Header Ads



முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அன்று இராஜினாமா செய்திருக்காவிட்டால் பாரிய கலவரம் ஏற்பட்டிருக்கும்

பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர் எதிர்வரும் ஏழாம் திகதி இந்நாட்டை சீர்குழைப்பதற்கும், பாரிய ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார். இதனை தடுக்காவிட்டால் இத்தனி மனிதன் நாட்டையும், சட்டத்தையும் கையிலெடுக்க சந்தர்ப்பமாக அமையும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுக் கூட்டம் இன்று கந்தளாயில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எமது அமைச்சர்களும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும், கடந்த மூன்றாம் திகதி இராஜினாமா செய்த போது இந்த அரசுக்கு பல நிபந்தனைகளை விதித்தோம். முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது,மத்ரஸாக்களை பாதுகாப்பது,கைது செய்யப்பட்டவர்களை விடுப்பது மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கு சட்ட அங்கிகாரம் வழங்க வேண்டும்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அன்று இராஜினாமா செய்யா விட்டால் இந்நாட்டில் பாரிய இனக்கலவரம் ஏற்பட்டிருக்கும்.

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது .இதனால் ஞானசார தேரரின் ஊர்வலம் தடுக்கப்படல் வேண்டும். இவை தொடர்பாக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும்,பாதுகாப்பு அமைச்சருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும்,இவ்விடயம் தொடர்பாக மகஜர் கையளிக்க உள்ளோம்.

இவ்விடயத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக இருக்கின்றோம்.இந்நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனாவே தீர்மானிக்க வேண்டும்.

எமது முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுத்தீனை விமல் வீரவங்க,எஸ்.பி.திஸாநாயக்க,மகிந்தானந்த அலுத்கமகே, அத்துரலிய ரத்ன தேரர்,மற்றும் ஞான சார தேரரும் படு மோசமான வார்த்தை பிரயோகங்களையும் முஸ்லிம் மக்களை இழிவுபடுத்தியும் வருகின்றார்கள்.

முஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதோடு,எமது முஸ்லிம் பெண்களின் ஆடை விடயம் இன்று சட்ட ரீதியாக அணியலாம் என்றொரு நிலைக்கு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. NICHAYAMAHA IWAI THADISHEIYAPPADA
    MAATTAZU.
    NANASARANAI VELIYIL VITTAZU
    IPPOLUZAVAZU PURIHIRAZA ?.

    ReplyDelete
  2. Make some arrangement to delay fuel shipment now itself. Country will be standstil.

    ReplyDelete

Powered by Blogger.