May 15, 2019

பிரத்­தி­யே­க­மான முஸ்லிம் பகு­திகள் இருக்­கக்­கூ­டாது, சஹ்ரான் உயி­ருடன் இல்லை, ISIS 95 வீதம் அழிக்கப்பட்டுவிட்டது

இஸ்­லா­மிய அர­சுக்கு இலங்­கையில் இனி­மேலும் பெரி­ய­ள­வி­லான தாக்­கு­த­லொன்றை நடத்­தக்­கூ­டிய ஆற்றல் இல்லை. நாட்­டி­லுள்ள அந்த இயக்­கத்தின் வலை­ய­மைப்­புக்­களில் 95 சத­வீ­த­மா­னவை ஈஸ்டர் ஞாயிறு அனர்த்­தத்­திற்குப் பிறகு பாது­காப்புப் படை­க­ளினால் நிர்­மூலம் செய்­யப்­பட்­டு­விட்­டது என்று பிர­பல பயங்­க­ர­வாத எதிர்ப்பு விவ­கார நிபு­ண­ரான பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரத்ன தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் உள்ள சங்­ரிலா ஹோட்­டலில் நடத்­திய தாக்­கு­தலில் போது இஸ்­லா­மிய அரசின் இலங்கைத் தொடர்­பா­ள­ரான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலை­வ­ரென்று கூறப்­படும் சஹ்ரான் ஹாசிம் பலி­யா­கி­விட்­டதை உறு­திப்­ப­டுத்­திய பேரா­சி­ரியர் குண­ரத்ன, இலங்­கையில் பின்­பற்­றப்­பட்டு வரு­கின்ற உள்ளூர் – பாரம்­ப­ரிய இஸ்­லா­மிய மார்க்­கத்தை ஆத­ரித்து உற்­சா­கப்­ப­டுத்­து­கின்ற அதே­வேளை அர­சாங்கம் சகல தௌஹீத் அமைப்­புக்­க­ளி­னதும் கோட்­பா­டு­க­ளையும், நடை­மு­றை­க­ளையும் நுணுக்­க­மாகப் பரி­சோ­தனை செய்ய வேண்டும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

சிங்­கப்­பூரில் இருக்கும் பேரா­சி­ரியர் குண­ரத்ன செவ்­வாய்­கி­ழமை கொழும்பு ‘பைனான்­ஸியல் டைம்ஸ்’ பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கைப் பாது­காப்பு அமைச்சின் சிந்­தனை அமைப்­பான தேசிய பாது­காப்பு ஆய்­வு­க­ளுக்­கான நிறு­வ­னத்தை அமைப்­ப­தற்­கான வரை­வுத்­திட்­டத்தை எழு­தி­ய­வ­ரான அவர், சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் தொடர்பில் சான்று ஆதா­ரத்­துடன் அபிப்­பி­ரா­யங்­களை வெளி­யி­டு­வதில் பெய­ரெ­டுத்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அவ­ரது பேட்­டியின் சுருக்கம் வரு­மாறு :

சஹ்ரான் உயி­ருடன் இல்லை

ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று சங்­ரிலா ஹோட்டல் தாக்­கு­தலில் சஹ்ரான் ஹாசீம் கொல்­லப்­பட்­டு­விட்டார். இஸ்­லா­மிய அரசின் இலங்கைக் கிளையின் தலை­வ­ரான அவர் மர­ணிப்­ப­தற்கு முன்­ன­தாக அபூ­பக்கர் அல் – பக்­தா­திக்கும், அவரால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்பட்ட இராச்­சி­யத்­திற்கும் விசு­வா­சத்தைத் தெரி­விக்கும் வழக்­க­மான சத்­தி­யப்­பி­ர­மா­ணத்தைச் செய்து கொண்டார். குண்டை வெடிக்க வைத்து சஹ்ரான் தற்­கொலை செய்­து­கொண்டார் என்­பது குறித்து எவரும் மறு­த­லிக்கத் தேவை­யில்லை.

