Header Ads



கபீரும், ஹலீமும் அமைச்சுப் பதவிகளை ஏற்றது எப்படி..? பாராளுமன்றத்திற்கு தெரியாதா..??


மீண்டும் ஹபீர் ஹசீம் அமைச்சுப்பதவியை ஏற்றது எவ்வாறு? ஒரு மாதகாலம் முடிந்துவிட்டதா ? அல்லது விசாரணை முடிந்துவிட்டதா? என எதிர்க்கட்சி உறுப்பினர் நிமலன்சா கேள்வி எழுப்பியுள்ளார்.

கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர், ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் நிமலன்சா,

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் முடியும் வரையிலோ அல்லது ஒரு மாத காலம் தாம் அமைச்சுப்பதவிகளை எடுக்கப்போவதில்லை என கூறி ஹபீர் ஹசீம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் இன்று பதவியை மீண்டும் ஏற்றது எப்படி? ஒரு மாதகாலம் முடிந்துவிட்டதா ? அல்லது விசாரணை முடிந்துவிட்டதா?

கடந்த ஈஸ்டர் தாக்குதலை அடுத்து குற்றவாளிகளை கண்டறியும் விசாரணைகள் முடியும் வரையிலோ அல்லது ஒரு மாதகாலத்திற்கு அமைச்சுப்பதவிகளை எடுக்க மாட்டோம் என கபீர் ஹாஷிம் உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் கூறினார்கள்.

ஆனால் ஹபீர் ஹசீமும் , ஹலீமும் அமைச்சுப்பதவிகளை எடுத்துள்ளனர். அப்படியென்றால் இவர்களின் ஒருமாத காலம் முடிந்துவிட்டதா அல்லது விசாரணை முடிந்து விட்டதா என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இக்கேள்விக்குப் பதில் வழங்கிய சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, இவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் தான் பதவி பிரமாணம் செய்துள்ளனர். ஆகவே உரிய நபர்களிடம் கேளுங்கள். இவர்கள் அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டமைக்கும் நாடாளுமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

No comments

Powered by Blogger.