June 28, 2019

22 இலட்சம் முஸ்லிம்களை பிரதிநித்துவம் செய்யும், ஜம்இயத்துல் உலமா மறுசீரமைக்கப்பட வேண்டும்

-நஜீப் பின் கபூர்-

அன்பார்ந்த உலமாக்களைப் பிரதிநித்துவம் செய்கின்ற உங்கள் அமைப்பின் பொதுக் கூட்டமும் நிருவாக சபைத் தெரிவும் இன்னும் சில தினங்களில் நடக்க இருப்பது பற்றி ஊடகங்களில் பார்க்க முடிந்தது. தற்போதய சூழ்நிலையில் இந்த ஜம்இயத்துல் உலமா சபை மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒரு சபையாக நமது நாட்டில் பார்க்கப்படுகின்றது. இதனை நீங்கள் அண்மைக்காலமாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றோம். இதனால் உங்கள் பார்வைக்கு சில விடயங்களை முன்வைக்கலாம் என்று எண்ணுக்கின்றோம்.

1.இந்த சபை என்பது இந்த நாட்டில் வாழ்கின்ற 22 இலட்சம் முஸ்லிம்களைப் பிரதிநித்துவம் செய்கின்ற ஒரு சபை என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

2.உங்களுக்குள்லேயே கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதைப்போல் உங்களுடன் முரண்படுகின்ற பல குழுக்கள் இந்த நாட்டில் இருப்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விரும்பியோ விரும்பாமலோ அவர்களையும் இந்த அமைப்பின் கீழ் ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் நீங்கள் உள்வாங்கிக் கொள்வது தொடர்பாகவும் தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்கின்றது.

3.பேராசிரியர் இஸ்மாயில் தனக்கு சுமக்க முடியாத ஒரு சுமையை இந்த சபை சுமக்கின்றது என்ற கருத்தை ஒரு குரோதத்துடன் பார்க்காது அதில் உள்ள அர்த்தத்தைப் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். சுமை என்ற வார்த்தைக்கு அங்கே பல அர்த்தங்கள். நேரடியாக சொல்வதானால் அறிவியல் விவகாரத்தை சுட்டிக்காட்ட முடியும்.

4.இன்று சில முஸ்லிம் நாடுகளில் வெறும் நான்கு ஐந்து இலட்சம் பேருக்கு ஒரு தேசத் தலைவர் அமைச்சரவை என்று இருக்கின்றார்கள். பக்கத்திலுள்ள மாலை தீவுவைக் கூட எடுத்துக் கொள்ள முடியும். எனவே 22 இலட்சம் என்பது ஒரு கணிசமான தொகை. இவர்களை நிருவாகிப்பது என்பது சாதாரண விடயமல்ல என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

5.இந்த சபையின் நிருவாகிகளாக வருகின்றவர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களில் மட்டுமல்லாது அனைத்து சமூக விவகாரங்களில் பரந்த அறிவு அவசியம். இது விடயத்தில் பலயீனங்கள் இருந்தாலும் அறிவூட்டல்கள் மூலம் இதனைச் சரி செய்ய முடியும். எதிர்காலத்திலாவது இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். 

6.வெள்ளி குத்பா பேருரைகள் விடயத்திலும் அதனை தேசிய மட்டத்தில் பரப்புரைகள் செய்வதிலும் ஒரு சரிபார்த்தல் இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகின்றோம். உயிர்த்த நாள் தாக்குதலுக்கு முன்னய வெள்ளி ஒரு வானொலி அலைவரிசையில் ஒரு உலமா உலக வரட்சி பற்றித் தனது பிரசங்கத்தில் உலக சனத் தொகை பற்றி அல்லது வரட்சி பற்றி சொல்கின்ற  போது அங்கு குறிப்பிட்ட சனத் தொகை மிகவும் அதிர்ச்சியான எண்ணிக்கையாக இருந்தது. இது உலக சனத் தொகையுடனும் பொருந்தாது வரட்சிபற்றி புள்ளி விபரங்களுடனும் பொருந்தாது. இது போன்ற நிறைய பிழையான தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதனை எவரும் காதில் போட்டுக் கொள்ளவதில்லை என்பது வேறு விடயம். ஆனால் இப்படி கருத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பது நமது சமயத் தலைவர்களின் அறிவுத் தன்மையை நகைப்பிற்கு இடமாக்கி விடும்.

