Header Ads



இந்நாட்டில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களும், தீவிரவாதத்தை எதிர்க்கின்றனர் - புத்தளம் நகரபிதா KA பாயிஸ்

புத்தளம் நகருக்குள் நல்லிணக்கைத்தை உறுதிபடுத்தும் முகமாக புத்தளம் நகர பிதா கே ஏ பாயிஸ் அவர்களினால் இப்தார் நிகழ்வொன்று புத்தளம் நகர சபையின் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது அங்கு புத்தளம் நகர பிதா கே ஏ பாயிஸ் அவர்கள் உறையாற்றிய போது, 

ஒவ்வொறு வருடமும் நாம் தொடர்ந்து நடாத்தி வரும் இப்தார் நிகழ்வை விட இம்முறை நடாத்தும் இந்த இப்தார் நிகழ்வானது முன்னைய காலங்களை விடவும் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக நாம் கருதுகின்றோம்.

காரணம் என்ன வென்றால் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரன சூழ் நிலையினால் இல்லாமலாக்கப்பட்டிருக்கும், சகோதரத்துவம், நல்லிணக்கம், சக வாழ்வு என்பவற்றை மீண்டும் நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டி இருக்கின்றது.

ஆகவேதான் கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட இப்தார் நிகழ்வுகளை விடவும் இந்த இப்தார் நிகழ்வை முக்கியம் வாய்ந்ததாக நான் கருதுகின்றேன்.

நம் மீது isis என்ற பயங்கர வாதிகளின் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதும் எங்களுக்குள் இருந்த சகோதரத்துவம், நல்லிணக்கம் என்பன இன்று உடைத்தெரியப்பட்டுள்ளது.

ஆனால் இந்த isis பயங்கரவாதிகளின் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பதை பற்றி தற்போது நாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டாலும் கூட,

இந்த பயங்கரவாதத் தாக்குதன் ஏன் நடாத்தப்பட்டது, எதற்காக நடத்தப்பட்டது என்பதினைப் பற்றி மதிப்பிற்குறிய மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் சரியாக தெளிவாக தெறிந்துக் கொண்டதினால் முழு நாட்டிற்கும்,நாட்டு மக்களுக்கும் அறுவுருத்தலை வழங்கினார்,தாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதினைப் பற்றிய தெளிவை வழங்கினார்.

அதன் பிற்பாடு தற்போதுதான் பொது மக்களும், ஏன் அரசியல் வாதிகளும் கூட என்ன நடந்திறுக்கின்றது என்பதினைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெற்று வருகின்ரனர்.

ஆகவேதான் நாம் இன்று வரை கூறுகின்றோம் இந்த தீவிர வாதத் தாக்குதலுக்கு குறிப்பிட்ட ஒரு சிறு குழுவினரே காரணமாக இருந்தை தவிர, முழு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் அல்ல. இந்த நாட்டில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களும் தீவிர வாதத்தை எதிர்க்கின்றனர்.

இந்த நாட்டிற்கு வெளியில் இருக்கும் ஒரு சில சக்திகளுக்கு இந்த நாடு தேவைப்பட்டிருக்கின்றது. ஆகவேதான் இஸ்லாத்தின் பெயரின் இந்த பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் இன்று எம்மிடம் இருந்த சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் இல்லாமலாக்கப் பட்டு புதுப் புதுப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே இந்த நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைவருக்கும், இந்த புத்தளம் நகரின் நகர பிதா என்ற வகையில், மீண்டும் இந்த புத்தளம் நகரை பலைய நிலைக்கு மாற்றியமைக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அழைப்பொன்றையும் விடுத்தார்.

மேலும் கடந்த காலங்களில் வடமேல் மாகாணத்தில் இடம் பெற்ற அசம்பாவிதங்களின் போது, அது புத்தளம் நகருக்குள் பரவ விடாது தடுக்க இரவும் பகலுமாக செயற்பட்ட மதிப்பிற்குறிய பொளத்த மதர் தலைவர்களுக்கும், இன்னும் இங்கு வந்திருக்கின்ற மத்தத் தலைவர்களும், விசேடமாக இரவிலும் விழித்திருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூம்முரமாக ஈடுபட்ட புத்தளம் பொலிஸ் தலைமை அதிகாரிகளுக்கும், இரானுவத் தளபதி அவர்களுக்கும், விமானப்படை அதிகாரிகளுக்கும் விசேட நன்றிகளையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அனைத்து இன மதத் தலைவர்களும், புத்தளம் மாவட்டச் செயளாலர் சித்ரானந்த அவர்களும்,புத்தளம் நகர சபையின் உப நகர பிதா, நகரசபையின் உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச சபையின் தலைவர்கள், மற்றும் புத்தளம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மற்றும், புத்தளம் இரானுவத் தளபதி, சட்டத்தரணிகள், கல்வியியளாளர்கள் புத்தி ஜீவிகள், முச்சக்கர் வண்டி சங்கத் தலைவர்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

1 comment:

  1. இந்த தலைப்பு சுத்த பொய்

    ReplyDelete

Powered by Blogger.