாறு விதைப்பவர்களைக் கண்டறிந்து அழிப்பதுதான் முக்கியமாகிறதென, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கே: ஞானசாரர் தேரர் என்பவர் யார், அவர் எப்படிப்பட்டவர்?

ஞானசார தேரர் என்பவர், இந்நாட்டு சங்க சபையின் மதச் சம்பிரதாயங்களுக்கு அமைய, துறவரம் பூண்ட தேரரொருவரவார். 2004ஆம் ஆண்டு வரையில், ஆசிரியராகப் பணியாற்றியவர். அதேபோன்று, அதிபராகவும் கடமையாற்றியவர். 1998 முதல் இன்று வரையில், ஒ​ரே நோக்கத்துக்காகச் செயலாற்றும் தேரராக இருக்கிறார். அவரைப் பற்றி மிகச் சரலமாகக் கூறுவதாயின், இந்நாட்டில் கஷ்டப்படும், நசுக்கி ஒடுக்கப்படும் அப்பாவி மக்களை, நல்லபடியாகக் கரையேற்றுவதற்காகப் பாடுபடும் தேரராவார். அவருடைய கருணை உள்ளம் எவ்வளவென்பது, பலருக்கும் விளங்காதிருக்கலாம்.

அதேபோன்று, மதப் பிரிவினைவாதம், கடும்போக்குவாத என்பவற்றுடன் போராடிக்கொண்டு இருப்பவர். இது, இன்று நேற்று அல்ல. ஆரம்பத்தில், கிறிஸ்தவ கடும்போக்குவாதிகளின் செயற்பாடுகளுடன் முரண்பட்டேன். இவ்வாறான 445 கிறிஸ்தவ கடும்போக்குவாத அமைப்புகள், இலங்கையில் செயற்பட்டன, செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. நூற்றுக்கும் அதிகமான, இஸ்லாமியப் பிரிவினைவாத அமைப்புகள், இந்நாட்டில் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், யட்டியாந்​தோட்டையிலிருந்து கொட்டகலை வரையிலும் வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும், நாட்டுக்கு மத்தியிலுமென அனைத்திடங்களிலும், சிங்கள பௌத்தர்கள் மாத்திரமன்றி, விசேடமாக தமிழ் இந்துக்கள், இந்த மதக் கடும்போக்குவாதிகள், பிரிவினைவாதிகளின் இரையாக மாறிக்கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறு இரையாகியுள்ள, சிங்களம், தமிழ் என்ற பேதமின்றி, அனைவரதும் கலாசார ரீதியிலான பாதுகாப்புக்காக முன்னிலையாகும் ஒருவர்தான், இந்த ஞானசார தேரர். காரணம், இந்தக் கலாசாரப் பன்முகத்தன்மை அ​ழிவதை நாங்கள் விரும்பவில்லை. இங்கு, கிறிஸ்தவ கடும்போக்குவாதிகளும் இஸ்லாமிய பிரிவினைவாதிகளும், ஒரே நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், ஒரேயொரு கலாசாரத்துக்குள், அனைத்தின மக்களையும் ஒன்றுதிரட்டும் முயற்சியிலேயே, இவ்விரு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான பிரிவினரை, கலாசாரப் பன்முகத்தன்மையை அழிக்கும் பிரினராகவே பார்க்கவேண்டி இருக்கிறது. அதனால்தான், அவர்களுக்கு எதிராகச் செயற்படவேண்டி இருக்கிறது.

கே: ஞானசார தேரரின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன?

இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும், சிரித்த முகத்துடன் இருப்பதைப் பார்ப்பதும் அனைத்து மக்களும், மூன்றுவேளை உணவுகளையும் உட்கொண்டு, சந்தோஷமாக வாழும் சூழலைப் பார்ப்பதும்,  அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி கிடைப்பதைப் பார்ப்பதும், அனைவருக்கும் வீட்டுரிமை கிடைப்பதைப் பார்ப்பதுமே, என்னுடைய ஒரே அபிலா​ஷையாகும். அது மாத்திரமன்றி, இந்த நாடு, நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகின்றது. ஒருபுறம் வர்க்க ரீதியிலான சட்டங்கள், மறுபுறம் மத ரீதியிலான சட்டங்கள் காணப்படுகின்றன. இந்நாட்டுக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்த, இவ்வளவு காலமும் இந்நாட்டு அரசியல்வாதிகள் தவறியுள்ளனர். அந்த வகையில், ஒரே நாடு, ஒ​ரே சட்டம், ஒரே தலைவர், ஒரே ஆணை என்ற இடத்துக்கு அனைத்து மக்களையும் கொண்டுவந்து, மக்களை ஐக்கியப்படுத்துவதே, என்னுடைய முயற்சியும் அதுவே எனது இலக்கும் ஆகும்.