7.குர் ஆன் சிங்கள மொழி பெயர்ப்பில் ராவய பத்திரிகைக் செய்தி பற்றியும் நீங்கள் ஒரு பதில் கொடுக்க வேண்டும். சிங்கள மொழியில் ஒரு வார்த்தை இருக்கின்றது கோயதோ யன்னே மல்லே பொல் என்று பதில் அப்படி இருக்கக்கூடாது.

8.மிகமுக்கியமாக குறிப்பாக தலைமை செயலாளர் பதவிகளுக்கு வருகின்றவர்கள் நிதானமானவர்களாகவும் சகல துறைகளிலும் நல்ல அறிவுள்ளவர்களாகவும் பேச்சாற்றல் உள்ளவர்களாக வும் ஆளுமை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இது காலத்தின் தேவை. ஆடைகளினால் ஆளுமையைச் சரி செய்ய முடியாது அது அறிவியல் இராஜதந்திரத்துடன் சம்பந்தப்பட்ட விடயம்.

9.பிர சமூகங்களுடன் புரிந்துணர்வுக்கான ஒரு வேலைத் திட்டத்தையும் வடிவமைக்க வேண்டி இருக்கின்றது.

10.சர்வதேச உறவுகள் விடயத்திலும் இந்த அமைப்பு தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். முஸ்லிம் நாடுகளை மட்டும் மையப்படுத்தியதாக இந்த வேலைத் திட்டம் அமையாது பரந்துபட்டதாக அது இருக்க வேண்டும். 

11.தலைமைத்துவம் என்பது கோலைகளின் கூடாரமாக இருக்கக்கூடாது. நெருக்கடியான நேரங்களில் அதற்கு துணிச்சலுடன் இராஜதந்திர ரீதியில் முகம் கொடுக்கின்ற வல்லமை அதற்கு இருக்க வேண்டும்.

12.இது போன்று இன்னும் எத்தனையோ விடயங்களைப் பேசலாம். சில விடயங்களுக்கு இது விடயத்தில் தமக்குள் ஆளணி பற்றாக் குறை இருப்பின் அமைப்புக்குப் புறம்பாக துறைவாரியாக வெளியிலிருந்து ஆலோசனை சபைகளை அமைத்துக் கொள்ள முடியும்.

13.பிரசமூகத்தினருடன் திறந்த மனதுடன் நல்லுறவு என்ற விடயம் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

14.தமது தலைமையகம் முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டு அது ஒரு அரச - சமூகத் தலைவரின் செயலகம் போல் வடிவமைக்கப்பட வேண்டும். அதனை புத்திஜீவிகளான ஆளணி நிருவாகிக்க வேண்டும். 

15.சமூக ரீதியிலான தவறுகள் இனங்காணப்பட்டு அவை சரி செய்யப்பட வேண்டும்.

16.நிதி விடயங்களில் தூய்மையும் பகிரங்கத் தன்மையும் தேவை.

16.தமது கருத்துக்களை (நடுநிலையான) சமூக மயப்படுத்துவதற்காக ஒரு ஊடகமொன்றை இந்த அமைப்பு வைத்திருக்க வேண்டியது காலத்தின் தேவை அது எப்படி நெறிப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் நிறைய பேச வேண்டி இருக்கின்றது.

19 கருத்துரைகள்:

Great,Great and Great article.

