Header Ads



சஜீத்தின் கோரிக்கையிலேயே கபீர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்

- AAM. Anzir -

அமைச்சர் கபீர் காசிம் அமைச்சராக பதவியேற்றமை தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றமடைந்துள்ள நிலையில், இதன் பிண்ணனியில் சஜீத் பிரேமதாசா செயற்பட்டதாக நம்பகரமான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்.

அமைச்சராக கபீர் காசிம் மீண்டும் பதவியேற்க வேண்டுமென ,சஜீத் பிரேமதாசா பகிரங்க அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

அத்துடன் நேற்று செவ்வாய்கிழமை (18) தனது நம்பகரமான அரசியல்வாதிகளிடம், தாம் சஜீத் பிரேமதாசாவின் கோரிக்கையை ஏற்கவிருப்பதாக கூறிய நிலையிலேயே, இன்று (19) அவர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டமை கவனிக்கத்தக்கது.

ரணிலுக்கு அறிவிக்காமலேயே, மைத்திரியுடன் நேரடித் தொடர்புடன் கலந்த நற்புறவில் சஜீத் பிரேமதாசா 2 முஸ்லிம்களுக்கான அமைச்சுப் பதவியை பெற்றுக் கொடுத்திருக்கலாமெனவும் மேலும் அறிய வருகிறது.


2 comments:

  1. சரி சரி இனி என்ன ஹக்கீம் நானவையும் எடுக்க முடியா
    தா?

    ReplyDelete
  2. then his 10 demands? selfish and munafiks

    ReplyDelete

Powered by Blogger.