May 16, 2019

SLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றதுஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

குருநாகல் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படப் போவதுமில்லை.....

எமது நாட்டிற்கு விசுவாசமான குடிமக்களாக இருப்பதற்கு இன்னும் எத்தனை விடயங்களில் நாம் குட்டக் குட்டக் குணியப் போகிறோம். நாம் பழிவாங்கப் போவதில்லை, ஆயுதப் போராட்டம் செய்யப் போவதில்லை. ஆனால் எமக்கான உரிமைகளை எப்போதும் போல் இனியும் இழக்கக்கூடாது.

அஸ்ஸலாமு அலைக்கும்

வருடா வருடம் இலங்கைக்கான இலண்டன் தூதரகம் முஸ்லிம்களை அழைத்து இப்தார் நிகழ்வு நடாத்தி வருவதை அனைவரும் நன்கறிவீர்கள். திகண கலவரத்திற்கு நஷ்ட ஈடு கோரியும், கலகக்காரர்களுக்கு உரிய தண்டனைகளைக் கோரியும் தூதரகத்தினுடை கடந்த வருட இப்தார் நிகழ்வை எமது SLMDI UK அமைப்பு பகிஷ்கரித்திருந்தது.

அவ்வகையில் எதிர்வரும் 22ம் திகதி தூதரகத்தில் இடம்பெறவுள்ள இப்தார் நிகழ்வையும் இன்ஷா அல்லாஹ் எமது அமைப்பு பகிஷ்கரிக்கின்றது. எமது மக்களுக்கான போராட்டத்தில் என்றென்றும்  எமது அமைப்பு முன்நிற்கும். இன்ஷா அல்லாஹ்.

- SLMDI UK


7 கருத்துரைகள்:

நல்லவிடயம். இருந்தாலும் நஷ்டஈடு வழங்கினால் மாத்திரம் சரியா? முஸ்லிம் சமூகமாக நமது கடமைகள் என்ன?
இனிமேலும் கோழைகளாகவே இருப்பதா? அடித்து தீயிட்டு கொழுத்திட்டு போங்கடா என்று வாய்பார்த்துவிட்டு பின் ஒப்பாரி வைப்பதா?
இல்லை நாம் ஒன்றுபட்டு இனி இவ்வாறான சந்தர்பங்களில் நாம் எவ்வாறு எங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என யோசித்து புத்திசாதுர்யமாண முடிவுகளை எடுப்பதா?

முஸ்லிம்களே இனிமேலும் சகஜீவன என்ற பேரில் இந்த வெசக்கூடு கட்டுவது , பள்ளியில் பன ஓதுவது, தன்சல் கொடுப்பது, அரசியல்வாதகளின் பிறந்ததினத்தில் அவர்களுக்காக பள்ளியில் துஆ கேற்பது போன்ற அல் குர்ஆனுக்கும் சுன்னாவிற்கும் மாற்றமான காரியங்களை செய்து மென்மேலும் அல்லாஹ்வின் கோபப்பார்வைக்கு ஆழாகாதீர்கள்.

அல் குர்ஆன்
2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.


அடிவாங்கிய இலங்கை முஸ்லிம்கள் இப்போதும் அரசாங்கத்திற்கு 100% ஆதரவு
(all 21 Muslim MPs are still with Govt).
ஆனால், London யில் மட்டும் பிரியாணி வேண்டாமாம்.

உங்கள் எதிர்ப்புகள் நம்பும்படியாக இருக்கவேண்டும், நாடகம் மாதிரி இருந்தால் எப்படி?