என்ன சொல்ல வருகிறார் இவர்?😔

"THE MUSLIM VOICE" has been asking/calling for this (மறுசீரமைக்கப்பட வேண்டும்) request/appeal for a long time. NOT ONLY HAS "THE MUSLIM VOICE" done so, but "THE MUSLIM VOICE" has been asking "DUA" from God AllMighty Allah after every daily prayers and Jumma's since the manner in which the so-called Mufthi Rizvi, the incumbent president started to flirt with politicians and made a "MOCKERY" of the "HALAL ISSUE" to amaze millions of rupees for his personal gains and benefits with the support of "DECEPTIVE/MUNAAFIK"
and "HOODWINKING" Muslim politicians and some professionals. The ACJU and Rizvi Mufthi still NOT answered the question raised by “The Muslim Voice” regarding their relationship with the Mahinda Rajapaksa regime during 2005 -1015. The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda.
The ACJU and Rizvi Mufthi should answer the questions raised by “The Muslim Voice” before talking about other matters. “The Muslim Voice” has been asking this/these questions many times before this too. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has “DEFAULTED” nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the “BIGGEST CRIME” under “ISLAMIC FAITH/BELIEF” of committing the Muslims using these Milk poder to “HARAM” a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the “BIGGEST CRIME” against the Sri Lankan Muslims just for “MONEY” and “FINANCIAL” gains. DEFINITELY A HIGH POWDERED OFFICIAL PROBE ON THE ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has to begin with immediate effect. A strong appeal has to be made by the Muslim community to President Maithripala Sirisena to conduct a probe on the ACJU, Insha Allah. It is time up that the Sri Lankan Muslims should stand up and face reality about this group of “DECEPTIVE” and “HOODWINKING” Ulema in Sri Lanka. Therefore The ACJU has to - மறுசீரமைக்கப்பட வேண்டும், Insha Allah.
Very soon, the privileges of the RIGHT TO INFORMATION BILL/ACT may induce Buddhist clergy and Extreme Nationalist elements, to use the law to probe into the earnings of the ACJU and make them become “TRANSPARENT” in their dealings, Insha Allah.
Noor Nizam – Convener “The Muslim Voice”.

Thaw & Jamathul Islam pondra kumbalhal alikka padanum. awarhaludayya piradinidihalum samudaaya amaippukkalilirundu seruppaala adiththu weliyetrapadanum

👍👍 An excellent timely piece of comment.

Dear ACJU, first of give up following Mathuhab and fitnaa.
Teach the real Islam and Hathees to the peoples and follow accordingly.
If you can't let SLTJ to teach the real Islam and Hathees.

To become ACU leaders he must have
-finished Islamic studies in a reputed center under
A ulama who fear allah and
-follows Quran and Sunna . Not a person who Morden educated and not ability to read and understand Quran as he raad it.
-mowing Hardee’s Science.
-able to perform 5 times prayer with Inman Namath.
-if we don’t select a person with good Islamic education he used his intellect in Muslims
Affairs and start to take his own decision.
-we need Morden education but allah prefer person who sacrifice his time and wealth for
Seeking Quran and Sunna.

@ Noor Nizam, I have seen many comments attacking ACJU by you and your so called Muslim voice. If you think something fishy has happened in ACJU during the said period, why can't you just file a police complaint? This is not a place to criticize people for your personal grudges.

சகோதரரே இது அரசியல் கட்சி அல்ல இது மார்க்கத்தை மக்கள் சருகும் சந்தர்ப்பங்களில் மக்களுக்கு சொல்லும் மார்க்க அறிஞர்களின் குழு

Why need ulama saba for our community .What they have done for our community. Nothing .But we need true ulama.As we arqu ACJU is not a important matter .we have enough politicians ,Interlactual,Dedicated people and many jamaath.Thhese are enough .

you must change yourself as a cultured...

