Header Ads



பௌத்தர்களின் ஆதரவு ரத்ன தேரருக்கு, 2 முஸ்லிம் ஆளுநர்கள் பற்றி தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு சர்சைக்குறிய ஆளுனர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும். பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் ஆதரவு அத்துரலியே ரத்ன தேரருக்கு உள்ளது. எனவே பிரச்சினை தீவிரமடையாமல் இருப்பதற்கு ஜனாதிபதி சாதகமானதொரு தீர்வை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

ஆளுனர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி பதவி நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து அத்துரலியே தேரர் உண்ணாவிரத்தினை ஆரம்பித்துள்ள போதும், ஜனாதிபதி இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

4 comments:

  1. இப்படி ஒவ்வொரு முஸ்லீம் மந்திரிமார்களை விளக்கவேண்டும் வேண்டுமென்று ஒவ்வொரு காவியுடை அணிந்தவர்கள் உண்ணவிரோதம் இருந்தால் நாடு சர்வாதிகாரத்துக்கு செல்லும் அதோடு முஸ்லிம்கள் இனிமேல் பாராளுமன்றத்தில் இருக்கவே வாய்ப்பில்லாமல் போகும்.

    ReplyDelete
  2. உண்ணாவிரதம் இருந்து அரசியல் அதிகாரத்திலும் நிருவாக அதிகாரத்திலும் இருப்பவர்களை நீக்க முடியுமென்ற நிலை வருமாக இருந்தால் அது பிழையான முன்மாதிரியாக அமையும். தயாசிரி இது பெளத்த நாடு என்பதன் மூலம் அடுத்த இனம் அடிபணிந்து வாழ வேண்டுமென்ற நிலையை எதிர்பார்க்கின்றார்.சிலர் இது ஒரு ஜனநாயக சித்தார்ந்தத்தால் ஆளப்படும் நாடு என்பதை இலகுவாக மறைத்துப் பேசுகின்றனர் ;அது இனவாத சிந்தனையை மேலும் வளர்க்கிறது.அடுத்தவர்கள் 2ஆம் பிரஜைகள் என்ற நிலையை பெரும்பான்மையினரிடம் விதிக்கிறது.ஆனால் தம்மபால அமில தேர ர் போன்றோர் இது அனைவருக்குமான நாடு என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

    ReplyDelete
  3. விட்டுக்கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் சிறிய கிராமங்களை பெளத்த பயங்கர வாதிகள் அழித்து விடுவார்கள். அவர்கள் தப்புவதாக இருந்தால் பெளத்த மார்க்கத்துக்கு மாற வேண்டி வரும். அதை ராஜினாமா செய்வது புத்திசாலித்தனமானது .

    ReplyDelete
  4. Neethi irunthaal naadu nilaikkum....kaawikku 1 neethi....mattawangaluku 1 neethiyaaha irunthaal naadu munnettram kaanaathu mmmm

    ReplyDelete

Powered by Blogger.