Header Ads



சஹ்ரானின் தற்கொலை தாக்குதலை ஆசிர்வாதமாக பார்க்கிறேன், முஸ்லிம்களில் 10 வீதமானவர்கள் திருப்தி

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்தே இஸ்லாமிய அடிப்படை மதவாதம் அம்பலமாகியயதாக தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்தன தேரர், இதனால் தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீம் நடத்திய தற்கொலை தாக்குதல்களை ஆசிர்வாதமாகவே காண்பதாக தெரிவித்துள்ளார்.

பௌத்த தாய்மாரை பலவந்தமாக கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள மருத்துவர் சேகு சியாப்தின் ஷாபி மீதான விசாரணைகளில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இணைந்தால் முஸ்லீம் அடிப்படை மதவாதத்தின் உண்மை நிலைமையை உணர்ந்துகொள்ள முடியும் என்றும் அத்துரலியே ரத்தன தேரர் இன்றைய தினம் -21- சிறிலங்கா நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரரணை மீதான விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரானின் செயற்பாட்டினால் முழு முஸ்லிம் சமூகத்திலும் 10 வீதமானவர்கள் திருப்தியடைந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

“நாட்டில் செயற்பட்ட தீவிரவாத அமைப்புக்களை தடைசெய்துவிட்டால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாகிவிடுமா? என்பதை நாங்கள் பேசவேண்டும். இன்று ஆப்கானிஸ்தான் முழுமையாக தீவிரவாதத்தினால் அழிவை சந்தித்துள்ளது. முழு மத்திய கிழக்கும் அழிவை சந்தித்துள்ளன. பாகிஸ்தானில் கிராமப்பகுதிகளில் தீவிரவாதம் செயற்படுகிறது. இஸ்லாமிய தீவிரவாதம் என்பது என்ன? உலக வர்த்தக மையத்திற்கு தாக்குதலை நடத்திய மொஹமட் அட்டா ஏழையல்ல. செல்வந்தர். அல் கைதா தலைவர் பல சொத்துக்களுக்கு உரிமையாளர். சவூதி அரேபியாவிலுள்ள பல்வேறு அமைப்புக்கள், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானை கடந்து இப்போது ஸ்ரீலங்காவிலும் அந்த அமைப்பு நிதிகளை செலுத்தியிருக்கின்றது. அவை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது எமக்குத் தெரியாது. இப்போது சஹ்ரானின் குண்டுகளைப் பற்றி பேசுகிறோம். சஹ்ரானின் குண்டுகள் ஆசிர்வாதமாகவே நான் நினைக்கின்றேன். 

அந்த குண்டுவெடிப்பின் பின்னரே இந்த அடிப்படைவாதிகள் வெளியே வந்தனர். இஸ்லாமிய தீவிரவாதத்தின் பாரதூரத்தை அறிந்துள்ளோம். இப்ராஹிமின் புதல்வர்கள் செல்வந்தர்கள். வறுமைக்காகவா குண்டுகளை வெடிக்கச் செய்தனர்?. இல்லை. எனவே அடிப்படைவாதத்திற்கு நோக்கம் உள்ளது. அல்லாஹ்வுக்காக பலியாகினால் தங்களுக்கெதிரான இனங்களை அழிக்க முடியும் என்கிற அடிப்படைவாதம் உள்ளது. ஹக்கீமுக்கு ஒன்றைக் கூறுகிறேன். வேற்று மதத்தினரின் விக்கிரங்களை உடைக்கும்படியும், அவற்றை அழிக்குமாறும், ஜிஹாத் அவற்றிற்கெதிராக போரை தொடுக்க முடியும் என்றும் புனித குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எமது பௌத்த தர்மத்தில் வேற்று மதங்களுக்கு எதிராக ஜிஹாத் போர் தொடுக்குமாறு கூறப்படவில்லை. எனவே சஹ்ரானின் குண்டுவெடிப்பை அடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திலும் 10 வீதமானவர்கள் திருப்தியடைந்திருப்பார்கள். தமிழ் இணையத் தளங்களைப் பார்த்தால் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவிதமான அரசியல் செய்துகொண்டிருக்கின்ற நிலையில் வெளியே இன்னுமொரு செயற்பாடு இடம்பெறுகிறது”.

இதேவேளை குருநாகல் போதனா வைத்தியசாலை மருத்துவர் ஷாபிக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் விவகாரத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்துகொண்டால் அதன் உண்மை நிலைமையை உணர்ந்துகொள்ள முடியும் என்று ரத்தன தேரர் குறிப்பிட்டார்.

“மருத்துவர் ஷாபியின் விவகாரத்தை எடுத்துக் கொண்டால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 30 முஸ்லிம்களுக்கு அவர் சத்திரசிகிச்சை செய்தால் அந்த 30 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ள போதிலும் சிங்கள பௌத்த தாய்மார் 30 பேரும் மலட்டுத்தன்மையை அடைந்துள்ளனர். சிரேசியன் முறையை மேற்கொள்வதற்கு குறைந்தது 30,40 நிமிடங்கள் எடுக்கும். ஆனால் இவருக்கு வெறும் 10 நிமிடங்களே செல்கின்னற. அறிக்கைகளில் இவை உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியில் பலம்வாய்ந்த ஒருசிலர் ஷாபி மருத்துவர் விவகாரத்தில் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இதனை கட்சியின் தலைமை கவனத்திற்கெடுக்க வேண்டும். மருத்துவர் ஷாபி விவகாரத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து விசாரணை செய்தால் உண்மையை உணரமுடியும். சாதாரணமாக அரச மருத்துவமனைகளில் சிசேரியன் முறை 28,38 வீதமே இடம்பெறும். ஆனால் மருத்துவர் ஷாபியின் கீழ் மருத்துவமனையில் 58 வீதம் இடம்பெற்றிருக்கிறது. சிங்கள மக்களை அழிக்கின்ற இந்த குற்றச்சாட்டை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தில் திணிக்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

5 comments:

  1. முதலில் இந்த மடையனுக்கு Dr சாபி எப்படிப்பட்ட ஒரு வைத்தியர் என்றே தெரியவில்லை. அவர் ஒரு சாதாரண SHO post இல் உள்ளவர். அவரால் சீசரியன் பற்றி தீர்மானிக்க முடியாது. அவருக்கு பொருப்பான VOG தான் அதை முடிவெடுப்பார். இந்த சாதரண அறிவு கூட இல்லாமல் இந்த பிக்கு சும்மா கத்தி காலத்தை வீனடிக்கது. பாவம். இவரை அறிவுருத்த யாரும் இல்லையா.

    ReplyDelete
  2. என்னா அறிவு

    ReplyDelete
  3. எல்லாவற்றிற்கும் அல்லாஹ்விடம் தீர்ப்பு இருக்கின்றது. பத்து குற்றவாளிகளைத் (Culprits) தண்டிக்க இரண்டு நல்லவர்களை (Innocents) சந்தேகப்பட வைப்பான். சில நல்லவர்களைக் காப்பாற்ற சில குற்றவாளிகளை வீதியில் சுதந்திரமா நடமாடவிடுவான். எல்லாவற்றிற்கும் தீர்ப்பு இருக்கின்றது. அந்தந்த நேரத்தில் அது நடந்தே தீரும். அந்த சுழிக்குள்ள எவன் மாட்டுப்படுகிறானோ அவன் சுக்குநூறாகப் போய்விடுவான். இது வரலாறு எங்களுக்குத் தொடர்ச்சியாகக் கற்றுத் தரும் பாடம்.

    ReplyDelete

Powered by Blogger.