ALso 2.2milluon MUSLIMS SHOULD
CORRECT OUR SELF.DONT BLAME ONLY ACJU.WE HAVE SO MANY MISTAKES OUR
LIFE.1.WE DONT PRAY 5TIMES FUNCTUAL2.WE DONT FOLLOW HARAM HALAL OUR OWN LIFE.3.OUR BYSUNESS CURRUPTED AND WATTY(RIBA)
4.BOSTING LIFE (AADAMBARAM)
5.WE ATE WASTING OUR MONEY TIME AND WEALTHY.6.WE DONT SUPPORT FOR NEEDY PEOPLE.7.OUR DEALING WITH PEOPLE VERY BAD.8.WE DONT FOLLOW OR RESPECT OUR COUNTRY RULES.
9.WE DONT CRY INFRONT OF ALLAH FOR OUR SIN.MY DEAR BROTHERS AND SISTERS IF WE CORRECT OUR SELVES IN THIS ALLAH WILL PROTECT US.

ACJU NO MEED TO PROTECT US
OUR BAD HABBIT IS WE DONT ACCEPT OUR MISTAKES AND SIN.SO DONT BLAME ACJU.BLAME OUR SELF

If ACJU is representing the entire Muslims, sisters also should be given some representation. Its high time for ACJU and Islamic leaders to start thinking in this matter.

An excellent piece comment. It should be taken into account profoundly.

yes pleas include our ladies in trustee boards of our mosques. Ulaga walamai kadaisiyil ithutha samoogam naaridum.

RIGHT OF REPLY, Insha Allah.
Brother Ghouse,
There is nothing "personal" about the ACJU/Rizvi Mufthi for me. "The Muslim Voice" is only trying to kindle the "aspirations and ispirations" of the Muslim community concerning this ACJU and Rizvi Mufthi in order to bring about a change and create a new "honest and dignified culture" within in the Sri Lanka Muslim Community. "THE MUSLIM VOICE" WISHES TO KEEP THISE ISSUES WITHIN OUR SELVES/OUR COMMUNITY AND GOING TO THE POLICE TO MAKE COMPLAINTS AS SUGGESTED BY YOU WILL COMPLICATE MATTERS FOR ACJU AND RIZVI MUFTHI. LOOK AT THE QUESTIONS RAISED AT THE PSC AND THE TV REGARDING THE TYPES OF EXPENSIVE VECHILES USED BY OUR ACJU MOULAVIS?
"THE MUSLIM VOICE" has been asking "DUA" from God AllMighty Allah after every daily prayers and Jumma's since the manner in which the so-called Mufthi Rizvi, the incumbent president started to flirt with politicians and made a "MOCKERY" of the "HALAL ISSUE" to amaze millions of rupees for his personal gains and benefits with the support of "DECEPTIVE/MUNAAFIK" and "HOODWINKING" Muslim politicians and some professionals. The ACJU and Rizvi Mufthi has still NOT answered the question raised by “The Muslim Voice” regarding their relationship with the Mahinda Rajapaksa regime during 2005 -1015. The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda.
The ACJU and Rizvi Mufthi should answer the questions raised by “The Muslim Voice” before talking about other matters. “The Muslim Voice” has been asking this/these questions many times before this too. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has “DEFAULTED” nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the “BIGGEST CRIME” under “ISLAMIC FAITH/BELIEF” of committing the Muslims using these Milk poder to “HARAM” a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. PLEASE KINDLY NOTE THAT THE ADVICE GIVEN BY THE ACJU/RIZVI MUFTHI TO THE MUSLIM MINISTERS, DEPUTY MINISTERS AND STATE MINISTERS HAS PLUNGED OUR COMMUNITY INTO GREAT POLITICAL AND COMMUNITY DISASTER. The Muslims in Sri Lanka need a "CHANGE" to the Leadership of the ACJU and our Political institutions, Insha Allah.
Noor Nizam – Convener “The Muslim Voice”.

எனக்கு தெரிந்த வகையில் இதில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் அஇஜஉ வில் நடைமுறைகளில் உள்ள விடயங்கள். எனவே கட்டுறைகளை எழுத முன் யதார்த நிலைகளை ஆராய்ந்து எழுதுவது பொருத்தமாகும்.

இஸ்லாமிய அறீவே இல்லாதவரின் கட்டுரையை பிரசுரித்துள்ளீர்கள்.

Post a comment