May 08, 2019

முஸ்லிம் MP களுடன், இரவில் ACJU அவசர சந்திப்பு - வழிகாட்டல்கள் கூறப்பட்டு, ஒற்றுமை பற்றி வலியுறுத்தல்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் இன்று 08.05.2019ம் திகதி புதன் கிழமை இரவு 9.30 முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

சென்ற மாதம் நாட்டில் இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே இவ்வொன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அனைத்து முஸ்லம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இத்தாக்குதல்களை முஸ்லிம் சமூகம் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகவும், தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து குரல் கொடுப்பதாகவும் இக்கலந்துரையாடலின் போது தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலிற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் தலைமை தாங்கி தேவையான வழிகாட்டல்களை வழங்கிய அதே நேரம் ஒற்றுமையின் அவசியம் பற்றி வலியுருத்தினார். இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு சார்பாக 07 பேர் கலந்து கொண்டதுடன் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

5 கருத்துரைகள்:

To be honest, our 22 MPs and these clerics are part of the problem we face today. These MPs want to sit in their power until they die. They do not give or guide youths to get into politics. what they have done for the community except some accumulated wealth, power and money... some of them do not have skills to know what is going on to us. some of them have done nothing to stop our plight... Now, as for Clerics of ACJU they look as if they live in another planet. These clerics are good in copy cutting old legal schools that are not relevant today. they have been telling ladies to cover the face. now they are forced to ask them to uncover the face.. They have utterly failed to appreciate our social contexts and still like our MPS they want to have this ACJU until they die. Now. these people are having emergency Meeting. Good luck for them,,Muslims community will suffer in the hands of these people

MY DEAR POLTICIANS,HOW WAS THE MEAL.

நம் சமூகத்தை காட்டிக்கொடுப்பவர்களே அரசியல்வாதிகள் தான். இனத்துவேசம் இனிமேல் ஒருபோதுமே குறையப்போவதில்லை.
சமாதான,சங்ஹிதியாவ என்று சும்மா இனிமேலும் மேடைகளிலும் , அங்கும் இங்கும் கூவிக்கொண்டிருக்காமல். முஸ்லிம்களை ஒன்றுபடுத்த ஒரு உருதியான நிலைப்பாட்டில் இருக்கவேண்டும்.
கண்ட இடமெல்லாம் முஸ்லிம்கள் பீதி அடைந்துள்ளார்கள், முஸ்லிம்கள் சிறுபான்மை நாம் சிங்களவர்களுக்கு கட்டுப்படவேண்டும் இது அவர்களின் நாடு அது இது என்று முஸ்லிம்களை கோழைகளாக்காமல் அவர்களுக்கு தைரியமளிக்கக்கூடிய வார்த்தைகளை கூறுங்கள்.

முஸ்லிம்கள் எவ்வாறு இலங்கையில் குடியேறினார்களோ அவ்வாரே சிங்களவர்களும் இங்கு வந்தார்கள். என்ன அவர்கள் எங்களுக்கு முன் வந்தார்கள். எங்களை சவுதிக்கு ,மொரோக்கோவிற்கு திரும்பி போகச்சொன்னால் அவர்களை அவர்கள் வந்த நாடான இந்தியா,நேபாலத்திற்கு திரும்பி போகச் சொல்லவேண்டும்.
எங்களை இதுகாலவரையிலும் பதிவி ஆசைக்காக காட்டிக்கொடுத்த அரசியல்வாதிகள் இனிமேல் சிங்களவர்களிடத்தில் உங்கள் பருப்பு வேகாது என்று தெரிந்து அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நடந்து கொள்ளவேண்டும்.
Rizvi Mufthi அவர்களும் முஸ்லிம்களின் நலன் கருதி தலைமைத்துவத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும் அல்லது வரும்காலத்தில் சரியான ஒருவரை தலைவராக நியமித்தல் நன்று.
Amhar Moulavi அவர்கள் நல்ல திறமை உள்ளவர் என்றாலும் காலையில் பௌத்த பாடத்தைத்தான் நாங்கள் முதலில் கற்பிப்போம் என்ற உடன் அவரின் மீதிருந்த நம்பிக்கை இல்லாமலே போயிற்று.
இயக்கவாத மடையர்கள் , காடையர்கள் இனிமேலும் இயக்கங்களுக்கு சொம்பு தூக்குவதை நிறுத்திவிட்டு இஸலாத்தை, அதன் தூன் ஒற்றுமையை நிலைநாட்ட பாடுபடவேண்டும்.
உங்கள் இயகங்களின் சுயநலவாத தலைவர்களை பின்பற்ற வேண்டாம். அவர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நலவு செய்கிறார்கள் என்று கூறிக்கொண்டு நம் சமூகத்தை கூருபோட்டு ,பலவீனமான சமூகமாக மாற்றியதுதான் உண்மை.

மாஷா அல்லாஹ் இதுதான் வெற்றி ஒற்றுமை...இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் அதாவது இலங்கை முஸ்லிங்களுடைய சொத்துக்கள் நீங்களுகதான்

For nearly a century Muslims were called Marakkalaya,
Hambaya and for decades Thambiya was added and now
there will be a new addition " Thrusthawadiya".Can
any meeting of anyone stop this ? This country is
living by insulting each other and the bombing incident
was another opportunity for such people.Srilankan
politics is racist and that is the main cause of all
evils.

Post a Comment