Header Ads



50 ஆண்டு சரித்திரம்

அசத்துத்தீன் உவைஸி 4 வது முறையாக வெற்றிப்பெற்று பாராளுமன்றம் சென்றுள்ளார்.

ஆனால் அசத்துத்தீன் உவைஸியின் தந்தை சுல்தான் சலாஹுதீன் உவைஸி ஹைதராபாத் தொகுதியில் 6 முறை வெற்றிப்பெற்று பாராளுமன்றம் சென்றவர்.
தொடர்ச்சியாக 10 முறை, 50 ஆண்டுகள் ஹைதராபாத் தொகுதியை சரித்திர கோட்டையாக உவைஸியும், அவரது தந்தையும் அலங்கரித்து வருகின்றனர்.

ஹைதராபாத் பாராளுமன்ற தொகுதி மட்டுமல்ல, அதன் கீழே இருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளும் மஜ்லீஸ் கட்சியின் கோட்டையாக திகழ்கிறது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது மோடி ஹைதராபாத் தொகுதியில் நின்று வெற்றிப்பெற முடியுமா என்று மோடிக்கு சவால் விட்டிருந்தார். மோடி அந்த சவாலை ஏற்கவில்லை.

அசத்துத்தீன் உவைஸி தேசத்தை மிகவும் நேசிக்கக்கூடியவர்.

அதேசமயம் அசத்துத்தீன் உவைஸி கிரிக்கெட் விளையாடுவதிலும், பைக் ஓட்டுவதிலும் அலாதி பிரியம் கொண்டவராக இருக்கிறார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவையே பைக்கில் சென்று சந்தித்தார்.

ஹைதராபாத் நகர் முழுவதும் பைக்கிலேயே வலம் வருவதை பெரும்பாலும் கடைபிடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை நேரம் கிடைக்கும்போது விளையாடுகிறார்.

தலித் சமூக மக்களை மிகவும் நேசிக்கும் அவர் அனைத்து சமூகத்தினருடனும் மிகவும் இணக்கமாக இருந்து வருகிறார்.

பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பதவியேற்பின் போது அசத்துத்தீன் உவைஸியின் பெயர் அறிவித்தவுடன் பாஜக எம்.பி.க்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு கடுமையான எதிர்ப்பை காட்டினர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூலாக சென்று ஜெய் பீம், ஜெய் மீம், தக்பீர் - அல்லாஹு அக்பர், ஜெய்ஹிந்த் என்று அனைவரையும் கிரங்கடித்தார்.

அசத்துத்தீன் உவைஸி பாராளுமன்றத்தில் பேச தொடங்கினால், பலமான எதிர்கட்சி தலைவரை போன்று அவரது உரை கவனிக்கப்பட்டு வருகிறது.

யாரை பார்த்து நம் எதிரி கதறுகிறானோ அவரே தலைமை வகிக்க தகுதியானவர் என்று எதிரிகளே ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

- விகடன்

2 comments:

  1. தனி இந்துக்களின் அமைச்சரவை இந்தியா வாழ்க மோடி அரசு

    ReplyDelete
  2. ஆளைப் பார்க்காதீங்க. அவரால் மனிதர்களுக்கு என்ன கிடைத்துள்ளது. ஏன்ன கிடைக்கும் என்பதை மட்டும் பாருங்கள். ஆளை மட்டும் பார்ததோம்னா இலங்கையின் நிலைதான் வரும்.

    ReplyDelete

Powered by Blogger.