Header Ads



நீர்கொழும்பு தேவாலயத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற, ஊடகவியலாளர் MZ ஷாஜஹான் திருப்பி அனுப்பிவைப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தில்  நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் மரணித்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக விசேட திருப்பலி  வியாழக்கிழமை  (9) மாலை 5 மணியலவில் இடம்பெற்றது.  இந்த நிகழ்வு கர்தினால் மல்கம் ரஞ்சித்  ஆண்டகை  தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வை செய்தி சேகரிக்கச்  சென்ற வீரகேசரி , விடிவெள்ளி, மெட்ரோ நிவ்ஸ், சிரஸ மற்றும் சக்தி தொலைக்காட்சி ஆகியவற்றின் பிராந்திய ஊடகவியலாளரான எம்.இஸட். ஷாஜஹான் செய்திசேகரிக்க இடமளிக்கப்படாமல் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படடுள்ளார்.  தேவாலய நிருவாகத்தினர் பாதுகாப்புக் காரணமாக முஸ்லிம் ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க இடமளிக்க முடியாது என்று தெரிவித்து பொலிஸாரின் உதவியுடன் அவரை வெளியேற்றியுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பேராயர் மல்கம் ரஞ்சித்  ஆகியோர் முஸ்லிம் மக்களுக்கு யாரும் அநீதி ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றள்ளது.

ஊடகவியலாளர் ஷாஜஹான் கட்டுவபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக தொடர்ச்சியாக செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டு வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை நீர்கொழும்பு பள்ளிவாசலுக்கு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை  வந்தபோதும் அதுதொடர்பான செய்திகளையும் படங்களையும் வெளியிட்டிருந்தார்.

ஜனாப் ஷாஜஹான் கடந்த 22 வருட காலமாக நீர்கொழும்பு பிராந்திய சுதந்திர ஊடகவியலாளராக பணியாற்றி வருபவராவார்.

1 comment:

  1. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சொக்கியமே ( இப்ப அவர்களின் நேரம்)

    ReplyDelete

Powered by Blogger.