Header Ads



ரத்தோட்டையில் ரதன தேரருக்கு ஆதரவாக, முஸ்லிம்களும் வீதியில் இறங்கி போராட்டம்

நகரில் இன்று அனைத்து கடைகளையும் மூடி முஸ்லிம்கள் உட்பட மூவின மக்களும் வீதியில் இறங்கி, அடிப்படைவாதிகளை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர்.

அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவு தெரிவித்து மாத்தளை, ரத்தோட்டை நகரில் இன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனியார் பேருந்து உரிமையாளர்களும் இன்று -02- சேவையிலிருந்து விலகி, தேரருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய மூவரையும் உடனடியாக பதவி நீக்குமாறு கோரி அத்துரலிய ரதன தேரரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனோர் அங்கமாகவே ரத்தோட்டை நகரில் இன்று அனைத்து கடைகளையும் மூடி முஸ்லிம்கள் உட்பட மூவின மக்களும் வீதியில் இறங்கி, அடிப்படைவாதிகளை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர்.

1 comment:

  1. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை பதவி நீக்கச் செய்யும் கோரிக்கைக்கு தென்னிலங்கை முஸ்லிம்கள் கடைமூடி ஆதரவு எனச் சொல்லும் போது ஒன்று மட்டும் புரிகிறது.அதுதான் முஸ்லிம்களின் உரிமைகளை அவர்கள் செரிந்துவாழும் கிழக்கு மாகாணத்தினால்தான் வென்றெடுக்க முடியும் என்ற செய்தி.

    ReplyDelete

Powered by Blogger.