Header Ads



பொய்யை செய்தியாக்கிய திவயின - CID விசாரணை ஆரம்பம்

சிங்கள - பெளத்த தாய்மார் 4000 இற்கும் அதிகமானோருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாக கூறப்படும் தெளஹீத் ஜமாத் எனும் பயங்கரவாத அமைப்பின் பிரபல வைத்தியர் ஒருவரைக் கைதுசெய்ய விஷேட பொலிஸ் குழுவினர் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறி சிங்கள தேசிய பத்திரிகையொன்றில் வெளியிட்ட தலைப்புச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.  

குறித்த செய்தியில் உள்ள அனைத்து  உள்ளடக்கங்களும்  உண்மைத்தன்மை அற்றவை எனக் கூறிய பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர,  அத்தகையதொரு பொய்யான செய்தியை பிரசுரித்தமை தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

(எம்.எப்.எம்.பஸீர்)

4 comments:

  1. ஒரு தேசிய நாளிதழ் அதுவும் முதல் பக்க தலைப்புச் செய்தியாக இவ்வாறான பொய் செய்திகளை பிரசுரிக்கும் போது,மக்கள் இதை நம்பி வன்முரைகலில் ஈடுபட்டால் நிலமை எவ்வாறு இருக்கும்.தனியார் ஊடகங்கள் சில எம்மை நோக்கி இனவாதம் கக்குகின்ரது எனப் பார்த்தால்,அரச ஊடகங்களும் இப்போது ஆரப்பித்துட்டனவா இனவாதத்தை.muslim கலுக்கு எதிராக மிகப் பெரும் சதிவலை பல பக்கங்கலாலும் பின்னப்படுவதையே இப்படியான சம்பவங்களின் ஆரம்பம் எனலாம். Muslim மக்களே விழிப்போடு இனி நீங்கள் ஏனெனில் இனி ஒவ்வொரு நாட்களும் எமக்கு சோதனைக்காலமாக இறுக்கப் போகிறது.

    ReplyDelete
  2. This appalling news paper must be banned forthwith for inciting communal tension.

    ReplyDelete
  3. This appalling news paper must be banned forthwith for inciting communal tension.

    ReplyDelete
  4. இது முற்றிலும் உண்மையான செய்தியே. முஸ்லீம்களின் நீண்டகால யிட்டத்தில் இதுவும் ஒன்று. ஏன்டா இப்படி கேவலமான புத்தி உங்களுக்கு, இதெல்லாம் எவ்வளவு பெரிய பாவம்.
    நீங்களெல்லாம் ஒரு இனம் உங்களுக்கென்று ஒரு மதம் வேற.

    ReplyDelete

Powered by Blogger.