இலங்­கையில் முதன்­மு­தலில் மேற்­கொள்­ளப்­பட்ட இஸ்­லா­மிய அரசின் தாக்­கு­த­லி­லேயே சஹ்ரான் தற்­கொலை செய்து கொண்­டி­ருப்­பாரா என்று கேள்­விகள் எழத்தான் செய்­கின்­றன. இஸ்­லா­மிய அரசின் கோட்­பாடு பிறரைக் கொலை செய்­வதும், தாம் சாவ­துமே. இஸ்­லாத்தில் நம்­பிக்­கை­யற்ற ஒரு­வரைக் கொலை செய்­து­விட்டு சாவதன் மூலம் சொர்க்­கத்­திற்குப் போகலாம் என்று நம்­பக்­கூ­டி­ய­தாக இஸ்­லா­மிய அரசு இயக்­கத்­த­வர்­க­ளுக்குப் போதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்கை இஸ்­லா­மிய அரசின் தலைவர் என்ற வகையில் சஹ்­ரானின் கோட்­பாடு முதல் சந்­தர்ப்­பத்­தி­லேயே சாவ­தா­கவே இருந்­தது. மேற்கு நாட்­ட­வர்­க­ளையும், முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளையும் சண்­டை­யிட்டுக் கொலை செய்­வதன் மூலம் அல்­லாஹ்வின் வெகு­மா­னத்தைப் பெறலாம் என்று சஹ்ரான் தனது எழுத்­துக்கள், பிர­சங்­கங்கள் மூலம் முஸ்­லிம்­க­ளுக்குப் போதித்­தி­ருக்­கிறார்.

சஹ்­ரானின் இலக்கு

முஸ்­லிம்­க­ளுக்கும், முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கும் இடை­யே­யான பிணைப்­புக்­களை உடைத்­தெ­றிந்து வேற்­று­மை­களை வளர்த்து கல­வ­ரத்தை மூள வைப்­பதே சஹ்­ரானின் இலக்­காகும். இஸ்­லா­மிய அரசு இயக்கம் முஸ்லிம் சமூ­கத்­திற்குள் ஊடு­ரு­வி­விட்ட நிலையில் பயங்­க­ர­வா­தி­களின் கைக­ளுக்குள் முஸ்லிம் சமூ­கத்தைத் தள்­ளி­வி­டாமல் அவர்­களை வென்­றெ­டுப்­ப­தற்கு தேடுதல் நட­வ­டிக்­கை­களை மிகவும் அவ­தா­ன­மாக நடத்த வேண்டும்.

சிரி­யா­விலும், ஈராக்­கிலும் பாரம்­ப­ரிய யுத்­த­மொன்றில் அதன் பிராந்­தி­யங்­களை இழந்­து­விட்ட இஸ்­லா­மிய அரசு இயக்கம், அதன் தலைவர் அபூ­பக்கர் அல் – பக்­தாதி, அவ­ருடன் இணைந்த ஒவ்­வொரு முக்­கிய தலை­வரும், போரா­ளியும் கைது செய்­யப்­படும் வரை அல்­லது கொல்­லப்­படும் வரை அதன் மையப்­பி­ராந்­தி­யங்­களில் தோற்­க­டிக்­கப்­ப­டா­த­தா­கவே தொடர்ந்­தி­ருக்கும். அந்த இயக்கம் அதன் மைய வலுவை இழந்­து­விட்­டது. ஆனால் முற்­று­மு­ழு­தாக ஒழிக்­கப்­பட்­டு­விட்­டது என்­றா­கி­வி­டாது.

இலங்­கையில் ஈஸ்டர் ஞாயி­றன்று இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் மத்­திய கிழக்கில் ஈராக், சிரியா எல்­லை­யோ­ரத்தை மையப்­பி­ராந்­தி­ய­மாகக் கொண்டு செயற்­பட்டு வந்த இஸ்­லா­மிய அரசு இயக்கம் அதற்கு அப்பால் பல்­வேறு புற எல்லைப் பிராந்­தி­யங்­க­ளிலும் வளர்ந்­தி­ருக்­கின்­றது என்­ப­தையே வெளிக்­காட்­டு­கின்­றது.

