Header Ads



எமது உரிமையில் கை வைத்தால், ஜனநாயக முறையில் போராடுவோம் - SLTJ எச்சரிக்கை

இன்றைய தினம் 31/05/2019 பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 29.05.2019 என்ற திகதியிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை ஒழுங்கு குறித்த சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக அரச உத்தியோகத்திலுள்ள பெண்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒசரி)அணிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பு முஸ்லிம் பெண்களின் ஆடை முறையை குறிவைப்பதுடன் எமது உரிமையைப் பறிக்கும் அறிவிப்பாகவே அமையப் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பை ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
அன்மை காலமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரன சூழ்நிலையை கருத்திற் கொண்டு அரசு முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைக்கும் காரியத்தில் தொடர்ந்து ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.

எமது நாட்டில் மூன்று தசாப்தங்களாக தாண்டவமாடிய தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்து நாட்டின் பாதுகாப்பை வெகு விரைவாக உறுதி செய்வதற்கும் முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு அபாரமானதாகும்.

அதே நேரம் முஸ்லிம்களில் எவரும் கடுகளவும் திவிரவாத செயலை ஆதரிக்காமலும் அதற்கு ஒத்துழைக்காமலும் இருக்கும் நிலையில் அரசு நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை பழிவாங்கும் விதமாக முஸ்லிம்களின் உரிமையில் கைவைத்து அரசியல் செய்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பாதுக்காப்பை உறுதி செய்வதற்காக சேலை அணிய சொல்கிறோம் என்பதும் எந்த விதத்திலும் அறிவுபூர்வமான செயலாக தெரியவில்லை. திவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆடை ஒரு பொருட்டே அல்ல.

இதற்கு முந்தய காலத்தில் தீவிரவாதிகள் கர்பினி பெண்கள் போன்றும் வேடம் போட்டு திவிரவாத செயலில் ஈடுபட்டுள்ளார்கள். அதற்காக பெண்கள் குழந்தை பெற்றெடுக்க கூடாது என்றோ அரச ஊழியர்கள் கர்பினியாக இருக்க கூடாது என்றோ அது நாட்டின் தேசிய பாதுக்காப்பிற்கு பங்கம் என்றோ யாரும் கூறமாட்டோம். 

எனவே இறுதியாக நடத்தப்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கும் முஸ்லிம்களின் ஆடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான் உண்மை. எனவே இதை காரணம் காட்டி முஸ்லிம்களின் உரிமையைப் பறிப்பதை கடுகளவும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்துடன் குறித்த சுற்றறிக்கை முஸ்லிம்களின் ஆடை முறையான அபயா அணிவதைத் தடுக்காது முஸ்லிம்கள் அபயா அணிந்து பணி புரியலாம் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவித்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

அது தான் உண்மை என்றால் குறித்த சுற்றறிக்கையை சரி செய்து மீண்டும் வெளியிடுமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறோம். வெளிடாத பட்சத்தி ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களின் உரிமைக்காக சட்டரீதியாக போராடுவோம் இன்ஷா அல்லாஹ்.

எந்த காரணத்தாலும் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம். நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு ஜன நாயக ரீதியில் உரிமைக்காக போராடுவதில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் துளியும் பின் வாங்காது என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
M.F.M பஸீஹ் M.I.Sc
செயலாளர் 
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.

6 comments:

  1. இன்சா அல்லாஹ

    ReplyDelete
  2. Thowheed groups are the root cause for all these kinds of problems.

    ReplyDelete
  3. முதலில் பல வகையான உங்கலுக்குல் உள்ள உட்பூசல்கலை முடிவுக்கு கொண்டு வந்து,பல துண்டுகளாக பிரிந்திருக்கும் நீங்கள் ஒண்றாக இணையுங்கள்.நீங்கள் பல பிரிவுகளாக பிரிந்து இருக்கும் காரணத்தை எனது சிங்கள நண்பர்கள் கேட்கைரார்கல்.ஆனால் என்னிடம் பதில் இல்லை.எனவே அடுத்த மதத்தினருக்கு மிகப் பெரும் கேள்வியும்,சந்தேகமும் உங்கள் தவ்ஹீத் பிளவுகளை பார்க்கும் அவர்களுக்கு.

    ReplyDelete
  4. neengal poradungal nichayamaha alla muslimgalum iyakka sarfu illamal ungalodu iruparhal insha allah

    ReplyDelete
  5. தயவு செய்து UTJ (United Thowheed Jamath)வில் இணைந்து பயணிக்கவும். இது முதலாவது கோரிக்கை.. பின்னர் ACJU வும் UTJ உம் இணைய வழி செயுங்கள்..

    ReplyDelete

Powered by Blogger.