May 14, 2019

கட்டுப்படுத்தப்படாவிட்டால் இலங்கை, ISIS இன் கேந்திரமாக மேலெழும் சாத்தியம் - ரொஹான் குணரட்ன

கிழக்கில் இஸ்லாமிய அரசை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், கல்வியினூடாக வழி நடத்தப்படும் தீவிரவாதிகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸின் கேந்திரமாக மேலெழும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான நிபுணரும், சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியருமான ரொஹான் குணரட்ன இந்த விடயத்தை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கேள்வி - தமிழீழ விடுதலைப் புலிகளை நாடு தோற்கடித்திருந்தது. இதேவேளை பிராந்தியத்தில் ஏனைய முஸ்லிம் நாடுகளை விட்டு விட்டு இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஊடுருவ முடியுமென எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே தெற்காசியாவில் இலங்கையை களமாக உருவாக்கும் திட்டத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் கொண்டுள்ளது ஏன்?

பதில் - விடுதலைப் புலிகளுடனான போரை தயார்ப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது. கல்வி, பயிற்சி, அவர்கள் விருத்தி செய்திருந்த பாதுகாப்பு என்பவற்றினூடாக இது மேற்கொள்ளப்பட்டது.

அச்சுறுத்தல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும் வரை வேட்டையாடும் மனோபாவத்தை இலங்கைத் தலைவர்கள் கொண்டிருந்தனர். அதனையே நாங்கள் பாதுகாப்பு தொடர்பான மனோ பாவமென குறிப்பிடுகின்றோம்.

முன்னைய அரசாங்கம் பயங்கரவாதிகளை கைது செய்தல் அல்லது கொல்லுதல் மூலமும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களை தீவிரவாதிகளை கைது செய்ததன் மூலமும் அச்சுறுத்தலை இல்லாமல் செய்தது. அதன் பின்னர் கைது செய்தவர்களுக்கு அரசாங்கம் புனர்வாழ்வளித்தது.

தீவிரவாதிகளை அரசாங்கம் கைது செய்யாது இருக்கும் வரை பயங்கரவாதிகளாகிவிடுவர்.

நலிந்த நிலையிலுள்ள முஸ்லிம்களை அடிப்படைவாதத்திற்கு உட்படுத்தல், சமூகங்களுக்கு இடையிலான மத ரீதியான சமாதானத்தை குழப்புதல் என்பனவற்றை ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டமிட்டு கிழக்கிலங்கையில் கலிபேற் (இஸ்லாமிய அரசு) மாகாணமொன்றை உருவாக்க அது திட்டமிட்டது.

கல்வியினூடாக வழிநடத்தப்பட்டும் தீவிரவாதிகள் கடுமையான சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிடில் ஐ.எஸ்.ஐ.எஸ். இலங்கையில் வளர்ச்சியடைந்துவிடும். இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் இன் கேந்திரமாக மேலெழும்.

10 கருத்துரைகள்:

Professor did a very good research in this subject. No body did not do research like this in the world. Sri Lankan government must recommend his name to UN organization to give a Nobel prize or an international reward for his excellent research.

This comment has been removed by the author.

Muslims want support ISIS , I think you got it wrong. ISIS is
Paid thugs crated by some intelligent service. Majority Muslim not support
The thugs rather they help to eradicate the thugs. And we will not support
Any act of killing in the name of Islam by this thugs.
My request to Muslim please call this ISIS is PAID THUGS. not Islamic extrist or any
Other word relate Islam . Because they are not Muslim. Special in public
Gathering and media.

First advice your buddhist dog community to keep calm basted.

ரொஹான் குணரட்ன பொய் சொல்கிறார். அறிஞர்கள் பொய்சொல்லக்கூடாது. சமாதான பேச்சுவார்த்தை காலத்திலேயே மூதூர் ஓசாமா அணி தொடர்பாக தகவல் திரட்டபட்டது. பின் பின் தீவிரவாதிகள் வஹாபிகள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் கருத்தரங்குகள் நடந்தன. அவர் எல்லாம் அறிந்தவர். அறிஞர்கள் பொய் சொல்லக்கூடாது. தமிழருக்கு எதிராக பயன்படுத்தி விட்டு போர் முடிந்ததும் தேர்தலுக்கு முன் ஜெ.வி.பியை அழித்ததுபோல அழிக்க கோத்தா திட்டம் தீட்டினார் அல்லவா? பயங்கர வாதத்துடன் சம்பந்தப்பட்டவன் ஓரிரு விரிவுரைக்குப் போனவன் தேனீர் வாங்கிக் கொடுத்தவன் என நீண்ட பட்டியல் உள்ளதல்லவா? நல்ல வேழை ஆட்ச்சி மாற்றத்தால் இளைஞர்களைத் தேடி அழிக்கும் படுகொலைத் திட்டம் நிறைவேறவில்லை.

How he teach the pupils if his mind like this..? Oh my Godness!!!
This is the world now....not the correct person in the correct seat

Him self named as terrorism expert?

Professor ...
Your target is that mus
lims's education must be
Destroyed . And also
Pl.just talk your
Society terrorism ..

Dear professor who is the wright ISIS may I know
ISIS - Islamic state of Iraq and Syria OR
ISIS - Israeli Secret and Intelligent shouldgers

How much did you pay for your professor post?

Post a Comment