Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் நேர்மையானவர்களா? ஏப்ரல் 22 இலே பதவி விலகியிருக்க வேண்டும்

“கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களை பதவி நீக்க யாரும் என்னிடம் சொல்லி நாம் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதில்லை. தாமாகவே உணர்ந்துதான் அந்தப் போராட்டத்தை மேற்கொண்டேன்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“2015ம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் மட்டக்களப்பில் அதிகளவு மக்கள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது நான்தான். அதே ஆளுனரின் செயற்பாட்டை புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக நான் எதிர்த்தேன்.

கிழக்கு மாகாண ஆளுனரின் இனவாதச் செயற்பாடு வெட்ட வெளிச்சமானது என்பதை அவரே ஒத்துக் கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவரை பதவி நீக்க யாரும் என்னிடம் சொல்லி நாம் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதில்லை. தாமாகவே உணர்ந்துதான் அந்தப் போராட்டத்தை மேற்கொண்டேன்.

கடந்த காலத்தில் சில கட்டுப்பாடுகள் எமக்கிருந்தன. தற்போது அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. குறிப்பாக மகிந்த ராஜபக்ச சொல்லி உண்ணாவிரதம் இருந்தீர்களா என்றும் என்னிடம் சிலர் கேட்கின்றனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச கையொப்பம் இடவில்லை, நான் அதில் 12ஆவது நபராக கையொப்பம் இட்டேன். என்னைத் தெரிவு செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்குச் சார்பாக செயற்படுகின்றேன்.

அதனால் நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக நான் சொல்லி வருகின்றேன்.

முஸ்லிம் மக்களின் நலன் பற்றி முஸ்லிம் அரசியல் வாதிகளும், தமிழ் அரசியல் வாதிகளும் பேசினால் அவர்கள் நல்லவர்களாகவும், தமிழ் மக்களின் நலன் சார்ந்து தமிழ் அரசியல்வாதிகளாகிய நாங்கள் பேசினால் எம்மை இனவாதியாகவும் பார்க்கின்றார்கள். இதில் என்ன நியாயம் இருக்கின்றது?

“எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தமிழருடைய காளிகோயிலை தகர்த்து அங்கே மீன் சந்தை கட்டினேன், நீதிபதியை மாற்றினேன்,” என தெரிவித்துள்ளார். இதனை எந்த அரசியல்வாதியும் எதிர்த்துப் பேசவில்லை,

தற்போது குற்றம்சாட்டப்பட்டிருப்பது ஒரு அமைச்சர் மீதும், இரண்டு ஆளுனர்கள் மீதும்தான். ஆனால் தற்போது அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்திருக்கின்றார்கள். இதனை தமது சமூகத்திற்காகச் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு சமூகத்திற்காக செய்வதாயின் ஏப்ரல் 22ஆம் திகதி செய்திருக்க வேண்டும். ஏப்ரல் 21நடந்த சம்பவத்தால், தமிழ்ச் சமூகத்திற்கே பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

நேர்மையானவர்களாக இருந்தால் எமக்கு இந்த அமைச்சு வேண்டாம் என அன்றே அவர்கள் பதவி விலகியிருக்க வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. மக்களின் ஆதரவையிழந்து மானங்கெட்ட அரசியல் நடாத்தும் நீர் ஒரு பக்கா இனத்துவேசி. துவேசமற்ற மட்டக்களப்பு தமிழ் மக்கள் மத்தியில் துவேச நச்சு விதைகளைத் தூவ நினைக்கும் உம்மைப் போன்றவர்களுக்கு எதிர்காலத்தில் அம்மக்கள் தக்க பாடம் படிப்பிப்பர்.காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete
  2. 😁😁😁😆😆😆. உலக சாதனை..

    ReplyDelete
  3. இவரை பற்றி எந்த செய்தியையும் பிரசுரிக்க வேண்டாம்.இனவாதமும்,அடுத்த தடவை தமிழ் மக்களின் வாக்குகளுக்காகவும் இவர் இப்போது மிகப் பெரிய இனவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறார்.இப்பவே அவருக்கு பயம் பிடித்து விட்டது.அடுத்த முறை தமக்கு வாக்கு கிடைக்குமா என.தமிழ் மக்களின் வாக்குகளை பயன்படுத்தி அவர் யாருக்காக அந்த 55 நாட்கள் எவ்வளவு விலையில் அங்கே தாவினார் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.இப்போது அவர் ஆரம்பித்திருப்பது இனவாத நாடகம்.

    ReplyDelete
  4. this dog is barking soo much, pls ignore this dog

    ReplyDelete
  5. இந்த நாய் ஏதோ கொள்கை குன்று மாதிரி பேசிகிட்டு இருக்கான், எலும்புத்துண்டுக்கு கண்டவன் காலை நாக்கால் நக்கி விடுற நாய் பேசுது பதவி விலகுறது பத்தி...! காலக் கொடுமை....!

    ReplyDelete
  6. Parippu thinbaai mahane.....
    Unna yaaruda parliment anuppunai..neeye 1 makkan ...22 amaicharhal ellam awangada mini.a kudutthirukkanumaam..enna mairukkuda kudukkanum...naanga sirupaanmay..athila neeyumthaan marakkatha...engala nasukkura poochuhaluku neeyum 1 naal adankuwaay
    ...appo engada udawi thewappadum marakkatha ..onda diaryla eluthi way...intha comments a paartha...
    Nee arasiyal seyrawan bt..naanga arasiyal.padikkirawanga mind it...

    ReplyDelete
  7. Rishad இன் கருத்து உணமயனது.இந்த வியாழன், ரத்னா தேரர். ஞானசார தேரர் ஆகியோரின் இனவாத செய்திகளை பிரசுரித்து உங்கள் பக்கங்களையும் மக்களின் நேரங்களையும் வீணாக்க வேண்டாம்.இவர்கள் நாட்டுக்கு அவசியமில்லாதவர்கள்.

    ReplyDelete
  8. முரண்பாடான வாதம்.தங்கள் சமூகத்திற்கான போராட்டமாக இருந்தால் ஏப்ரல் 22ஆம் திகதி செய்திருக்க வேண்டும் என்கிறார். அந்த திகதியில் முஸ்லிம் சமூகத்திற்கு என்ன நடந்தது.அதன் பிற்பாடு முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள்தான் இந்த ஒன்றுபட்ட முடிவுக்கு வரக் காரணமாகியது.நீங்கள் எதிர்பார்க்காத்துதான் அதனால்தான் தர்க்கமற்ற முரண்பட்ட வாதம்.
    .

    ReplyDelete

Powered by Blogger.