கே: அண்மையில் நடந்த குண்டுத் தாக்குதல்களை, நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

உண்மையில் இதை, மிலேச்சத்தனத்தின் உச்ச கட்டமாகவே பார்க்கவேண்டி இருக்கிறது. இப்போதும் இந்த நாட்டுக்குள், சுமார் 20 நாடுகளில் தடை செய்யப்பட்ட நூல்கள், பயன்பாட்டில் இருக்கின்றன. இப்போதும் அவற்றை, கிராண்பாஸ் பகுதியில் கொள்வனவு செய்யலாம். சில புத்தகங்களை, மார்க்கு தேவாலயங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இது, இன்று நேற்று நடந்த பிரச்சினையல்ல. மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒருவகை புற்றுநோயாகும். இதை மிக விரைவில் நிறுத்தாவிடின், வியாபிக்க வாய்ப்புண்டு. அதனால், அதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கே: இவ்வாறான ​தாக்குதலொன்று இடம்பெறுமென எதிர்பார்த்திருந்தீர்களா?

இவ்வளவு சீக்கிரத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், இவ்வாறான தாக்குதல்களுக்கான முயற்சியொன்று பற்றி, 2012 முதலே அறிந்திருந்தோம். காரணம், இவர்களுக்கு வந்த பணம், அந்தப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசியல்வாதிகளின் உதவி நாடப்பட்டிருந்தமை, சமூகங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் உதாரணமாக: ஹலால் கலாசாரத்தைக் கொண்டுவந்தார்கள். புர்கா, நிகாப் என்ற உடைகளைத் திணித்து, மாறுபட்ட கலாசாரத்தை ஏற்படுத்தியமை, வங்கிகளை ஷரிஆ வங்கிகலாக்கியமை, அரபிப் பாடசாலைகள், மத்ரசாக்கள் போன்றவற்றைக் கொண்டுவந்து, இந்நாட்டுச் சமூகத்திலிருந்து அவர்களைப் பிரித்துக்கொண்டார்கள். அதனால்தான், கத்திக் கூச்சலிட்டு, இந்தச் சமூகம் மாறிக்கொண்டு இருக்கிறதென்பதைக் கூறினோம். இதன் உச்சகட்டமாக, ஆயுதங்கள் ஏந்தப்படும் வாய்ப்பிருப்பதாக, 2013 முதலே நான் கூறினேன்.

மஹரக​ம பிரதேசத்தில் ஒருமுறை பேசும்போது, இவ்வாறான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்காக, பௌத்தர்களுக்காக பொதுபல சேனா அமைப்பை உருவாக்கியுள்ள நிலையில், இந்துக்களுக்காக சிவசேனா ஒன்றையும் கத்தோலிக்கர்களுக்காக கத்தோலிக்க சேனாவையும் உருவாக்கி, மக்களைத் தெளிவுபடுத்துமாறு கோரினோம். இந்தப் பிரச்சினை, விரைவில் எங்களை நெருங்கி வருவதை அறிந்தே, இவ்வாறு கூறினோம். இந்தப் பிரச்சினையை, அரசியல்வாதிகள் மேற்கொள்ளவில்லை. அதனால், ஒவ்வொரு பொதுமகனும் பொலிஸ் உத்தியோகஸ்தராகச் செயற்பட வேண்டுமென்று அன்றே வலியுறுத்தினோம்.

கே: முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகிய விடயத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இந்தப் பிரச்சினை, தற்போது மிகப்பெரிய சிக்கலான இடத்துக்கு வந்துள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள், இப்படி ஓரிடத்துக்குள் குவிவதைப் பார்க்குமிடத்து, இஸ்லாமியப் பிரிவினைவாதிகளால், இவர்கள் விழுங்கப்பட்டுள்ளார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.