ஏப்ரல் 30 ஆம் திகதி இஸ்­லா­மிய அரசு இயக்­கத்தின் ஊடகப் பிரி­வினால் வெளி­யி­டப்­பட்ட அல் – பக்­தா­தியின் வீடியோ, அந்த இயக்கம் அதன் மையக்­க­ளத்தில் சுருங்­கிப்­போய்­விட்­டது என்­ப­தையே வெளிக்­காட்­டு­கின்­றது. ஈராக்­கிலும், சிரி­யா­விலும் இஸ்­லா­மிய அரசு இயக்கம் தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்­ட­தாக கடந்த மார்ச் மாதத்தில் அமெ­ரிக்கா செய்த பிர­க­டனம் அவ­ச­ரப்­பட்டுச் செய்த ஒன்­றாகும். இலங்­கையும் இலங்­கை­யர்­களும் ஒரு பாடத்தைப் படித்­தாக வேண்டும். பயங்­க­ர­வா­தி­களைப் பிடிப்­பதோ அல்­லது கொலை செய்­வதோ போது­மா­ன­தல்ல. இஸ்­லா­மிய அரசு உறுப்­பி­னர்­களின் கோட்­பா­டு­க­ளுக்கு எதி­ரான வலு­வான நட­வ­டிக்கை தேவை. இந்த இயக்­கத்தின் தலை­மைத்­து­வத்தை ஒழித்­துக்­கட்­டிய பின்னர் அவர்­களின் கோட்­பாட்­டுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களே இறு­தியில் அவர்­க­ளுக்குத் தோல்­வியைத் தரும்.

தெற்­கா­சி­யாவில் இஸ்­லா­மிய அரசின் செயற்­பா­டுகள்

இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்கள் இந்தப் பிராந்­தி­யத்­திற்கு அச்­சு­றுத்­தலைத் தோற்­று­விக்­குமா? அவர்­களின் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் ஆசியப் பிராந்­தி­யத்­திற்கு நகர்த்­தப்­பட்­டு­விட்­ட­னவா? என்று பேரா­சி­ரியர் குண­ரத்­ன­விடம் நேர்­கா­ணலில் கேட்­கப்­பட்ட போது, அவர் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார்.

இஸ்­லா­மிய அரசு இயக்­கத்தின் அச்­சு­றுத்­தலில் மூன்று முக்­கிய மையங்­களில் ஆசி­யாவும் ஒன்­றுதான். ஈராக்­கிலும், சிரி­யா­விலும் அந்த இயக்கம் பிராந்­தி­யங்­களின் கட்­டுப்­பாட்டை இழந்த பிறகு அது கவ­னத்தைக் குவித்த நான்கு பிராந்­தி­யங்­களில் ஒன்­றாக ஆசியா விளங்­கு­கின்­றது. உலக முஸ்லிம் சனத்­தொ­கையில் 63 சத­வீ­த­மானோர் ஆசி­யாவில் வாழ்­கின்ற நிலையில் அச்­சு­றுத்தல் ஆசி­யா­விற்கு நகர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. மத்­திய கிழக்கு, ஆபி­ரிக்கா மற்றும் ஐரோப்­பாவின் காக்­கசஸ் மலைப் பிராந்­திய நாடு­களில் இஸ்­லா­மிய அரசு இயக்கம் அதன் பிர­சன்­னத்தைப் பேணு­கின்ற போதிலும் ஆசியா குறிப்­பி­டத்­தக்­க­தொரு கள­மாக வெளிக்­கி­ளம்­பி­யி­ருக்­கின்­றது.