தமிழர்கள் எவ்வாறு தங்கள் பிரச்சினைகளை சர்வதேசத்தின் முன் கொண்டு செல்கிரார்கலோ அது போல ஏன் உங்கள் அமைப்பு ஜெனிவா முதல் அனைத்து நாடுகளின் தூதுவராலயங்கலுக்கும்,அனைத்து விதமான NGO,தன்னர்வ தொண்டு நிறுவனங்களுக்கும் எமது பிரச்சினைகளினை கொண்டு செல்ல முடியவில்லை

நண்பரே, இஸ்லாம் நெகிழ்வு தன்மை கொண்ட மார்க்கம் எந்த சூழலில் எப்படி இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றி வாழ வேண்டும் என்கிற வழிகாட்டல்கள் இருக்கின்றன. அவைகள் பற்றி எல்லோரும் ஆய்வு செய்யவும் முடியாது குறிப்பிட்ட தேர்ச்சி மிக்க ஒரு குழுவொன்றே அதனை ஆராய்ந்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

அது மேற்கொள்ளப் படுமா? இல்லையா? அல்லது சாத்தியமா? என்பதெல்லாம் வேறு விடயம்.ஆனால் மக்கள் வழிகாட்டப் பட வேண்டும்.

இதனை புரிந்து கொள்ளும் மனோநிலை அநேகருக்கு இல்லை என்பது எனது அவதானம்.

In my opinion in Europe we have to organise mor professional to handle the situation in Sri Lanka. We need to learn from the othe community how they use foreign power to
Give force to Sri Lankan govt. we need a organisation for while Europe cosiest educated
And have knowledge of professionally handle the situation and the people.

தாங்கள் மட்டும் தான் மேன்மையானவர்கள் நாங்கள் மட்டும் தான் சுவர்க்கம் போகின்றவர்கள் மாற்றாருடன் கதைப்பதும் சிரிப்பபதும் புசிப்பதும் இஸ்லாத்துக்கு முரணானது என்று பிற்போக்குவாதம்
பேசிக்கொண்டிருந்தால் சுற்றியிருப்போார் அனைவரும் எதிரியாகவே இருப்பர். இப்பேச்சு இருக்கும் வரை மற்றவர்களுடன் எமது பண்பாடுகளுடன் இலங்கைக்கு ஒத்துப்போகும் படியான எமது கலாசாரத்துடன் வாழப்பழகாது இருப்போமாயின் நெருக்குவாரம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்படிக்கூறித்திரிந்த எருமைகள் சில செத்துப் போய்விட்டன இருப்பவர்கள் சிலரை கடுமையான சட்டங்களைக் கொண்டு வீட்டோடு உங்கள் வணக்கங்களையும் பிரசாரங்களையும் வைத்துக்கொண்டு சுவர்க்கத்துக்குப் போங்கள் என்று கூறும் நாள் இலங்கையில் மிக விரைவில் வரும். மற்ற சமூகத்துடன் வாழ உங்களுடைய குர்ஆன் இடம்தராவிட்டால் இடம் தரும் இடத்துக்கு சென்று வாழுமாறே வீரவன்சவும், துமிந்த திசநாயக்கவும் கூறியிருக்கின்றார்கள். எதிர் காலத்தில் இன்னும் பலர் கூறுமளவுக்கே இலங்கை முஸ்லீங்களின் கதை பேச்சு எழுத்து நடைமுறை காணப்படுன்றது. "எனக்கு எல்லாம் தெரியும் என பேசிக்கொண்டிருப்பவனுக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்களாம் பகைவர்கள்தான் இருப்பார்களாம்" இச் சூழலையே இலங்கை முஸ்லீங்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். அவனவன் மார்க்கம் அவனவனுக்கு புனிதம் அதனை தாக்கிப் பேசினால் எவனுக்கும் பிடிக்காது இஸ்லாமியருக்கு ஒரு நீதி ஏனையவர்களுக்கு ஒரு நீதியா?

தம்பி அஜன் 30 வருடங்கள் அடிபட்டும் இபோதும் சம்பந்தர் முதல் கருணா,டக்லக்ஷ் வரை நீங்களும் அவ்வப்போது மாறி மாறி அந்த இரு கட்சிக்கும்தான் வால் ஆட்டிக்கொண்டிருக்கிரீர்கல்

Post a Comment