Header Ads



மத பயங்கரவாதம் இனி, தனி நபராலும் இடம்பெறலாம் - சஹரான் குழு இன்னொருமுறை செய்ய முடியாது

சஹரான் மற்றும் ரில்வானின் பின்னர் இந்த அமைப்பிற்கு தலைமைத்துவத்தை எடுக்கவிருந்த நெளவ்பர் என்ற நபரை கைதுசெய்துவிட்டோம். இனிமேல் இவர்களால் அணியாக செயற்பட எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் மத ரீதியில் முன்னெடுக்கும் இந்த பயங்கரவாதம் தனி நபராலும் இடம்பெறலாம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்கும் விவாதத்தில் பதிலுரை ஆற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் 9 பெண்கள் உள்ளிட்ட 105 பேர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதை கூற முடியும். அதேபோல்  இந்த தாக்குதல் குறித்து எமக்கு சர்வதேச விசாரணைக் குழுக்கள் உதவி செய்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 

அதேபோல் சஹரான் அணியை நாம் முழுமையாக பிடித்துள்ளோம். சஹரானின் பின்னர் அவரது தம்பி ரில்வான் தலைமைத்துவம் எடுக்க இருந்தார். ஆனால் அவர் இறந்துவிட்டார்.  அவரின் பின்னர் நெளவ்பர்  என்ற நபர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் அடுத்த தலைமையை கையில் எடுக்க இருந்தவர். அதேபோல் குண்டு தயாரிக்க இருந்த நபர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது ஏன்  அவசரகால சட்டம் என்ற கேள்வி எழும். ஆனால் விசாரணைகளை நடத்த வேண்டும். இன்றும் சஹரானின் சகாக்கள் கைதாகி வருகின்றனர். ஒரு சிறு உதவி செய்த நபர்களையும் நாம் கைது செய்கின்றோம்.  

ஆகவே இந்த தேடுதல்கள் நடத்த மேலும் ஒரு மாதகால அவகாசம் வேண்டும். அதற்காகவே  சட்டத்தை நீட்டித்துள்ளோம். இன்னும் ஒரு மத காலத்தில் அவசரகால  சட்டத்தை  நீக்க நாம் நடவடிக்கை எடுக்க முடியும். எவ்வாறு இருப்பினும் கோவில்கள், பாடசாலைகள் மற்றும் உயரிஸ்தானிகர் ஆலையம்  ஆகியவற்றிற்கு  பாதுகாப்பு இன்னனும் உறுதிப்படுத்தபட வேண்டிய தேவை உள்ளது. ஆகவே ஒரு மாதகாலமேனும்  நீட்டிக்க வேண்டும் என நினைகின்றோம். 

இராணுவ  தளபதி கூறியது சரி இந்த தாக்குதல் எப்போதும் எங்கேயும் நடக்கலாம். இது மதம் சார்ந்த பயங்கரவாதம். ஒரு தனி நபர் எந்த வகையிலும் எதை ஆயுதமாக பயன்படுத்தியும் தாக்குதலை நடத்த முடியும். ஆகவே இனி எப்போதும் இந்த தாக்குதல் மாதிரி ஒன்று நடக்காது என கூற முடியாது. ஆனால்  சஹரான் போன்று ஒரு குழுவால் இதனை இன்னொருமுறை செய்ய முடியாது என்று உறுதியாக கூற முடியும் என்றார்.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

1 comment:

  1. Mr. Minister you should take all measures to eliminate on going Yellow Robe Terrorism on Muslim community in the Island, if you are a unbiased on your job. No body above the law.

    ReplyDelete

Powered by Blogger.