Header Ads



IS பயங்கரவாதம் இலங்கையில் உருவானதல்ல, அதனை ஒழித்துவிட முடியாது - சட்டத்தரணி ரவி ஜயவர்த்தன

தமிழீழ புலிகளின் இயக்கத்தை போன்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் இலங்கையில் உருவாகி, இங்கேயே அழியும் இயக்கமல்ல என சட்டத்தரணி ரவி ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பாதுகாக்கும் நாட்டை உருவாக்கும் மக்கள் இயக்கமான தேசிய வழி ஏற்பாடு செய்த ஊடக மாநாடு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்றுள்ளது.

இதில் வைத்து அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டதாக மேற்கோள்காட்டி அரச பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

நாட்டில் இவ்வளவு பாரிய அசம்பாவிதம் இடம்பெற்றுள்ள போதும் எவரும் சட்டத்தை கையிலெடுத்து செயற்படவில்லை. அது மக்களின் நற்பண்பையே காட்டுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத இயக்கம் இலங்கையிலேயே உருவாகி இலங்கையிலேயே ஒழிக்கப்பட்டது. இது போன்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தையும் ஒழிக்க முடியும் என சில தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் இங்கு உருவானதல்ல. அதனால் இங்கு அதனை ஒழித்து விட முடியாது. இஸ்லாமிய மதத்துடன் தொடர்புள்ள அடிப்படைவாதிகள் சிலர் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

1983இல் செய்த தவறினால் 30 வருடங்கள் கஷ்டப்பட நேரிட்டது. அதே நிலை இந்தப் பிரச்சினையிலும் எழ இடமளிக்க முடியாது. இந்தத் தாக்குதலுடன் நாட்டில் புதிய நிலைமையொன்று தலைதூக்கியுள்ளது.

இந்த பிரச்சினையிலிருந்து மீண்டெழுவதற்கு பல காத்திரமான யோசனைகளை எமது அமைப்பு முன்வைத்துள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் மாநாட்டில் இவற்றை வெளியிட இருக்கின்றோம் என சட்டத்தரணி ரவி ஜயவர்த்தன தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.