Header Ads



ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் என்பதாலேயே தேரர் உண்ணாவிரதம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையும் சூழல் உருவானதாலேயே ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.  

காலியில் 
 நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.  

அவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,  

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள சூழலில் ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 சிங்கள இனம் மற்றும் பௌத்த மதம் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் அவர், இந்த விடயத்தில் இன்னமும் கூர்மையாக சிந்தித்து நடந்துக்கொண்டிருக்க வேண்டும். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையும் என்ற எண்ணத்திலேயே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

3 comments:

  1. அவசரகால சட்டத்தில் இவனை கைது செய்து உள்ளே போடுங்கள்.அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் போது இந்தமதிரியான ஒன்று கூடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. அந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மாத்திரம்

    ReplyDelete
  3. அந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மாத்திரம்

    ReplyDelete

Powered by Blogger.