Header Ads



பதறித்துடித்த முஸ்லிம்களே, எங்கே சென்றீர்கள்..? முடிந்தால் அவசரமாக ஓடிவாருங்கள்


கடந்த மே மாதம் 29ம் திகதி, அரச அலுவலகங்களில் அபாயா அணிவது தடை செய்யப்பட்ட circular வெளியிடப்பட்டதும், சகலரும் அடுத்தநாளே பதறியடித்தோம்.

உடனே அரசிலிருந்து வாய் ஒப்புதல் வந்தது, நாங்கள் இந்த circular ஐ வாபஸ் வாங்கப்போகிறோம் என்று.  ஆனால் 3 வாரமாகியும் இது வரை வாபஸ் வாங்கப்படவில்லை. 

அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்புரை 126(2) க்கேற்ப, ஒரு மாதகாலத்திற்குள் அடிப்படை மனித உரமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படவேண்டும். 

எனவே இன்னும் இந்த circular வாபஸ் வாங்கப்படாத நிலையில், இன்னும் ஒன்பது நாள் கடந்தால், இதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் என்ற வகையில், எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போய்விடும். ஒரு மாதத்தின் பின், இந்த circularஐ அவர்கள் அமுல் படுத்தினாலும் எம்மால் எதுவும் செய்யமுடியாத, கையாலாகாத நிலைக்கு நம் சமூகம் தள்ளப்படும்.

எனவே இன்னும் 9 நாளைக்குள் இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு நம் சமூகம் தயாராக வேண்டும். 

இதேவேளை, தேசிய பிக்கு சம்மேளனத்தின் தலைவர், இந்த circularஐ மாற்றக்கூடாது என்று அரசை கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

#ஞாபகமூட்டலுக்காக.

Athambawa Jaleel

No comments

Powered by Blogger.