June 14, 2019

அரபு மொழியை வேண்டாம் என்பவர்களே,, இந்த 4 சவால்களையும் ஏற்றுக்கொள்ள தயாரா..?

கடந்த சில தினங்களுக்கு  அரபு எழுத்துக்களை தடை செய்தல் மற்றும் வரவேற்பு  பெயர் பலகையில் உள்ள அரபு எழுத்துக்களை தடை செய்தல் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதனை அறிய கிடைத்தது

இந்த ஜனநாயக நாட்டில் நாம் இலங்கையர் மாத்திரம்தான் என்ற கொள்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இதைவரை காலமும் நிறைவேற்றப்படாமல் இருந்த குறித்த பிரேரணை தற்போது மாத்திரம் இதனை கையிலெடுத்தமைக்கான காரணங்களை கூற முடியுமா?

அத்துடன் பின்வரும் தீர்மானங்களையும் நீங்கள் எடுக்காமைக்கான காரணத்தை கூறமுடியுமா என்று உண்மையாக இலங்கையை நேசிப்பவன் என்பதன் அடிப்படையில் தங்களிடம் கேட்க விரும்புகிறேன்

01. அரபு நாட்டில் இருந்து வரும் எரிபொருற்களை பாவிப்பதில்லை

02. அரபு நாடுகளுக்கு பணி புரிய சென்றவர்களை மீள எடுத்தல்

03. இதுவரை அரபு நாட்டில் இருந்து வந்த அனைத்து பணத்தினையும் மீள ஒப்படைத்தல்

04. இனிவரும் காலங்களில் அரபு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பாதிருத்தல்.

வெந்த புண்ணிலே அம்பை எய்துவது போல் உள்ளது உங்கள் தீர்மானம். இது இந்த சூழ்நிலையில் இனவாதத்தினையும் மக்களுக்கிடையில் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும் என்ற அச்சம் உள்ளது

றபீக் சர்றாஜ்

8 கருத்துரைகள்:

Picha thaan edukkonum edukkura pichaye pothaathu maanam keddavanukal

இந்த 4 தீர்மானங்களை எடுத்தால்,உண்பதற்கு உணவு கூட கிடைக்காது

ஒரு சுப்பர் நகைசுவை கட்டுரை.

அப்பபடியானால், ஜப்பானிய மொழி தெரிந்தவர்கள் தான் கார்கள் ஓட்டமுடியும்.
கொரிய மொழி தெரிந்தவர்கள் தான் சாம்சங் phone பாவிக்க முடியும்.
சீன மொழி தெரியாவிட்டால் கடையில் ஒரு குண்டு ஊசி கூட வாங்க முடியாது.
அமேரிக்க ஆதரவாளர்கள் மட்டும் தான் Facebook, emails, watsup.microsoft ......

@JM, இப்படியான முட்டாள் தன்மான கட்டுரைகளை பிரசுரிக்கவேண்டாம்.

இதற்கு comments வேற...ஹீ...ஹீ...

அது மட்டுமல்ல அரபு நாட்டு அணைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும், அரபியில் வரக்கூடிய visa களையும் நிறுத்த வேண்டும், மத்திய கிழக்கு அனைத்து தூதுவராலயங்களையும் மூட வேண்டும், இலங்கையில் உள்ள அரபு மொழிபெயர்ப்பு நிலையங்களையும் மூட வேண்டும்.
அரபு மொழியை நாட்டில் தடை செய்யும் உலகில் முதல் நாடு இலங்கை என்று நினைய்கிறேன்.
M.S.M Naseer.

Naadu uruppada aasay illatha samuthaayam..osiya thingirawantha intha wisyanakaluku powaan...sambaathikkirawanukkuthaan naatuda wali puriyum....
Etthunai makkal innaiku arabu naaduhalda ulacchi padikka wacchi ...nalla thuraihaluku padikka wacchaanga....
Unmayyaan makkalidam ippo elllaame maarittu...poykku emaanthu innum nastathula poha poraanga....

பிச்சை எடுக்க வேண்டியதுதான். ஆனால் பிச்சை கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

Jaffna Muslim ithu thevaiyatra katturai, katturaihalai pathivetrumpothu thanikkai seithu pathividungala, emakku quran othuvathatku Arabu therinthal pothum athai engum katchippaduththa thewai illai

நீங்கள் எல்லோரும் உண்மையிலேயே முட்டாள்களா ? அல்லது மற்றவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கிறீர்களா ?
01. எரிபொருள் எந்த அரபு நாடும் இலவசமாக கொடுப்பதில்லை.
02. எந்த அரபு நாட்டிலும் வேலை செய்யமல் இலவசமாக சம்பளம் தருவதில்லை
03. அரபு/முஸ்லீம் நாட்டில் இருந்து வந்த பணமெல்லாம் இங்குள்ள முஸ்லிம்களுக்கு மற்றும்
இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு நாச செயல்களை செய்வதற்க்காக மட்டுமே
வழங்கப்பட்டன. அவற்றை அவர்கள் மீளளிப்பதில் எமக்கு எந்த ஆற்சேபனையும் இல்லை.
04. இனிமேல் அரபு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பாமல் இருப்பதை பற்றி ஆலோசிக்கலாம் ;
இதன் பிறகு முஸ்லிம்கள் அனைவரும் கிறீஸ்தவ நாடுகளில் இருந்து வரும் கம்பியூட்டர் ,
இன்டர்நெட் தொழில் நுட்பம் , பெளத்த நாடுகளில் இருந்து வரும் வாகனங்கள், செல்
போன்கள், அது மட்டுமல்லாது தமது ஜென்ம விரோதியான இந்து நாடான இந்தியாவிலிருந்து
வந்த தமிழ் மொழி , அங்கு உற்பத்தி செய்யும் வாகனங்கள் , முச்சக்கர வண்டி என்பனவறை
பயன்படுத்துவதை தவிர்ப்பார்களேயானால் , நாங்களும் நிற்சயமாக தயார்.


கூழ்முட்டைகள் போன்று பதிவிடுபவர்களுக்கு தெரியாது அரபு நாடுகலிலிருந்து எரிபொருள் வேறு நாடுகள் வாங்காவிட்டால் அவர்கள் பாலை வனத்தில் பட்டினி கிடந்தது சாக வேண்டியதுதான்.

Post a comment