Header Ads



2 வது குழந்தையைபெற வைத்தியசாலை செல்லும், தாய்மாரை குடும்ப கட்டுப்பாடுசெய்ய நிர்ப்பந்திக்கின்றனர்

சிங்களவர்களின் சனத்தொகையை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார அமைச்சின் கீழுள்ள அரச குடும்ப நல சுகாதார பிரிவே ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

சிங்களவர்களின் சனத்தொகையை கட்டுப்படுத்தும் வகையிலான திட்டமிடப்பட்ட செயற்பாடு குறித்து தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இதனை அடிப்படைவாதிகள் செய்யவில்லை. இந்த திட்டமிட்ட செயலில் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அரச குடும்ப நல சுகாதார பிரிவே ஈடுபட்டுள்ளது.

இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ள வைத்தியசாலைக்கு செல்லும் தாய்மாரை குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு தாதியர்கள் கடுமையாக நிர்ப்பந்திக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அத போய் தாதியரிடம் கூறு அல்லது அதை திருப்பி மாற்றி எமது Muslim களின் தலையில் போடலாமல்லவா.உங்கலுக்குத்தானே எல்லாவற்றையும் Muslim கள் தலை மீது போடுவது கை வந்த கலையச்சே

    ReplyDelete
  2. உனக்கு எத்தனை பிள்ளைகள் என்று முதலில் சொல்லுப்பா அதன்பின் யோசிப்போம்.மற்றவன் பிள்ளை பெற்றால் உனக்கு பொருக்குதில்லையே
    சாமி.பாவம் நீ.

    ReplyDelete

Powered by Blogger.