May 03, 2019

மக்களை கொன்று குவித்துவிட்டு சஹ்ரான் சொர்க்கத்திற்கு சென்றுள்ள நிலையில், அவரது மனைவியை பார்ப்பதற்கு மன்சூர் Mp வைத்தியசாலை சென்றுள்ளார்

மக்களை கொன்று குவித்து விட்டு சஹ்ரான் சொர்க்கத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரது மனைவியை பார்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இவ்வாறு செயற்படுபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்காமையினால் அரசாங்கம் மீது பேராயர் போன்றவர்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரச நிர்வாக கட்டமைப்பிற்குள்ளும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் செயற்பட்டுள்ளன. ஆகவே அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து கண்காணிப்பதோடு நாடளாவிய ரீதியில் காணப்படும் தொளஹீத் ஜமாத் பள்ளிவாசல்களை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாம் மத அமைச்சு என்றில்லாது அனைத்து மதங்களையும் ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு - 10 , டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தயாசிறி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

(லியோ நிரோஷ தர்ஷன்)

6 கருத்துரைகள்:

வணக்கத்குறிவன் அல்லாஹு ஒருவன்மட்டும்தான் மஹம்மது நபி கடைசி தூதர் என்று விசுவாசித்தவர்கள் அனைவரும் தௌஹீத் வாதிகளே

ஆனால் அவர்களில் கெட்டவர்களும் இருக்கின்றார்கள் நல்லவர்களும் இருக்கின்றார்கள்

இவரின் இனத்துவேசத்தின் உணர்வுகள் சில சாதுகளையும் பின் தள்ளிவிட்டது! இவர் போன்றவர்கள் நாட்டின் பொறுப்புதாரிகளாக இருப்பது நாட்டின் வளர்சிக்கு சவாலாக இருக்கின்றது

ஐஸ்ஐஸ் முகமூடியின் திரையின் பின்னால் இயங்கும் ஒரு அடிவருடிகளுள் இவரும் ஒருவராகத் தென்படுகின்றது. இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒரு விடயத்தை நன்கு புரிந்து ஒற்றுமையாகச்செயற்பட்டு இந்த மாபெரும் சூழ்ச்சியை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என கூட்டாகத் திட்டமிட்டு துரிதமாகச் செயற்படாது இன்னும் ஆழந்த உறக்கத்தில் மூழ்கிக்கிடந்தால் அழிவும் இந்த சமூகம் விரட்டவிரட்ட கொல்லப்பட்டு இனம் முழுவதும் அழிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த மாபெரும் சூழ்ச்சியின் பெயர் தான் ஐஸ்ஐஸ்,சஹ்ரான், சிலை உடைத்தல், முஸ்லிம் வீடுகளில் புகுந்து அவர்களிடம் தற்பாதுகாப்புக்காக தங்களிடம் வைத்திருக்கும் ஆக க் குறைந்த தற்பாதுகாப்பு உபகரணங்களையும் திட்டமிட்டு இப்போது பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இதுவரை எந்த பாதுகாப்புப் படைகளும் ஊடுருவோ தீவிர விசாரணைசெய்யவோ இல்லை. இப்போது அந்த நாடகமும் அரங்கேருகின்றது. முஸ்லிம்களிடம் எந்தவித பாதுகாப்பு உத்திகளும் இல்லை என உறுதிசெய்யப்பட்டுக்கொண்டிருப்பது மிகப்பெரிய தாக்கத்துக்கு தயாராகுங்கள் என்ற ஆபத்து மணியோசை கேட்கிறது.

Thuweesam thuweesam nalla pesu.
Allah oruthen irikiraan.
Ween pali poduraya.?????

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் மன்சூருக்கு என் பாராட்டும் ஆதரவும். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யுத்தகாலத்திலும் தங்கள் கடமையை செய்ய பின்னின்றதில்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கூட ஏன் என்று கேட்க்க முடியாத வகையில் முஸ்லிம்களை தனிமைப்படுத்தல் ஆபத்தானது. இது இளைஞர்களை வென்றெடுக்கும் அரசியல் அல்ல. இது இளைஞரைத் தீவிரவாதத்தின்பால் தள்ளும் அரசியலாகும். எல்லா முஸ்லிம் அரசியல் வாதிகளும் மக்களோடு நிறக்க வேண்டிய தருணம் இதுதான்.

தயாசிறி, அசாட்சாலி,ரஞ்ஞன் ராமனாயக்க போன்று இன்னும் பல நல்லாட்சியில் நல்லவர்களென்று நம்பப்பட்டோரின் உண்மை முகங்கள் இப்போ வெளிச்சத்தில் நன்றாக தெறிகிறது. ஆடுபவர் எல்லாம் ஆடலாம், இதுவொறு இடைவேளைப்பகுதி, உங்களுக்கான தேர்தல் நேரம் வரும்போது மக்கள உங்களை தீ ர் மானி ப் பார் கள்.

Post a Comment