Header Ads



3 முஸ்லிம் அரசியல்வாதிகளையும் கட்டாய, விடுமுறையில் அனுப்புமாறு வடக்கு ஆளுநர் கோரிக்கை

அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு ஒருமாதம் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி போன்றோருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் என தென்னிலங்கையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் கொண்டுவரப்படவுள்ளன. நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களோடு இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூட்டு எதிர்க் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அமைதியின்மைக்கு இவர்களும் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு ஒருமாதம் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

10 comments:

  1. Mr Governor,
    You have been appointed as the Governor of Northern Province which is a political appointment to do service to the Northern people on behalf of the President. I am as a patriotic citizen of this country got confused on the authority you got to recommend to send the minister Rizard and the Governors Azath Saly & Hizbulla on one month compulsory leave. It looks like a barrowed one and essenced to the feeling of the people who are totaly blind on humanity.

    ReplyDelete
  2. வடக்கு ஆளுனரே நீங்கள் யார்? முஸ்லிம் அரசியல் வாதிகளை பதவி விலகச் சொல்ல, புலிகளுக்கு நீங்கள் உதவி செய்தீர்கள் என்று யாராவது பொய்க்குற்றச்சாட்டு சொன்னால் நீங்களும் பதவி விலக வேண்டுமே.

    ReplyDelete
  3. சமூகத்துக்காக குரல் கொடுத்ததுக்காகவா

    ReplyDelete
  4. இவருமாடா கெளம்பிட்டார்.......

    ReplyDelete
  5. I think the Governor thinking about a win win solution, it is not disgusted act, but if they do the same it will lead to a lot of unwanted results in current political climate???

    ReplyDelete
  6. நீ யாருடா இதை சொல்லுவதற்கு மடையா? உன் வேலையை பார் உன் தரத்தை தனக்குள்ள அதிகாரத்தைப் பார்

    ReplyDelete
  7. Still I dont have any idea who is this guy? where he is come from and what he is doing because he was popped up suddenly!

    ReplyDelete

Powered by Blogger.