Header Ads



முஸ்லிம்களை வஞ்சம், தீர்க்கிறாரா மகிந்த...?

- A.L.Thavam -

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் பின்னர், அன்றைய தினமே அவரை சந்தித்த மூன்று எம்.பிக்கள் என்னோடு தொடர்பில் இருந்தனர். அவர்கள் எதிர்க்கட்சி தலைவரின் சந்திப்பில் இடம்பெற்ற பேச்சுக்களின் சாரம்சத்தை என்னிடம் கூறினர். அதன் சுருக்கம் இப்போது இங்கே கீழே தரப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவரின் உரையாகவே நான் உணர்ந்தேன். இதனை தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களுடனான தொலைபேசி உரையாடலிலும் சொன்னேன்.

என்னை பொறுத்தவரை எதிர்க்கட்சி தலைவரின் இவ்வுரையை அதிர்ச்சியான விடயமாக நான் பார்க்கவில்லை. இதுவொன்றும் Breaking news உம் இல்லை.

👉🏿 குதிரை கால்களால் எவரையும் உதைக்கும் என்று தெரியாதவர்களுக்கு இது புதிதான விடயமாக இருக்கலாம். 
👉🏿 நாய் குரைக்கும் என்று தெரியாதவர்களுக்கு இது புதிதாக இருக்கலாம். 
👉🏿 பாம்பு கடிக்கும் என்று தெரியாதவர்களுக்கு இது புதிதாக இருக்கலாம். 
ஆனால் எம்மைப் பொறுத்தவரை இது சாதாரண விடயமே.

கடந்தகால அனுபவத்தில் நாம் நன்றாக பாடம் கற்றிருக்கிறோம். எமது அனுபவத்தில் இவரை சரியாகவே விளங்கி வைத்திருக்கிறோம். எனவே, எம்மைப் பொறுத்தவரை இதுவொன்றும் தலைப்புச் செய்தியல்ல. ஆறாம் பக்கத்தின் அடியில் இருக்கும் ஆரவாரமில்லாத செய்தி. வாசிக்க நேரமும் நிதானமுமிருந்தால் மேலோட்டமாக தலையங்கத்தை மட்டும் வாசித்து புரிந்துகொள்ளக்கூடிய செய்தி.

அவரிலிருந்து முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளை தவிர்க்கவும் துடைக்கவும் முடியாது. அவருக்கு இப்போது முஸ்லிம் விரோத நிலைப்பாடு எடுக்க 03 காரணங்களுண்டு
1) 2015 இல் தன்னை தோற்கடித்த வஞ்சம் தீர்க்கும் தேவை 
2) 2019 இன் தேர்தலுக்கு சிங்கள வாக்குகளை கவரும் தேவை
3) 2018 இல் ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு முஸ்லிம் தலைமைகள் உடன்படாமைக்கு பழிதீர்த்தல்

இந்த 03 தேவைகளையும் முஸ்லிம்களுக்கு எதிரான அவரது நிலைப்பாடுகளாலேயே அடையப்பெறக்கூடியன. இவற்றை நாம் தெளிவாக தெரிந்துதான் வைத்திருக்கிறோம். அதனால் எதிர்க்கட்சி தலைவரின் இந்த பேச்சில் எமக்கு எந்த அதிர்ச்சியுமில்லை.

பின்னர் ஏன் அவரை சந்தித்தீர்கள் என எல்லோருக்குள்ளும் கேள்வி எழலாம். அவர் இப்போது எதிர்க்கட்சி தலைவர். அவர் சிங்களவர்களுக்கு மட்டும் எதிர்க்கட்சி தலைவர் அல்ல. இந்த நாட்டில் வாழும் எல்லா இனங்களுக்கும் அவர் எதிர்க்கட்சி தலைவர். அவருக்கு பொறுப்பிருக்கிறது. அந்த பொறுப்போடு நான் முஸ்லிம்களுக்காக பேச தயாராக இருந்தேன்; ஆனால் முஸ்லிம் தலைமைகள் என்னிடம் எதுவுமே பேசவில்லை என்ற; அவருடைய குற்றச்சாட்டுக்கூட இந்த தருணத்தில் நம்மீது வந்துவிடக்கூடாது என்பதில் ஒற்றுமைப்பட்டுள்ள நமது முஸ்லிம் தலைமைகள் மிகக்கவனமாக இருந்தனர்.

அதனால் அவரையும் சந்திக்க வேண்டி வந்தது. நமது தலைமைகள் அவர்களின் கடமையை சரியாகவே செய்தனர். அதில் பலன் கிடைக்குமென எதிர்க்கட்சி தலைவருடனான அவர்களின் சந்திப்பின் பின்னர் அவர்கள் அறவே நம்பி இருக்கவில்லை. ஏன்எனில் அச்சந்திப்பில் கூட எதிர்க்கட்சி தலைவர் முஸ்லிம் ஆதரவு நிலைப்பாட்டை அறவே வெளிப்படுத்தி இருக்கவில்லை. இராஜினாமா செய்த முஸ்லிம் தலைமைகள் எதிர்க்கட்சிக்கு மாறி ஆட்சியை கவிழ்க்க உதவவில்லை என்ற கடுப்பே எதிரொலித்தது.

அதனால், எதிர்க்கட்சி தலைவரின் கீழே உள்ள உரையையோ அல்லது அது தொடர்பான வீடியோ கிளிப்பையோ காணக்கிடைத்த போது சாதாரணமாகவே கடந்து செல்கிறோம்.

ஏன்எனில் அசல் மாறாது என்ற எங்கள் அடிப்படை நம்பிக்கையில் என்றும் உறுதியாக இருக்கிறோம். அவர் அவர்தான். அவரில் மாற்றம் தேட வேண்டாம்.


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தொடங்கிட்டான்யா தொடங்கிட்டான்

    ReplyDelete

Powered by Blogger.