June 07, 2019

இலங்கையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, பொருளாதார தடைவிதிக்க நேரிடும் - 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரிக்கை


முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடக்கும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது.

சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு என்பது உலகில் பலமிக்க முஸ்லிம் நாடுகளை கொண்ட, முழு உலகத்திற்கும் அழுத்தம் கொடுக்கக் கூடிய சர்வதேச அமைப்பு என்பதுடன் இந்த அமைப்பில் 57 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.

சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் இந்த ஆண்டுக்கான கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற்றதுடன் அதில் அனைத்து உறுப்பு நாடுகளும் கலந்துக்கொண்டன.

பொறுமையானவர்கள், அமைதியான நாட்டவர்கள் என்று இலங்கையர்கள் பெற்றுக்கொண்டுள்ள நற்பெயரை தொடர்ந்தும் பாதுகாத்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் தவறினால், இலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் என்பதுடன் பொருளாதார தடைவிதிக்க நேரிடும் எனவும் சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது.

6 கருத்துரைகள்:

மாசா அல்லாஹ்

May i know the original source or link of this information (orginal letter)

இதன் மூலச் செய்தியைப் பகிரவும். ஊர்ஜிதத்துக்காக் கேட்கிறேன்

Is this reliable news or fake?

இலங்கை ஒரு ஏழ்மையான நாடு. தனது பொருளாதார வளர்ச்சிக்காகவும் மக்களின் சுபீட்சமான வாழ்க்கைக்காகவும் மிகமுக்கியமாக அயலவர்களை நம்பியே இருக்கின்றது. இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு நாடுகள் இலங்கையின் வளர்ச்சிக்குக் கொடுத்துள்ள சிறிய பெரிய கடன்களைவிட வட்டியில்லாக் கடன்களும் நாட்டின் பெரும் அபிவிருத்திக்காக கொடுத்துள்ள முழு ஒத்துழைப்புமே (free Financial Aid) குறிப்பிடக்கூடியவை. மட்டுமன்றி மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் சுமார் 6 இலட்சம் இலங்கையர் தொழில் புரிகின்றனர். அங்குள்ள பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்கள் இலவசமாகக் கல்வி கற்கின்றனர். மாத்திரமின்றி பல்வேறு இலவச சலுகைகளையும் அனுபவிக்கின்றனர். பல இலங்கையர் அமீரகம் உட்பட பல அரபு முஸ்லிம் நாடுகளில் கோடிக்கணக்காண டொலர் பெறுமதியில் வர்த்தக முதலீடுகளைச் செய்துள்ளனர். தற்போது எம் நாட்டில் ஏற்பட்டுள்ள இனதுவேச அடிப்படையிலான முரண்பாடுகள் மிக விரைவில் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலானோர் ஓட்டாண்டிகளாக ஆகிவிட்டனர். கடந்த மூன்று வருடங்களாக திட்டமிட்ட வகையில் சுழற்சி முறையில் நாடு எங்கிலும் நடைபெற்று வரும் இனக் கலவரங்களில் முக்கியமாக அம்பாறை திகன கண்டி மாவனல்ல போன்ற இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் சுமார் ஐநூறு கோடி ரூபா பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் சிங்கள பௌத்தர்களால் தாறுமாறாக அழிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. மேலும் சொற்ப நாட்களுக்கு முன்னர் குருநாகல் மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களைச் சுற்றி அமைந்துள்ள 36 கிராமங்களிலும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சொத்து அழிவு மாத்திரம் எண்ணூறு கோடியை எட்டியிருக்கும் என்று சொல்லப்படுகின்றது. மேற்படி அமைப்பு விரும்பினால் “முஸ்லிம்களுக்கு மாத்திரம்” என்ற Label ஐ ஒட்டி நான்கு இலட்சம் ஓட்டுச் சட்டிகளை (பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும்) இலங்கைக்கு அவசரமாக அனுப்பி வைத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

Post a Comment