இஸ்லாமியர்களுக்கென்று, உலமா சபை என்றோர் அமைப்பு இருக்கின்றது. இது, இஸ்லாமிய மத நிபுணர்கள் இணைந்த அமைப்பாகும். இன்னொன்று, சூறா சபை என்றொன்று உள்ளது. இது இஸ்லாமிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு  ஆலோசனை வழங்குவதற்காகவே, இந்த சூறா சபை இருக்கின்றது. அப்படிப் பார்த்தால், இலங்கையில் இஸ்லாமிய அரசாங்கமொன்று இல்லை. அப்படியிருக்கும் போது, இலங்கைக்கு எதற்கு இந்தச் சூறா சபை?

இவ்விரு அமைப்புகளும் இணைந்துதான், அரசியல்வாதிகளை ஓரிடத்தில் குவித்துள்ளன. இந்த நடவடிக்கையினூடாக, இவர்கள் வஹாபிஸத்துக்கு எந்தளவு நெருங்கியிருக்கிறார்கள் என்பது புரிகிறது. இது, நாட்டுக்கு உகந்தது அல்ல. அதனால், தங்களுக்கான குழியைத் தாங்களே தோண்டிக்கொள்ளாமல், தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிசமைக்காமல், இந்த நாடு யாருடையது, நாங்கள் எங்கிருந்து வந்தோம், இங்கு எப்படி நாம் வாழவேண்டும், எதிரெதிராக இருந்து, இன்னும் இந்தப் பிரச்சினையை இழுத்தடிக்கத்தான் போகிறோமா, இழைத்த த​வறைத் திருத்திக்கொண்டு, பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்வது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

கே: முஸ்லிம் அமைச்சர்களின் இந்த முடிவுக்கு, ரத்தன தேரரின் போராட்டம்தான் வழிவகுத்தது எனலாம். நீங்களும், தேரர் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தீர்கள். ஏன் அப்படிக் குற்றச்சாட்டை முன்வைத்தீர்கள்?

நான், ரத்தன தேரரின் போராட்டத்தை அகௌரவப்படுத்தவில்லை. அவசரப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமென்றுதான் வலியுறுத்தினேன். என்ன செய்தாலும், அது பற்றி முதலில் பேசி, முடிவெடுத்துவிட்டுச் செய்வோம் என்றே கூறுகிறேன். மூன்று பேரை இலக்கு வைத்துக்கொண்டு, அவர் திடீரென அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் இருந்தால், இவர்கள் மூவரும் விலகிவிட்டால், பிரச்சினை முடிந்துவிடும் என்றுதான், சாதாரண மக்கள் நினைப்பார்கள். அதனால், தனிப்பட்ட சின்னச் சின்னப் பிரச்சினைகளைக் கொண்டுவந்துச் செயற்பட்டால், தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ​வேலைத்திட்டங்கள் குழப்பப்படும். அது, எமக்கு நாமே செய்துகொள்ளும் சேதமாகும். தவிர, எனக்கும் அவருக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை.

இந்த நாட்டில், இரண்டு வகையான பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, இஸ்லாமிய பிரிவினைவாதிகள் தொடர்பான பிரச்சினை. மற்றொன்று, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுகொள்ள முடியாமல் தள்ளாடும் அரசியல்வாதிகள் பற்றிய பிரச்சினையாகும். அதனால், அரசியல் பிரச்சினையைத் தனியாகவும் ம​ற்றைய பிரச்சினையைத் தனியாகவும்தான் நாம் பார்க்க வேண்டும். அதனால், அரசியல் பிரச்சினையோடு தொடர்புபட்டவர்களை ஏனைய பிரச்சினைக்குள் சிக்கவைத்துவிட்டால், இருக்கின்ற பிரச்சினை இன்னும் ​அதிகமாகும். அதனால், இந்த விடயங்களை நாம், கவனமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டும்.

4 கருத்துரைகள்:

who is the author of this post pls....He may be not in our planet earth..If he is one of us. He better ask forgiveness from Allah...Moreover, how could a responsible media like yours , can publish article like this?! Very strange indeed.....

he still talking foolish. he saying muslims came from somewhere, then he should know that he came from where? sri lanks is belong to every citizen of the country. he talking like it is his own home. if he talk such a foolish way and gather the Sinhalese then we also ready to face the consequence.

Why Ranil and MY 3 are not stopping this Budist Terrorist?? Why SB and Mahinda are approving his bullshit??

Post a comment