Header Ads



3 முஸ்லிம் அமைப்புக்களுக்கு தடை, தொடர்புகளை பேணுபவர்களுக்கு 20 வருட சிறை - பாராளுமன்றம் ஒப்புதல்

இலங்கையில் மூன்று முஸ்லிம் அமைப்புக்களை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாதி மிலாது இப்ராஹிம், விலாயத் அஸ் செயானி ஆகிய அமைப்புக்கள் தடைசெய்யப்படுகின்றன.

இந்த அமைப்புக்களை தடைசெய்வது தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி பத்திரங்களை அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்பின்னர் இடம்பெற்ற விவாதங்களின் முடிவில் தடைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி குறித்த தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுபவர்களுக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட சட்டத்தில் இடமுண்டு என தெரியவருகின்றது.

1 comment:

  1. சரியான சட்டம்,20 வருட சிறை போதாது மரண தண்டனை தான் சரி.

    ReplyDelete

Powered by Blogger.