மத்­திய ஆசி­யா­விலும், வட­கி­ழக்கு ஆசி­யா­விலும் இஸ்­லா­மிய அரசின் அச்­சு­றுத்தல் மிகவும் இறுக்­க­மாகக் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்ட அதே­வேளை, ஆசி­யாவில் அச்­சு­றுத்­தலின் ஈர்ப்பு மைய­மாக தெற்­கா­சி­யாவும், தென்­கி­ழக்­கா­சி­யாவும் இருக்­கின்­றன. தெற்­கா­சி­யாவில் ஆப்­கா­னிஸ்­தா­னிலும், தென்­கி­ழக்­கா­சி­யாவில் பிலிப்­பைன்­ஸிலும் இஸ்­லா­மிய அரசு இயக்கம் பிராந்­தி­யங்­களைக் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கின்­றது. தெற்­கா­சி­யாவில் இஸ்­லா­மிய அரசு இயக்­கத்தை மைய­மாகக் கொண்ட அச்­சு­றுத்தல் ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் மற்றும் இந்­தி­யாவில் மிகவும் முனைப்­பா­ன­தாக இருக்­கின்­றது. அதே­போன்று தென்­கி­ழக்­கா­சி­யாவில் அந்த இயக்­கத்தை மைய­மாகக் கொண்ட அச்­சு­றுத்தல் பிலிப்பைன்ஸ், இந்­தோ­னே­சியா, மலே­சியா ஆகிய நாடு­களில் முனைப்­பா­ன­தாக இருக்­கின்­றது. ஈஸ்டர் ஞாயிறு இலங்கைத் தாக்­கு­தல்கள் இலங்­கை­யிலும், மாலை­தீ­விலும், தென்­னிந்­தி­யா­விலும் இஸ்­லா­மிய அரசு இயக்கம் அதன் மத்­திய தலை­மைத்­து­வத்­துடன் தொடர்­பு­பட்ட வகையில் வலை­ய­மைப்பு ஒன்றை இர­க­சி­ய­மாக அமைத்­து­விட்­டது என்­ப­தையே காட்­டு­கின்­றது.

பௌத்த தலங்கள் மீதான தாக்­குதல் சாத்­தி­யப்­பாடு?

பௌத்த வணக்­கத்­த­லங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­ப­டக்­கூ­டிய சாத்­தியம் குறித்து கடந்­த­வாரம் புல­னாய்வு நிறு­வ­னங்கள் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்­தன. உங்­க­ளது அவ­தா­னிப்­பின்­படி மற்­றொரு ஒருங்­கி­ணைந்த தாக்­கு­த­லுக்­கான சாத்­தி­ய­முள்­ளதா என்று பேரா­சி­ரியர் குண­ரத்­ன­விடம் கேட்­கப்­பட்ட போது அவ­ர­ளித்த பதில் வரு­மாறு:

இலங்கை மண்ணில் பெரி­ய­ள­வி­லான தாக்­கு­த­லொன்றை நடத்­தக்­கூ­டிய ஆற்றல் இஸ்­லா­மிய அர­சிடம் இல்லை. இலங்­கையில் இஸ்­லா­மிய அரசின் வலை­ய­மைப்பின் 95 சத­வீ­த­மா­னவை ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­த­லுக்குப் பிறகு இலங்கைப் பாது­காப்புப் படை­களால் நிர்­மூலம் செய்­யப்­பட்­டு­விட்­டன. எஞ்­சி­யி­ருக்­கக்­கூ­டிய செயற்­பாட்­டா­ளர்­களும், ஆத­ர­வா­ளர்­களும் பிடிக்­கப்­பட்­டு­வி­டு­வார்கள் அல்­லது கொல்­லப்­ப­டு­வார்கள். காலம் தாம­தித்து என்­றாலும் அர­சாங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் தீர்க்­க­மா­ன­வை­யாக அமைந்­தி­ருந்­தன. இதே­வே­கத்தில் சுறு­சு­றுப்­புடன் அர­சாங்கம் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களைத் தொட­ரு­மாக இருந்தால், இலங்­கையில் தாக்­கு­தலை நடத்­தி­யதன் மூலம் தங்­க­ளுக்கு அழிவைத் தேடித்­த­ரக்­கூ­டிய படு­மோ­ச­மான தவ­றொன்றைச் செய்­து­விட்­டதை இஸ்­லா­மிய அரசு இயக்­கத்தின் தலை­வர்கள் புரிந்­து­கொள்­வார்கள். உறங்கிக் கொண்­டி­ருந்த பூத­மொன்றை இஸ்­லா­மிய அரசின் தாக்­கு­தல்கள் தட்­டி­யெ­ழுப்பி விட்­டன. ஈவி­ரக்­க­மற்ற ஒரு பயங்­க­ர­வாத சக்­தியை இலங்கைப் பாது­காப்புப் படைகள் தோற்­க­டித்­ததை முழு உல­கமும் அறியும்.

பிரத்­தி­யே­க­மான முஸ்லிம் பகு­திகள் இருக்­கக்­கூ­டாது

எதிர்­கா­லத்தில் படு­மோ­ச­மான பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்கு நீண்­ட­கால அடிப்­ப­டை­யி­லான விரி­வான அணு­கு­முறை ஒன்றை இலங்கை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இதில் முக்­கி­ய­மா­னது முஸ்­லிம்­க­ளுக்கு என்றோ அல்­லது எந்­த­வொரு சமூ­கத்­திற்­கு­மென்றோ பிரத்­தி­யே­க­மான நிலப்­ப­கு­திகள் என்று இருக்­கக்­கூ­டாது. இந்தப் பிரத்­தி­யேக தன்மை தீவி­ர­வா­தத்­திற்கு வழி­வ­குப்­பதைத் தடுப்­ப­தற்கு அர­சாங்கம் அதன் படை­யி­ன­ரையும், அவர்­களின் குடும்­பங்­க­ளையும் சகல சமூ­கங்­க­ளு­டனும் ஒன்­றி­ணைந்­த­தாக காத்­தான்­கு­டி­யிலும், அதே­போன்று கிரா­மங்கள், நக­ரங்­க­ளிலும் குடி­ய­மர்த்த வேண்டும். பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் தலை­வர்­க­ளுடன் சேர்ந்து செயற்­பட்டு அர­சாங்கம் நிலை­யான சமா­தா­னத்­தையும், நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு சக­வாழ்வுத் தந்­தி­ரோ­பாயம் ஒன்றை மிகவும் அவ­தா­ன­மாக வகுக்க வேண்டும்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள்

இஸ்லாமிய அரசின் கோட்பாட்டைப் பிரசாரப்படுத்துவதற்கு தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பை அனுமதித்ததில் முஸ்லிம் தலைவர்களுக்குக் குற்றப்பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று நேர்காணலில் கேட்கப்பட்ட போது, ‘முஸ்லிம்களின் வாக்குகள் தீர்க்கமானவை என்ற காரணத்தினால் அரசாங்கத் தலைவர்கள் இலங்கைக்குப் பொருத்தமற்றதான மத்திய கிழக்குப் பாணி இஸ்லாம் மார்க்கத்தை வெளிநாட்டு நிதியுதவியுடன் அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை முஸ்லிம் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை அலட்சியம் செய்து வந்திருக்கின்றார்கள்.

உள்ளூர் மற்றும் பாரம்பரிய இஸ்லாத்தை வெளிநாட்டுப் பாணி இஸ்லாம் பதிலீடு செய்யும் போது இலங்கையின் சமூகக் கட்டுமானம் குறிப்பாக முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கும் இடையிலான உறவுகள் சேதமடைகின்றன. மத விவகாரங்களை ஒழுங்கமைப்பதில் இலங்கை இழைத்த தவறு நாட்டின் தேசிய ஐக்கியத்தை பாரதூரமாக சேதப்படுத்திவிட்டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இரவோடிரவாக நடந்த ஒன்றல்ல. பாதுகாப்பு விவகாரங்களை விளங்கிக்கொள்ளாத இலங்கை அரசியல்வாதிகளின் மெத்தனப்போக்கின் காரணமாகப் பொறுப்பற்ற முஸ்லிம் தலைவர்களால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளே குண்டுத் தாக்குதல்களுக்குக் காரணமாக அமைந்தன” என்று குறிப்பிட்டார்.

8 கருத்துரைகள்:

இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களை பற்றியும் கொண்டுள்ள தவறான புரிதலின்பால் உண்டான ஆய்வும் தீர்வும்..

Allathulkum katanam ungal inawadam than

We could not find any research finding and facts from his research, he alluded something without any empirical evidences. He does not know about Islam and the contribution of the Muslim community to the social and economic development in Sri Lanka.

Professor didn't learn anything properly from the last 30 years of war. He is speaking with the outdated and failed hegemonic principles. A true academic must speak about accepting the other minorities as fellow citizens.

It is so sad that in multi-ethnic countries like Sri Lanka, the people at academic levels are promoting hegemonic thoughts among the majority peoples. And as one of the results of such, the state institutions are becoming increasingly functioning under the influence of such thoughts

it seems he wanted to see more minuwangoda like incidents...

but we love PEACE to all srilankans.

this writer once asked by CNN how he is getting his facts and he could not answer any of the questions. When they asked weather he has been to any countries at least once which he writes about wars the reply was negative. he is just gathering news and distributing again to masses.

Post a Comment